தன்னம்பிக்கை
Published:Updated:

ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!

ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!

ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!

யணங்களுக்குக் கைகொடுக்கும் சில `ஆப்’கள் இங்கே. பாதுகாப்பு, முன் ஏற்பாடுகள், விடுதி புக்கிங்குகள், வழிகாட்டி என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு `ஆப்’. உங்களின் தேவைக்கு ஏற்ப டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ட்ரிப்இட்(TRIPIT)

ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!

நீங்கள் தங்க விரும்பும் ஹோட்டல், பயணம் செய்யும் ட்ராவல்ஸ் நிறுவனம் போன்றவற்றின் முழு விவரங்கள், புகைப்படங்களுடன் இதில் கிடைக்கும். அனைத்து இடங்களுக்கும் மேப் மூலம் உங்களுக்கு வழியும்காட்டிவிடும். உங்கள் கூகுள் கேலண்டருடன் இணைந்து நீங்கள் ட்ரிப்பில் இருக்கும்போது, முக்கியமான நிகழ்வுகளை அலர்ட் செய்துகொண்டே இருக்கும்!

டூரிஸ்ட்ஐ (TOURISTEYE)

ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!

நீங்கள் போக விரும்பும் இடத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சுற்றுலா தலங்களையும் லிஸ்ட்போட்டு கொடுக்கும். எந்த நேரத்தில், எந்த இடத்தைப் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்கும் என்ற அறிவுறுத்தலும் தரும். நீங்கள் க்ளிக் செய்யும் இடங்களுக்கான நுழைவுக் கட்டணம், அருகில் உள்ள ஹோட்டல்கள், ட்ராவல்ஸ் என சகல தகவல்களும் அடுத்த நொடி உங்கள் மொபைலில். முழு டூரையும் பிளான் போட்டுவிடலாம், இந்தச் செயலியின் உதவியுடன்!

ட்ராவல்கால்குலேட்டர்   (TRAVELCALCULATOR)

ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!

உங்கள் ட்ரிப்பின் பட்ஜெட் பிளானர் இது. நீங்கள் செல்லும் ஊர், அங்கு இருக்கும் சுற்றுலா தலங்கள், அங்கு பிரத்யேகமாகக் கிடைக்கும் ஷாப்பிங் பொருட்கள், போக்குவரத்துச் செலவுகள் என சூப்பர் பட்ஜெட் தயாரித்துக் கொடுக்கும். மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது கையில் ஃபாரின் கரன்ஸி தீர்ந்துவிட்டால், உங்கள் இந்திய வங்கி அக்கவுன்ட்டிலிருந்து பணம் மாற்றிக்கொள்ளவும் இது உதவும்!

ட்ரிப்அட்வைஸர் (TRIPADVISOR)

ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!

போக விரும்பும் இடத்தைச் சொல்லிவிட்டால் போதும்... அங்கே அப்போதுள்ள பருவநிலையைச் சுட்டிக்காட்டி அதற்குத் தகுந்தாற்போல நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்டை கொடுத்துவிடும். மேலும் பட்ஜெட்டை சொல்லிவிட்டால், உங்கள் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப விமான டிக்கெட், தங்கும் இடங்கள் என அதுவே ஒப்பீடுகள் செய்து பரிந்துரைகள் அளிக்கும்!

பேக்பாயின்ட் (PACKPOINT)

ஆப்ஸ் டவுன்லோட் பண்ணுங்க... அற்புதமான டூர் கிளம்புங்க!

நீங்கள் எங்கு செல்லவிருக்கிறீர்கள், அது தொழில் பயணமா, குடும்பப் பயணமா என்று செயலியில் உள்ளீடு தந்தால், குளிர், வெயில் என்று அங்கு நிலவும் தட்பவெப்பத்துக்கு ஏற்ப என்னென்ன வகையான ஆடைகள் எடுத்துச் செல்ல வேண்டும், அங்கு லாண்டரி வசதி எப்படி இருக்கும் என்பதன் அடிப்படையில் எத்தனை செட் ஆடைகள் எடுத்துச்செல்ல வேண்டும் என்பது வரை... அனைத்தையும் செக்லிஸ்ட் போட்டு கொடுக்கும் `ஆப்’ இது. அதை அப்படியே பேக் செய்துகொண்டு கிளம்ப வேண்டியதுதான்!