தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

லுவலகத்தில் சகதோழி சோகத்தோடு இருந்தார். ஊரிலிருக்கும் தாயார், படியில் இறங்கும்போது கீழே விழுந்து காயமடைந்திருக்கிறார். ஒரு மாத காலத்துக்கு மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அடுத்த நாள் ஊருக்குப் போக டிக்கெட்டும் கிடைத்துவிட்டது. ஆனாலும் ஊர் போய் சேரும் வரை அவருக்கு நிம்மதி இல்லைதானே!

``அப்பாவுக்கு போன் செய்தால், `காலையில இருந்து யாரும் சாப்பிடலைம்மா. அம்மாவுக்கு சரியானா போதும்’னு புலம்புறார்.

நமக்குள்ளே!

`வீட்டுல எது எங்க இருக்குனு தெரியலை. அம்மாவோட டிரெஸ் எல்லாம் எடுத்து வைக்கணும். நீ எப்ப வருவே?’ என்று வேதனைப்படுகிறார் அண்ணன்.

`வாஷிங் மெஷின்லகூட துவைக்கத் தெரியாது. குக்கரை யூஸ் பண்ணத் தெரியாது. வீட்டைப் பெருக்கி துடைத்துப் பழக்கமில்லை. அம்மா இல்லாத வீடே நரகமா இருக்கு’ என அழுதுவடிகிறான் தம்பி.
அம்மா இல்லாததன் வலி, அவர் மருத்துவமனையில் இருக்கும்போதுதான் அனைவருக்கும் ஆழமாகத் தெரிகிறது’’ என்று அந்தத் தோழி சொன்னபோது, நிதர்சனம் நெஞ்சில் முட்டியது.

வீட்டில் அம்மா இல்லை என்றால், குடும்ப நபர்கள் அடுத்ததாக அணுகுவது வீட்டிலிருக்கும் இன்னொரு ‘இறைவி’யைத்தான். `அம்மா குணமாக வேண்டும்’ என்பது போலவே, தங்கள் வீட்டின் `மற்றுமொரு இறைவி’, அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்துசேர வேண்டும் என்று எதிர்பார்ப்பதைத் தவிர, பெரிதாக வேறு எதையும் நகர்த்திவிடவில்லை தோழியின் குடும்பத்து ஆண்கள்.

இதுதான் பெரும்பாலும் நம் உலக வழக்கமாக இருக்கிறது. `எங்கம்மா இல்லைனா, வீடே வீடா இருக்காது’ என்று தெருமுக்கு டீக்கடையிலும், சகநண்பர்களிடமும் புகழ்ந்து பேசுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது.

அம்மாக்களை இப்படியெல்லாம் புகழ்வதால் மட்டுமே எதுவும் மாறிவிடப் போவதில்லை. அடிபட்டு விழுந்துவிட்டபோது மட்டுமல்ல, அனுதினமும் அவர்களுடைய வேலைகளில் தோள் கொடுப்பதுதானே உண்மையான புகழ்ச்சியாக இருக்கும்!

மாற்றம், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தொடங்கட்டுமே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!


ஆசிரியர்