Published:Updated:

`தலையணி கேட்பொறி’ வழியே... மனம் மயக்கும் இசை செயலிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`தலையணி  கேட்பொறி’  வழியே... மனம் மயக்கும்  இசை செயலிகள்!
`தலையணி கேட்பொறி’ வழியே... மனம் மயக்கும் இசை செயலிகள்!

`தலையணி கேட்பொறி’ வழியே... மனம் மயக்கும் இசை செயலிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
`தலையணி  கேட்பொறி’  வழியே... மனம் மயக்கும்  இசை செயலிகள்!

கூட்டம், சலசலப்பு, வியர்வை, வெயில் என்று எரிச்சலூட்டும் பேருந்துப் பயணங்களில் ஆறுதலாய், சூழல் மறக்கச்செய்து சொர்க்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும்... தலையணி கேட்பொறி (அதாம்ப்பா ஹெட்ஃபோன்) வழி வரும் பாடல். அப்போது விருப்பமான பாடல்களைத் தேடி, தேர்வுசெய்து கேட்பதற்கான மியூசிக் `ஆப்’களின் (இசை செயலிகள்) பரிந்துரை இங்கே...

ப்ளேயோ (PLAYO)

`தலையணி  கேட்பொறி’  வழியே... மனம் மயக்கும்  இசை செயலிகள்!

அனைத்து இந்திய மற்றும் உலக மொழிப் பாடல்கள் இதில் அடக்கம். உங்களுக்கென பிரத்யேகமாக இதில் ‘ப்ளே லிஸ்ட்’ வைத்துக்கொள்ளலாம். அதை நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம். இதில் உள்ள பாடல்கள் பிடிக்கவில்லை எனில், விருப்பமான ரேடியோ பண்பலைக்கு இட்டுச் செல்லும். எந்தப் பாடல் கேட்பது என்று தெரியவில்லையா? டாப் ஹிட் பாடல்களைக் கொண்டுவந்து கொட்டி, பரிசீலனைக்குக் கொடுக்கும்!

சவுண்ட் கிளவுட்  (SOUND CLOUD)

`தலையணி  கேட்பொறி’  வழியே... மனம் மயக்கும்  இசை செயலிகள்!

புதிதாக வெளியான பாடல்கள், அடுத்த நொடி உங்கள் விரல் நுனியில்! உங்கள் அக்கவுன்ட்டில் நீங்களே உங்கள் சொந்த ஆடியோவையும் பதிவேற்றிக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த இசைக்கலைஞர்களின் புதிய வெளியீடுகளை, அவரது புரொஃபைல் மூலமே நீங்கள் கேட்கலாம். உடற்பயிற்சி, பயணம், விசேஷங்களுக்கு என ப்ளே லிஸ்ட் அமைத்துக்கொண்டால், தானாக பாடல்களை ஒலிபரப்பும்.

வின்க் (WYNK)

`தலையணி  கேட்பொறி’  வழியே... மனம் மயக்கும்  இசை செயலிகள்!

பல மொழிகளில் கோடிக்கணக் கான பாடல்களைக் கொண்டது. மெலடி வேண்டுமா, ராப் வேண்டுமா, வெஸ்டர்ன் வேண்டுமா, கிளாசிக்கல் வேண்டுமா, அது எந்த மொழியில் வேண்டும் என்று விருப்பத்தைச் சொல்லிவிட்டால் போதும்... அந்த ரகப் பாடல்களை தொடுதிரையில் கொண்டுவந்து கொட்டும். பாடல்களைப் பதிவிறக்கினால், அலைபேசி மெமரியிலேயே சேவ் ஆகிக்கொள்ளும். அதனால் ஆஃப்லைனிலும் பாடல்கள் கேட்கலாம், ரசிக்கலாம்!

சாங்ஃப்ளிப் (SONG FLIP)

`தலையணி  கேட்பொறி’  வழியே... மனம் மயக்கும்  இசை செயலிகள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளில், 10 மில்லியன் பாடல்களுக்கு மேல் உள்ளது. எந்த மூலைமுடுக்கிலும் பண்பலை கேட்கலாம். கர்னாடிக், கஜல், பஜன்ஸ் போன்று பல பட்டியல்களும் உள்ளன. ஆட வேண்டுமா? ‘டான்ஸ் சாங்ஸ் ஃபோல்ட’ரில் போட்டி ஆட்டமா, ஜாலி ஆட்டமா என்று தேர்வுசெய்தால், அதற்கான பாடல்களை அதுவே எடுத்துக்கொடுக்கும்!

டிஜே ஸ்டுடியோ 5 (DJ STUDIO 5)

`தலையணி  கேட்பொறி’  வழியே... மனம் மயக்கும்  இசை செயலிகள்!

இட்ஸ் பார்ட்டி டைம்! பல பாடல்களின் கலவை, ராப், சவுண்ட் மிக்ஸிங் என்று `டிஜே’வின் அனைத்து சிறப்பம்சங்களும் ஒரு ஸ்மார்ட்ஃபோனில் அடக்கம். பாடல்களை ஃபியூஷன் செய்துகொள்ளலாம். மேஷ்-அப் உருவாக்கி நண்பர்களை அசத்தலாம். வழக்கமான 5 நிமிடப் பாடல்களாக இல்லாமல், இது ஜாலி அனுபவம் தரும்!

இசையும் மகிழ்வும் இனி கையோடும், காதோடும்!

தா.நந்திதா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு