தன்னம்பிக்கை
Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
News
கேபிள் கலாட்டா!

‘‘இந்த வருஷக் கடைசியில் எனக்கு டும் டும் டும்!’’

கேபிள் கலாட்டா!

ன் எதார்த்த பேச்சாற்றலால் நிகழ்ச்சித் தொகுப்பு, சீரியல் என்று அழுத்தமான அங்கீகாரம் பெற்றுவருகிறார், சரண்யா குமார்.

‘‘எங்க அப்பா - அம்மா ரெண்டு பேரும் பழம் விற்கிறாங்க. ரொம்பவே ஏழ்மையான குடும்பம். எனக்கு மீடியா ஆசை. பி.காம் முடிச்சுட்டு ‘மூன் டி.வி’யில `விஜே' ஆனேன். குறைவான சம்பளத் துல குடும்பத்தையும் பார்த்துட்டு, கரஸ்ல எம்.பி.ஏ-வும் படிச்சேன். தொடர்ந்து சன் டி.வி ‘தேவதை’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. கேப்டன் டி.வி-யில் நான் தொகுத்து வழங்கின ‘இது நம்ம ஆளு’ நிகழ்ச்சி, எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. இப்போ ஜெயா, ஜெயா மேக்ஸ் சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாவும், சன் டி.வி யில் ‘கல்யாணப்பரிசு’, சீரியல்ல நடிச்சுட்டும் இருக்கேன். `இ.எம்.ஐ' சீரியல்ல கமிட் ஆகியிருக்கேன். தவிர, ‘ஷாஷா’னு ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்திட்டு இருக்கேன். மீடியாவுக்கு வந்த இந்த நாலு வருஷத்துல, என் உழைப்பால குடும்பத்தை கொஞ்சம் கொஞ்சமா நிமிர்த்திட்டு வர்றேன். இந்த வருஷக் கடைசியில எனக்குக் கல்யாணம் ஆகப்போகுது. மாப்பிள்ளைப் பையன், சாஃப்ட்வேர் இன்ஜினீயர். எல்லோரும் வாழ்த்துங்க!’’ 

கல்யாண சாப்பாட்டுக்குக் காத்திருக்கோம்!

ஸ்மார்ட் வில்லன் ஷியாம்!

கேபிள் கலாட்டா!

டனம், நடிப்பு, குறும்படம் என கலக்குகிறார் நாதன் ஷியாம்.

‘‘கலா, ஜெயந்தி மாஸ்டர்ஸ்கிட்ட டான்ஸ் கத்துகிட்டேன். சில மீடியா ஃப்ரெண்ட்ஸால சீரியல் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, கல்லூரிப் படிப்பை முடிக்கிறதுக்காக அதை பிரேக் பண்ணிட்டேன். காலேஜ் முடிச்சதும், மறுபடியும் சீரியல் என்ட்ரி. இப்போ விஜய் டி.வி ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல்ல என்னோட ‘அசோக்’ நெகட்டிவ் கேரக்டருக்கு நல்ல ரீச். சன் டி.வி, ‘தாமரை’ சீரியல்லயும் வில்லன்தான். ஜீ தமிழ் ‘லட்சுமி வந்தாச்சு’ சீரியல்ல செகண்ட் ஹீரோவா பாசிட்டிவ் ரோல். தமிழ், தெலுங்கு, மலையாளம்னு இதுவரை 20-க்கும் அதிகமான சீரியல்கள்ல நடிச்சுட்டேன். ஸ்டைலிஷ் அண்ட் ஸ்மார்ட் வில்லன் கேரக்டருக்கு, ஷியாமை ஃபிக்ஸ் பண்ணிடுறாங்க. ஒவ்வொரு ஸீனுக்கும் முகபாவனையை விதம்விதமா வில்லத்தனமா மாத்துற சவால், சூப்பரா இருக்கு. குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி, 13 மொழிகள்ல தயாராகிட்டு இருக்குற ‘சேவ் தி ஸ்மைல்’ங்கிற குறும்படத்தில் ஹீரோவா நடிச்சிருக்கேன். அந்தப் படம் எனக்கு நல்ல பிரேக் கொடுக்கும்னு நம்புறேன்!’’

வில்லன் ஆனாலும் பொண்ணுங்க லைக்ஸ் அள்றீங்க சார்!


‘‘நான் ரொம்ப பிஸி!’’

கேபிள் கலாட்டா!

ன் டி.வி ‘வாணி ராணி’ சீரியலில், ‘பூஜா’ கேரக்டரில் அமைதியான, அன்பான மருமகளாக அசத்திக்கொண்டிருக்கும் நவ்யா, பல மொழி சீரியல்களிலும் பரபரப்பாக இருக்கும் ஆர்ட்டிஸ்ட்!

‘‘சொந்த ஊர் பெங்களூரு. ப்ளஸ் டூ முடிச்சப்போ மெடிக்கல் ஸீட், மீடியா வாய்ப்பு ரெண்டுமே கிடைச்சது. நான் மீடியாவை `டிக்' பண்ணிட்டு, காலேஜ்ல பி.பி.எம் சேர்ந்துட்டேன். படிக்கும்போதே கன்னட சேனல்ல ஆங்கர் வாய்ப்பு, படிப்பு முடிஞ்சதும் கன்னட, தெலுங்கு சீரியல்களில் ஹீரோயின் கேரக்டர், கன்னடப் படங்களில் வாய்ப்புனு பரபரப்பாகிட்டேன். ‘தென்றல்’ சீரியலோட கன்னட வெர்ஷனான ‘துளசி’யில் நான்தான் ஹீரோயின். ராதிகா மேடம் ‘வாணி ராணி’ சீரியல் ‘பூஜா’ கேரக்டர் வாய்ப்பு கொடுத்தாங்க. இதுவரைக்கும் மூணு மொழிகள்ல எட்டு சீரியல்கள்லயும், நிறைய கன்னடப் படங்கள்லயும் நடிச்சிருக்கேன். பெங்களூரு, ஹைதராபாத், சென்னைனு இப்படிப் பறந்து பறந்து நடிக்கிறது, ரொம்பப் பிடிச்சிருக்கு. ஏன்னா, மூணு ஸ்டேட் மக்களுக்கும் நவ்யாவைத் தெரியும் என்கிற அங்கீகாரம் எவ்வளவு பெருசு! ஆரம்பத்தில் தமிழ் சுத்தமா தெரியாது. இப்போ சூப்பரா பேசறேன்ல?!’’

நாளைக்கு எந்த ஸ்டேட்ல ஷூட்டிங்மா?!


‘‘இலங்கையில் இருந்து வந்திருக்கேன்!’’

கேபிள் கலாட்டா!

லங்கையில் பிறந்து, நடிப்பு ஆசையில் சென்னை வந்து, சீரியல்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார் தாரிஷ்.

‘‘பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சாலும், இலங்கையில் சீரியல்கள், மாடலிங்னு இருந்தேன். சென்னையில நடிப்புக்கு பெரிய ஸ்கோப் கிடைக்கும்னு, மூணு வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்து, கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினேன். கையில இருந்த காசெல்லாம் கரைஞ்சுபோக, ‘ஏதாச்சும் கிடைக்கிற வேலைக்குப் போயிடலாம்’னு முடிவெடுத்தப்போ, அப்பா ஜெயசீலனும், அம்மா தேவராணியும் ‘சீக்கிரம் நல்லது நடக்கும், கொஞ்சம் பொறுமையா இரு’னு சொன்னாங்க. அதேபோல சன் டி.வி ‘பிரியமானவள்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சுது. வந்த புதிதில் இந்த சென்னையில் எனக்கு யாரையுமே தெரியாட்டியும், எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்க ரொம்பவே போராடினேன். இப்போ எங்க போனாலும், ‘ஏய், சரவணன்...’னு ‘பிரியமானவள்’ சீரியல்ல என் கேரக்டர் பேரைச் சொல்லி ஆர்வமா பேசுறாங்க, பாராட்டுறாங்க. தொடர்ந்து ‘அன்னக்கொடி’ சீரியல், மாடலிங்னு அப்பா, அம்மாவுக்கு பணம் அனுப்புற அளவுக்கு செட்டில் ஆகியிருக்கேன். இப்போ சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சிருக்கு!’’

சென்னையில் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்களா பாஸ்?!

ரிமோட் ரீட்டா

படங்கள்: எம்.உசேன், ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 150

நெகிழ வைத்த குறும்படம்!

``ஆதித்யா டி.வி-யில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் `பாப்கார்ன் டைம்ஸ்' நிகழ்ச்சியில் சமீபத்தில் இடம்பெற்ற குறும்படம் உள்ளத்தை உருக்கியது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்க அழைத்து வருகிறான் மகன். அப்போது ஒரு ஃப்ளாஷ்பேக்... அவன் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், அவனை பார்த்துக்கொள்ள முடியாமல், ஹாஸ்டலில் சேர்க்க முடிவெடுக்கிறார்கள். அழைத்துவந்து விடும் சமயத்தில், அந்த தாயின் மனம் துடித்து, `என் மகனை விடமாட்டேன்' என கதறியழுது, திருப்பி அழைத்துச் சென்றுவிடுகிறாள். அதை நினைவுகூர்ந்த மகன், `யார் கூறினாலும் உன்னைத் தனியே விடமாட்டேன்' என்று தாயைக் கட்டியணைத்து கண்ணீர்விடும் காட்சி, அற்புதம்'', என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார், சென்னையில் இருந்து பி.சந்திரகலா.

`மனமார்ந்த’ பாராட்டு!

``சத்தியம் தொலைக்காட்சியில் வியாழன்தோறும் மாலை 4 மணிக்கு `இனியவளே உனக்காக’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் மனஅழுத்தம், தனிமை, சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு தொலைபேசி உரையாடலின் மூலம் ஆலோசனை வழங்கி தெளிவான தீர்வை முன்வைக்கிறார்கள். மனஉளைச்சலோடு அவதிப்படும் பெண்களுக்கு இது உதவிக்கரம் நீட்டும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது’’, என்று பாராட்டுகிறார், சேலம், அம்மாப்பேட்டையில் இருந்து பி.ரமணி.

தேவை... மறு ஆய்வு!


``பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா? குழந்தையின்மை குறை தீர்க்கும் மருத்துவமனைகளின் விளம்பரங்கள் அதிக அளவில் வருகின்றன. பெண்களை அழவைப்பதோடு மருத்துவமனைகள், டாக்டர்களை தெய்வங்களாக சித்திரிப்பது ஒரே அபத்தம்! போதாக்குறைக்கு தினமும் `பெண்ணே நலமா?’ என்று ஒரு மருத்துவரின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. குழந்தைப்பேறு மற்றும் தான் சந்தித்த சவால்கள் என வருடக்கணக்கில் வருகிறது. பொதிகை இவற்றையெல்லாம் மறு ஆய்வு செய்யுமா?’’, என்று கேள்விக்கணை தொடுக்கிறார் சென்னை, மயிலாப்பூரில் இருந்து எஸ்.வெண்மதி.