பிரீமியம் ஸ்டோரி

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பதைவிட, இன்று ஒருவர் அணிந்துள்ள ஆடை களை வைத்துதான் முதல் பார்வையிலேயே அவரைப் பற்றி முடிவுசெய்துவிடுகிறது உலகம். மற்றவர்களின் மதிப்பீடுகள் ஒரு பக்கம் இருக்க, பொருத்தமான ஆடைகள் அணிந்திருக்கும்போதுதான், நமக்கும் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். அப்படி உடை களை உடல்வாகுக்கேற்ப தேர்ந்தெடுப்பது மற்றும் உள்ளாடைகளைச் சரியாக அணிவது குறித்த ‘குளோத்திங் டிப்ஸ்’ தருகிறார் பெங்களூரைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் கனிஷ்கா ராஜன்.

உடல்வாகுக்கு ஏற்ற உடைகள்!

உயரம் குறைவானவர்கள் உயரத்தை அதிகரித்துக் காட்ட...

*  டாப், பாட்டம் என்று மேலிருந்து கீழ் வரை ஒரே நிறத்தில் அணியலாம்.

* நீளமான சங்கிலிகள் மற்றும் பிற அக்சஸரீஸ் தவிர்க்கவும்.

* முழுக்கை வேண்டாம்... அரைக்கை ஓ.கே!

* உயரம் குறைந்து ஒல்லியாக இருப்பவர்களுக்கு பிங்க், சிவப்பு மற்றும் பீச் நிறங்கள் பளிச்சென இருக்கும்.

* உயரம் குறைந்து பருமனாக இருப்பவர்கள் கறுப்பு, மெரூன், பச்சை போன்ற அடர் நிறங்களில் உடுத்தலாம்.

* ஸ்கர்ட் அணியும் போது ஸ்லீவ்லெஸ் டாப் அணிவது நல்லது.

உடல்வாகுக்கு ஏற்ற உடைகள்!

உயரமாக இருப்பவர்களுக்கு...

* பளிச் நிறங்களில் உயரம் குறைவான குர்த்தி, கீழே பட்டியாலா பேன்ட் நல்ல சாய்ஸ்.

* ஆடைகளில் குறுக்குக் கோடுகள் (ஹாரிஸான்டல்) இருந்தால் உயரத்தைக் குறைத்துக் காட்டும்.

* சுடிதார், குர்த்தி, டி-ஷர்ட், வெஸ்டர்ன் டாப்ஸ் எதிலும் குட்டை கை வேண்டாம். அரைக்கை, முக்கால்கை, முழுக்கை தேர்ந்தெடுக்கவும்.

* டாப் ஒரு நிறம், பாட்டம் ஒரு நிறம் என்று அணிந்தால் மிகவும் உயரமாகத் தெரியாது.

 மினி ஸ்கர்ட்ஸ், ஷார்ட் பேன்ட்ஸ்... இவை இரண்டும் வேண்டவே வேண்டாம் உங்களுக்கு!

உடல்வாகுக்கு ஏற்ற உடைகள்!

எடை அதிகமா?!

* ஹாஃப் ஸ்கர்ட் அணியலாம்.

* `V' நெக் டி-ஷர்ட்ஸ், டாப்ஸ் உயரமாகவும், ஒல்லியாகவும் காட்டும்.

* மேலிருந்து கீழான கோடுகள் (வெர்டிகல்) கொண்ட ஆடைகள் ஒல்லியாகக் காட்டும்.

* காட்டன் தவிர்த்து, வேலைப்பாடுகள் அற்ற பிளெய்ன் ஆடைகள் அணியவும்.

`ஒல்லி ஒயிலம்மா'க்களுக்கு...

* காட்டன் மற்றும் வேலைப் பாடுகள் அதிகம் கொண்ட ஆடைகள் அணியலாம்.

* அளவு சரியாகப் பொருந்தாத ரெடிமேடு ஆடைகள் தவிர்த்து, துணி எடுத்து அளவு கேற்ப தைத்து அணியவும்.

* கறுப்பு நிற உடைகள் தவிர்க்கலாம்.

* முழுக்கை அல்லது குட்டைக்கை ஆடையின் மீது ஷ்ரக் அணிந்துகொள்ளவும்.

* ஒல்லியாக, உயரமாக இருப்பவர்களின் பிரச்னை, கூன். எந்த உடை அணிந்தாலும் நிற்கும்போதும் நடக்கும்போதும் கூன் போடுவதைத் தவிர்த்தால், உடலமைப்பின் சிறப்பு முழுமையாக வெளிப்படும்.

உடல்வாகுக்கு ஏற்ற உடைகள்!

உள்ளாடைகள் தேர்வு செய்யும்போது...

  * டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்கள் அணியும்போது, டி-ஷர்ட் பிரா பயன்படுத்தவும். வழக்கமானதைவிட அதிக ஃபிட்னஸ் தரும் இது, பிராவின் கொக்கி மற்றும் ஸ்ட்ராப் போன்றவை வெளியே தெரியாதவண்ணம் இருக்கும். பருமனான, ஒல்லியான பெண்கள் எவரும் அணியலாம்.

* ஒல்லியான பெண்கள் மார்பகங்களை எடுப்பாகக் காட்ட `பேடட் பிரா/ப்ரீ-ஃபார்ம்டு பிரா' (Padded Bra/Pre-formed Bra) அணியலாம்.

* தளர்ந்துபோன மார்பகங்களுக்கு ஃபிட் ஷேப் தர, அண்டர் ஒயர் பிரா (Under Wire Bra) அணியலாம். இதில் பிரா கப்களுக்குக் கீழ் இருக்கும் பிளாஸ்டிக் அல்லது உலோகத்தாலான மெல்லிய ஒயர், மார்பகங்களுக்கு நல்ல க்ரிப் தரும். பருமனாக உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கத்தக்க உள்ளாடை இது.

 கோ.இராகவிஜயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு