Published:Updated:

`அனிமல் அம்மா’க்களின் அன்பு சாம்ராஜ்யம்!

`அனிமல் அம்மா’க்களின்  அன்பு சாம்ராஜ்யம்!
பிரீமியம் ஸ்டோரி
`அனிமல் அம்மா’க்களின் அன்பு சாம்ராஜ்யம்!

தாய்ப்பாசம்

`அனிமல் அம்மா’க்களின் அன்பு சாம்ராஜ்யம்!

தாய்ப்பாசம்

Published:Updated:
`அனிமல் அம்மா’க்களின்  அன்பு சாம்ராஜ்யம்!
பிரீமியம் ஸ்டோரி
`அனிமல் அம்மா’க்களின் அன்பு சாம்ராஜ்யம்!
`அனிமல் அம்மா’க்களின்  அன்பு சாம்ராஜ்யம்!

றறிவு உள்ள மனித இனத்தின் தாய்ப்பாசம் பற்றி நாம் அறிவோம். ஐந்தறிவு உள்ள விலங்குகளின் தாய்ப்பாசம், அதைப்போலவே சிறப்பானது; சிலிர்ப்பானது! அந்தப் பாசக்கார அம்மாக்களின் உலகில் ஒரு சின்ன ரவுண்ட்-அப்...

சிங்கம்

பெண் சிங்கம் 4 மாதங்கள் கர்ப்பம் சுமந்து, ஒரு பிரசவத்தில் 4 குட்டிகளைப் பெற்றெடுக்கும். குட்டிகள் பிறந்து கண் திறக்காத நாட்களில், தனது துணையான ஆண் சிங்கம் உட்பட எந்த விலங்குகளின் கண்களிலும்படாமல் தன் குட்டிகளைப் பக்கத்தில் இருந்து பாதுகாக்கும். 8 வாரங்கள் கழித்துதான் தன் குட்டிகளைப் பிற சிங்கங்களிடம் அறிமுகப்படுத்தும். ஒரு தாய்க்குப் பிறந்த குட்டிகளை இதர பெண் சிங்கங்களும் அருகில் இருந்து கவனித்துக்கொள்ளும். 6 வாரங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குட்டிகள், பின்னர் இறைச்சி உண்ண ஆரம்பிக்கும்.

பிறந்த 4 சிங்கக் குட்டிகளில் சில, இரை கிடைக்காமலும், ஆண் சிங்கங்கள், பிற விலங்குகளால் வேட்டையாடப்பட்டும்  இறந்துவிட நேரும். முடிந்தவரை அந்த வேட்டையில் இருந்து பாதுகாக்க தாய் சிங்கமும், அதற்குத் துணையாக மற்ற பெண் சிங்கங்களும் வரும். பெண் சிங்கங்களின் படையைப் பார்த்து வேட்டையாட வந்த மிருகங்கள் தலைதெறிக்க ஓடிவிடும். 2 அல்லது 3 வயது வரை குட்டிகளை, தாய் சிங்கம் கண்கொத்தி யாகப் பாதுகாக்கும்.

சிறுத்தை

பெண் சிறுத்தை ஒரு பிரசவத்தில் 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும். குட்டியின் வாசனைகூட வெளியில் தெரியாத அளவுக்கு தடுப்பு வேலிகளை தாய் அமைக்கும். 3 மாதம் வரை குட்டிக்கு தாய்ப் பால்தான். பின்னர் இறைச்சி உண்ணப் பழக்கும். தாய்ப்பூனை தன் குட்டிகளுடன் மெல்லிய உறுமலுடன் பேசுவதுபோலவேதான், சில ஒலிகளை எழுப்பி தாய் சிறுத்தையும் பேசும். 6 மாதத்தில் தன் குட்டிக்கு வேட்டையாடவும், பிற மிருகங்களிடம் இருந்து தப்பிக்கவும் பயிற்சி கொடுக்கும். 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தாயிடம் இருந்து தனியாகச் செல்லப் பழகும்... குட்டி சிறுத்தை. தான் வேட்டைக்குச் செல்லும்போது, குகைகளில் தனது குட்டிகளை மறைத்துவைத்துவிட்டுச் செல்லும் தாய்.

`அனிமல் அம்மா’க்களின்  அன்பு சாம்ராஜ்யம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யானை

பெண் யானை 22 மாதங்கள் கர்ப்பம் சுமக்கும். ஒரே ஒரு குட்டியை மட்டுமே பெற்றெடுக்கும். பிறந்த யானைக் குட்டியை அதன் தாய் மட்டுமின்றி, தாயின் உடல் நலத்தை முன்னிட்டு அத்தை, சகோதரி,  யானைக் கூட்டத்தின் தலைவி என அனைத்தும் கவனித்துக்கொள்ளும். என்றாலும், தாய் மற்றும் அத்தை யானை இரண்டும், குட்டியிடம் மிகுந்த பாசம், பிணைப்புடன் இருக்கும்.

பிறந்த இரண்டு மணி நேரத்துக்குள் குட்டி யானைக்கு பிற யானைகள் நடக்கக் கற்றுக்கொடுக்கும். அடுத்த இரண்டு தினங்களுக்குள் தன் சக யானைக் கூட்டத்துடன் குட்டி பழகிவிடும். குட்டி யானைகள், இரண்டு வருடங்கள் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும். ஒரு குட்டி, நாளொன்றுக்கு 10 லிட்டர் தாய்ப்பால் வரை குடிக்கும். யானையின் தாய்ப்பால், பசுவின் பாலைவிட பல மடங்கு புரோட்டீன் சத்து கொண்டது.

புலி

16 வார கர்ப்பகாலத்துக்குப் பின், 3 முதல் 4 புலிக்குட்டிகளைத் தாய்ப்புலி பெற்றெடுக்கும். 6 முதல் 12 நாட்களுக்குப் பிறகுதான் குட்டிக்கு கண் தெரியும் என்பதால், அதுவரை அவற்றை முழுக்க முழுக்க தாய்ப்புலிதான் பார்த்துக்கொள்ளும். இரண்டு மாதங்கள் குட்டிகள் தாய்ப்பால் குடிக்கும் என்பதால், அதுவரை குட்டிகளை விட்டு தாய் எங்கும் செல்லாது. இடம் மாற, தன் குட்டிகளின் கழுத்துப்பகுதியில் பற்களால் மென்மையாகக் கடித்து தூக்கிக்கொண்டு செல்லும். 8 வாரங்கள் கழித்து குட்டிகளுக்கு வேட்டையாட சொல்லிக்கொடுக்கும் தாய், ஒரு மிருகத்தை அடித்து காயப்படுத்தி வீழ்த்தி, குட்டிகளை அதை கொல்லச் சொல்லிப் பழக்கும். இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் குட்டிகள் தாய்ப்புலியை விட்டுச் செல்லும்.

`அனிமல் அம்மா’க்களின்  அன்பு சாம்ராஜ்யம்!

உராங்குட்டான் குரங்கு

உராங்குட்டான் குரங்கு எட்டு முதல் எட்டரை மாதங்கள் வரை கர்ப்பம் சுமக்கும். மரத்தில் 30 மீட்டர் உயரத்தில் உராங்குட்டான் குரங்குகள் தழைகள், கிளைகளைக் கொண்டு அமைத்த ஒரு பாதுகாப்பான இடத்தில்தான் தாய் உராங் குட்டான், குட்டியைப் பெற்றெடுக்கும். பொதுவாக உராங்குட்டான்கள் ஒரு குட்டியையும், அரிதாக இரட்டைக் குட்டிகளையும் பெற்றெடுக்கும். 1.5 கிலோ எடையில் பிறக்கும் குட்டியை, உடனடியாக தாய் சுத்தப்படுத்தும். இரண்டு வாரங்கள் கழித்து குட்டிக்கு உட்காரவும், கிளைகளில் தாவ கையைப் பயன்படுத்தவும் கற்றுக்கொடுக்கும். இரண்டு வருடங்களுக்கு குட்டி, தாயை விட்டுப்பிரியாது. தாயின் வயிற்றை இறுக்கமாகப் பிடித்தபடியும் தாய்ப்பால் குடித்தபடியும் இருக்கும். 7 ஆண்டுகளில் சில ஆண் உராங்குட்டான் குரங்குகள் தனியே உணவு தேடிச் செல்லும். பெண் உராங்குட்டான் குரங்குகள், 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தாயைவிட்டு தனியே செல்லும்.

விலங்குகளின் உலகத்தையும் யுகங்   களாகத் தழைத்திருக்கச் செய்வது... தாய்மையின் கருணைதான்! 

 கே.பாலசுப்பிரமணி,  படங்கள்: ப.சரவணகுமார்