தன்னம்பிக்கை
Published:Updated:

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!
பிரீமியம் ஸ்டோரி
News
`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

ப்போ டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புறதைவிட, நம்ம ஃபீலிங்ஸை எல்லாம் `எமோஜி’க்களா அனுப்புறதுதான் ட்ரெண்ட். ஆனா, கொட்டிக்கிடக்கிற எமோஜிகள்ல, நாம ஒண்ணு நெனச்சு ஒரு எமோஜியைத் தட்டினா, சமயங்கள்ல அதோட அர்த்தம் வேற ஏதாவதா இருந்து குழப்பும். ஸோ, நாம அதிகமா பயன்படுத்துற சில `எமோஜி’க்களோட ‘ட்ரூ மீனிங்’கை பொதுநலம் கருதி இங்க வெளியிடறோம்...

கண்ணுல தண்ணி!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

அழறப்போ மட்டும்தான் கண்ணுல தண்ணி வருமா? செம ஜோக் ஒண்ணைக் கேட்கும்போதுகூட சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வரும்ல... அப்போ தட்டுங்க இந்த எமோஜியை!

ஹேப்பி எமோஜி!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

பல்லைக் காட்டுற இந்த எமோஜியைப் பார்த்து நிறையப் பேர் குழம்பிடுவாங்க. இதை ‘ஒழுங்கு’ காட்டுற எமோஜின்னுகூட சிலர் நினைப்பாங்க. ஆனா, கண்கள் மூடி இருக்கிறதால, இது ஹேப்பி எமோஜி ஜி!

வாயைக் காணோம்!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

மொகத்துல ரெண்டே ரெண்டு கண்ணு மட்டும் இருக்கும் இந்த எமோஜிக்கு என்ன அர்த்தம்னா... ‘கம்முனு கட’! ஏதாவது ரகசியம் வெச்சிருக்கிறப்போ யூஸ் பண்ண வேண்டிய எமோஜி இது!

‘நல்ல காலம் பொறந்துடுச்சு!’

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

மண்டை மேல ஒளிவட்டம் இருக்கிறதால, நிச்சயமா இது தேவதை எமோஜிதான். இதை நாம, ‘ரொம்ப நல்லவண்டா நீ’ அப்படீன்னும் எடுத்துக்கலாம். இல்ல, ‘நல்ல காலம் பொறந்துடுச்சு’னும் எடுத்துக்கலாம்!

ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

நண்பனுக்கும் காதலிக்கும் சண்டை வரும்போது, எந்தப் பக்கம் பேசுறதுன்னு தெரியாம வாயடைச்சு நிப்போம்ல, அதோட எமோஜி உருவம்தான் இது. `தட் அப்பாவி மொமன்ட்’டுக்கும் யூஸ் பண்ணிக்கலாம்!

ஒரே பஞ்ச்!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

குரூப்புல யாராச்சும் கடுப்பேத்திட்டே இருந்தா, மூஞ்சியிலேயே ஒரு பஞ்ச் கொடுக்க பலரும் யூஸ் பண்ணுற எமோஜி இது. ஆனா, இதோட உண்மையான அர்த்தம்... ‘வாழ்த்துகள்’. ஃப்ரெண்ட்ஸ் யாராவது ஜெயிச்சிட்டாங்கன்னா, கைகள மடக்கி இடுச்சிப்போம்ல... அந்த சிம்பல்தான் இந்த எமோஜி!

ஒரே கொயப்பமா கீதே!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

இது சோகமான எமோஜி இல்லை. குரூப்புல சிலர் ஜோக்குங்கிற பேர்ல மொக்கையா அள்ளி வீசும்போது, அந்த மொக்கைக்குக்கூட அர்த்தம் புரியாம முழிப்போம் பாருங்க... அப்போ யூஸ் திஸ் எமோஜி!

வேணாம்... வலிக்குது... அழுதுருவேன்!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

மாசத்துல ஏதாவது நல்ல நாளாப் பார்த்து, சிலர் அவங்க பிரியாணிக்கு நம்மளைக் கிடாவாக்கிடுவாங்க. அந்தக் கலாய்ல இருந்து தப்பிக்க அழுது சமாளிக்குறதைத் தவிர வேற வழியே இருக்காது. அதுக்கு முன்னாடி, ‘இப்புடியே போச்சுன்னா அழுதுருவேன்’னு சொல்லுறதுக்குதான் இந்த எமோஜி!

`நெட்’டணத்தில் பூதம்!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

நல்லா மீசையை முறுக்கிக் கிட்டு பி.இ.டி வாத்தியார் மாதிரியே இருக்கிற இந்த எமோஜி, ஜப்பான்கார பூதம். சில சமயங்கள்ல நாமும் பூதமா மாற வேண்டிய நிலைமை வரும். அப்போ யூஸ் பண்ணுங்க இந்த எமோஜியை!

அய்யய்யோ!

`எமோஜி’... அர்த்தம் தெரிஞ்சா சூப்பர்ஜி!

‘75% அட்டண்டன்ஸ் இல்லைன்னா ஹால் டிக்கெட் இல்லை’ன்னு எவனாவது நல்லவன் வந்து குரூப்புல செய்தி சொல்லுவான் பாருங்க, அப்ப காலேஜ் பக்கமே போகாத நாம கொடுக்க வேண்டிய ரியாக்‌ஷன்தான்... இந்த எமோஜி!

எமோஜிகள், எந்நாளும் வாழ்க!

ஜெ.விக்னேஷ்