தன்னம்பிக்கை
Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா!

அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா!

படம் வரைஞ்சு பாகம் குறிக்காதீங்க பாஸ்!டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா!

னுஷா, ஆதிரா, இனியா மூணு பேருக்கும் அவங்கவங்க வீட்டுல ஒரே நேரத்துல பாராட்டுகள் கிடைச்சிருக்கு... ரெண்டு விஷயங்களுக்காக! ஒண்ணு, மூணு பேருமே அரியர்ஸ் இல்லாம தேர்வாகியிருக்காங்க. அப்புறம், கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்கு வெளியே வந்து, சென்னை, புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை அள்ளிட்டு வந்திருக்காங்க.

‘‘அனு... இந்த முறை புத்தகக் கண்காட்சியில வாங்கின புத்தகங்களை எல்லாம், நாம மூணு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறிப் படிக்கப்போறோம்... அப்படித்தானே?’’

‘‘அப்படியேதான். எனக்கு ரொம்ப நாளா சுஜாதாவோட ‘எப்போதும் பெண்’ படிக்க ஆசை. இப்போதான் வாங்கி, ஆசை தீரப் படிச்சுட்டு அதை அம்மாவுக்குக் கொடுத்தேன். அவங்களும் படிச்சுட்டு சிலாகிச்சுட்டாங்க!’’

‘‘ஆமாப்பா... பாட புத்தகங்களைத் தாண்டி இலக்கியம், அறிவியல், சினிமானு படிக்கும்போது, இதமான வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது மட்டுமில்லாம... கட்டுரை, கவிதை, கதைனு எழுத முயற்சியெடுக்கிற ஆசையும் வந்துடுச்சு!’’

‘‘இனியா... உனக்கு அப்போ ஒரு நல்ல செய்தி இருக்கு. இலக்கிய ஆர்வத்துக்குத் தீனியா, விகடன் குழுமத்துல இருந்து ‘தடம்’னு ஒரு இலக்கிய மாத இதழ் புதுசா வெளிவந்திருக்கு. கட்டுரை, கவிதை, தொடர், இலக்கிய ஆளுமைகள் நேர்காணல்னு ‘தடம்’ நம்மை வாசிப்பில் அடுத்த தளத்துக்கு கொண்டு போற விதமா இருக்கு. தரமான படைப்புகளுக்கான அங்கீகாரம் தரவும் அது தயாரா இருக்கு.’’

அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘எல்லாமே சரியா சொல்றே ஆதிரா... ஆனா, ரொம்ப லேட்டா சொல்றே! அட, ஆமாம்ப்பா... நாங்க ரெண்டு பேரும் நேத்தே ‘தடம்’ படிச்சுட்டோம்!’’

‘‘நல்ல விஷயம்தான். சரி, அடுத்த புதுவரவு ஒன்றைப் பற்றி பேசலாம். சமூக வலைதளங்கள் எங்கும் ‘இறைவி’ கூச்சலா இருக்கு. அதையும் மீறி, சமீபத்தில் வெளியான ‘உறியடி’ படத்தை நம்ம நெட்டிசன்கள் கொண்டாடி கவனிக்க வெச்சாங்க. ஆனா, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கொலை காட்சிகள், படம் வரைஞ்சு பாகம் குறிக்கிற அளவுக்கு ரொம்பக் கொடூரமா இருக்கு. இந்த அளவு வன்முறைகளை திரையில கையாள்றது கொடுமைன்னா, அதைப் படிக்கிற மாணவர்கள் செய்றாங்கனு காட்டினது இன்னும் வலிச்சது எனக்கு. ‘இறைவி’லயும் இதே மாதிரி கொலைக்கும் கொள்ளைக்கும் நியாயம் சொல்லியிருக்காங்க. திரைப்படங்கள்ல மேக்கிங்னு சொல்ற விஷயங்கள் தாண்டி, கதையும் காட்சிகளும் மனஉளைச்சலை தராம இருந்தாலே தியேட்டர்கள்ல ஆடியன்ஸ் கூடுவாங்கனு நினைக்கிறேன் நான்.’’

‘‘அனு... டென்ஷன் ஆகாதே! ஒரு பாட்டு அனுப்பு றேன் கேளேன். உகாண்டாவைச் சேர்ந்த சுட்டீஸ், கையில இருக்கிற பாத்திரங்கள், பொருட்களை வெச்சு இசைக்குழுவை உருவாக்கின மாதிரி அந்தப்பாட்டுக்கு ஆடி நடிக்கிறாங்க. அந்தக் குழந்தைகளோட அசைவைப் பார்த்தா அவ்ளோ அழகா இருக்கு!’’

அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘குழந்தைகள் எப்பவுமே அழகுதான் இனியா! அதேபோல, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விருப்பம், திறமை இருக்கு. ஆனா, பெரும்பாலான பெற்றோர்கள் அதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம, அபாகஸ், பாட்டு, பரதம்னு அவங்க விரும்புற விஷயங்களையே குழந்தைகளையும் கத்துக்கச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்க.’’

‘‘பெற்றோர்கள் எப்படியெல்லாம் ‘மாத்தி யோசிச்சு’ குழந்தைகளை அணுகலாம், அவங்களோட மனசைக் கவரலாம் என்பதைப் பற்றி நான் ஒரு கட்டுரை படிச்சேன். குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்குத் தெளிவு கொடுக்கும் விதமா இருந்தது அது.’’

‘‘ஆதிரா... இங்க நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம். நீ என்ன அங்க `வாட்ஸ்அப்'ல வெட்டிக்கதை பேசிட்டு இருக்கியா?’’

‘‘அட இல்லப்பா... நான் அரியர் இல்லாம தேர்வானதால, அப்பா எனக்கு ஸ்கூட்டர் வாங்கித்தர முடிவு பண்ணியிருக்காராம். அதுதான் எந்த நிறுவனம், என்ன ரகம் வாங்கலாம்னு இணையத்துல பார்த்துட்டு இருக்கேன்.’’ 

‘‘சரி, நான் கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்லு. உனக்கு ஹேண்ட் கிரிப்னா என்னனு தெரியுமா? டெஃப்லான் கோட்டிங்னா என்னனு தெரியுமா? இண்டிகேட்டர் பஸ்ஸர் பீப்னா என்னனு தெரியுமா?’’

‘‘ஏய் ஏய் நில்லு... நீ எப்போ ஸ்கூட்டர் நிபுணரானே..?’’

அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘நீயும் ஆகலாம்! பெண்கள் என்ன ஸ்கூட்டர் வாங்கலாம் அப்படீன்னு ஒரு கட்டுரை பத்தின லிங்க் அனுப்புறேன். படிச்சிட்டு, அப்புறம் போ ஷோரூமுக்கு. நிச்சயம் பயனுள்ளதா இருக்கும்.’’

‘‘ரெண்டு பேரும் கொஞ்சம் பேச்சை நிறுத்திக்கோங்க. நான் இப்ப ரசமலாய் சாப்பிடப் போறேன். யாரு வர்றீங்க?!’’
 
‘‘நானு... நானு...!’’

முண்டியடித்துக் கிளம்பினார்கள் கடை நோக்கி!

- கச்சேரி களைகட்டும்...