Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

உப்பு கலந்த வெந்நீரில் சோயா உருண்டைகளை (சோயா சங்க்ஸ்) போட்டு மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து நன்கு பிழியவும். பின்னர் மிக்ஸியில் சேர்த்து சுற்றினால் உடனே பூப்பூவாக உதிரும். இதை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். எந்தப் பொரியல் செய்தாலும் இறக்குவதற்கு முன்னால் தேங்காய்க்குப் பதில் இந்த சோயா பொடியைத் தூவி இறக்கவும். சுவையும், வாசனையும் அதிகரிப்பதுடன், புரதச் சத்தும் கிடைக்கும்.

- அங்கயற்கண்ணி அம்மையப்பன், திருநெல்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புடவையை இறுக்கிக் கட்டுவதால், இடுப்பில் சிலருக்கு புண்ணாகிவிடும். கடுக்காயை சந்தனக்கல்லில் உரசித் தடவி வந்தால், புண் குணமாகும்.

- பிரபா டாக்கர், ஹைதராபாத்

குலோப் ஜாமுன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமல் இருப்பதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.

- எஸ்.விஷ்ணுப்பிரியா, திருவம்பநல்லூர

த்திரிக்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி செய்யும்போது சிறிதளவு கறுப்பு உளுந்தை எண்ணெயில் வறுத்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து, சட்னியுடன் கலந்தால், சுவை அசத்தலாக இருக்கும். 

டிப்ஸ்... டிப்ஸ்...

- எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி

டிப்ஸ்... டிப்ஸ்...

வெங்காய சாம்பார் செய்யும்போது சிறிதளவு கடலை மாவை கரைத்து ஊற்றி கொதிக்கவைத்தால், ருசியும் மணமும் நன்றாக இருக்கும்.

- வெ.தாரகை, கும்பகோணம்

டிப்ஸ்... டிப்ஸ்...

லவை சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவை உதிரியாக பொல பொலவென்று வர வேண்டுமானால், குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கிளறிவிட வேண்டும்.

- ம.ஜெயலட்சுமி, வந்தவாசி

டிப்ஸ்... டிப்ஸ்...

சம் செய்யும்போது கைவசம் கொத்தமல்லித்தழை இல்லையா? சிறிது மல்லியை (தனியா) நசுக்கிப் போடலாம். ரசம் வாசனையாக இருக்கும்.

- ஆர்.ஹேமாமலினி, திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

திரசம் மிருதுவாகவும், ருசியாகவும் வர வேண்டுமா? அதிரச மாவில் புளிக்காத தயிர் அல்லது பூவன் வாழைப்பழத்தில் பாதியை சேர்த்துப் பிசைந்து செய்யவும். 

- எஸ்.சிவசங்கரி சரவணன், செம்பனார் கோவில்

டிப்ஸ்... டிப்ஸ்...

ரவில் தூக்கம் வரவில்லையா? கவலை வேண்டாம். கொத்தமல்லித்தழையை அரைத்து சாறெடுத்து அதனுடன் சிறிது தண்ணீரும், பனங்கற்கண்டும் சேர்த்து தூங்கப்போவதற்கு முன் குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

- எம்.புவனா, சேலம்

டிப்ஸ்... டிப்ஸ்...

முட்டைகோஸ் சாற்றை கடைந்த மோர், உப்பு சேர்த்து பருகினால், குடல் நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- ஹெச்.சீதாலக்ஷ்மி, கேரளா

டிப்ஸ்... டிப்ஸ்...

ருதாணியை அரைத்து அதை கைகளில் இடுவதற்கு முன் கைகளை எலுமிச்சைச் சாறு விட்டு கழுவி காயவிட்டு, அதன்பிறகு மருதாணி இட்டுக்கொண்டால்... நன்கு சிவப்பாக பிடித்துக்கொள்ளும்.

- தேவி, நீலாங்கரை