Published:Updated:

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9
பிரீமியம் ஸ்டோரி
செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

``புடவைக்கு நான் அடிமை!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

``புடவைக்கு நான் அடிமை!

Published:Updated:
செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9
பிரீமியம் ஸ்டோரி
செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9
செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

ண்ணியமான ஆடைகள், ரசிக்கவைக்கும் அழகு என தமிழ்நாட்டில் பலரது இல்லங்களுக்கும் செல்லப்பெண் ஆகிப்போன சன் டி.வி ‘தெய்வமகள்’ தொடரின் கதாநாயகி வாணி போஜன், தன் ஆடைத் தேர்வுகள் பற்றி நம்மிடம் பகிர்கிறார்...

பிராண்ட்தான் முக்கியம்!

``நான் ரொம்ப பார்த்துப் பார்த்து, இது செட் ஆகுமானு பலமுறை யோசிச்சுதான் ஒரு டிரெஸ்ஸை எடுப்பேன். இல்லைன்னா, அதை அணியும்போது மனசுக்குள்ள உற்சாகம் இருக்காது என்பதோட, ‘இவ்ளோ பணம்போட்டு எடுத்து வீணா யிருச்சே!’ என்ற கவலையும் பிடிச்சுக்கும். அதனால, பொதுவா நான் பிராண்டட் ஆடைகளாதான் வாங்குவேன். அதில் ஒரு நேர்த்தியான ஃபினிஷிங் இருக்கும். அது மிகப் பெரும்பாலும் நம்மை உடுத்தினதுக்கு அப்புறம் கவலைப்பட வெச்சுடாது. மேலும், அது ஒரு தனி லுக் தரும்.

பாம்பே பிளாட்ஃபார்ம்... பேஷ் பேஷ்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவா, மெட்டீரி யலைப் பார்த்தவுடன் விலை அதுக்கு ஏற்றதானு என்னால கணிச்சிட முடியும். ஒருவேளை பிராண்டட் அயிட்டங்களில் அநியாயத்துக்கு விலை குறிப்பிட்டிருந்தா, அந்த டிரெஸ் ரொம்பப் பிடிச்சிருந்தாலும் ரிஜக்டட் தான். எனக்கு பாம்பே பிளாட்ஃபார்ம் கடைகளில் டிரெஸ் எடுக்க ரொம்பப் பிடிக்கும். விலை குறைவு, சரியான ஃபிட்டிங்னு மனசுக்குப் பிடிச்ச மாதிரி நிறைய ஆடைகள் வாங்கிக் குவிக்கலாம்.

ஷாப்பிங்னா... சோறு, தண்ணி வேண்டாம்!

ஷாப்பிங்குக்கு மணிக் கணக்கில் செலவு செய் வேன். சோறு, தண்ணி எதுவும் வேண்டாம்... ஆனாலும் சோர்வாகாம முதல் டிரெஸ்ஸை பார்க்கிற அதே ஆர்வதோட நூறாவது டிரெஸ்ஸையும் பார்ப்பேன். என்ன பிரச் னைன்னா, ‘அய்யய்யோ... உன்கூட வந்தா ஒரு டிரெஸ் எடுக்க ஒரு நாள்முழுக்க செலவழிச்சு எங்க பொறுமையை காலியாக்கிடுவ’ யாருமே என்கூட ஷாப்பிங்க்கு வரமாட்டாங்க... எங்கம்மாவைத் தவிர! சொல்லப்போனா, எங்கம்மா என்னைவிட சூப்பரா டிரெஸ் தேர்வு செய்வாங்க. `தெய்வ மகள் - சத்யா’வோட ஸ்டைல்லகூட அவங்களுக் கும் பங்கிருக்கு. 

முன்னயெல்லாம் மார்டன் டிரெஸ்தான்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

நான் சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடி ஏர்ஹோஸ்டஸா வேலைபார்த்தேன். மாடலிங்கும் செய்துட்டு இருந்தேன். அப்போவெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சதுனா,   மாடர்ன் டிரெஸ்தான். அதைத் தவிர சல்வார்... புடவை எல்லாம் வாங்கிற பழக்கமே இல்லை.

ஆல்டைம் ஃபேவரைட்!

ஜீன்ஸ், வொயிட் டி-ஷர்ட்... என்னோட ஆல்டைம் ஃபேவரைட். அதுல நான் ரொம்ப வசதியா உணர்வேன்.

புடவை... பெருமை!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

நான் ஸ்லிம்மா இருக்கிறதால புடவை எனக்கு நல்லாயிருக்காதுனு நினைச்சிருந்தேன். ஆனா, சீரியலுக்கு வந்ததும், ‘நீங்க நிறைய புடவை கட்டவேண்டி இருக்கும். அதுவும் தனித்துவமா இருக்கணும். தயார் செய்து வெச்சுக்கோங்க’னு எங்க இயக்குநர் சொல்ல, நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். ஆரம்பத்தில் புடவை கட்டி நடிச்சப்போ, அது எனக்கு நல்லாயிருக்குமானு நம்பிக்கையே இல்லாமதான் நடிச்சேன். ஆனா, ஸ்க்ரீன்ல பார்த்தப்போ, எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்போ நான் புடவை ரசிகை, அடிமை. மற்ற ஆடைகளை எல்லாம்விட, புடவை கட்டின வாணியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காகவே தேடித் தேடி புடவைகள் வாங்கி வாட்ரோபை நிறைக்கிறேன்.

வண்ணம்... எண்ணம்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

ஒரு ஆடை எவ்வளவு அழகான வடிவமைப் பில் உருவானாலும், கலர் காம்பினேஷன் சரியில்லைன்னா எல்லாமே பாழாகிடும். பொதுவா எனக்கு கறுப்பு கலர்தான் ரொம்பப் பிடிக்கும். என் வார்ட்ரோபில் கண்ணை மூடிட்டு எடுத்தாலும் கறுப்பு டிரெஸ் கையில் சிக்குற அளவுக்கு நிறைய வெச்சிருக்கேன். இருந்தாலும் லைட் கலர்ஸ் மற்றும் பேஸ்டல் கலர்ஸ்தான் என் ஸ்கின் டோனுக்கு பொருத்தமா இருக்கும் என்பதால, ஸ்க்ரீனுக்கு எப்பவும் அந்த நிறங்களுக்குதான் முக்கியத்துவம் தருவேன்.

அந்தக்கால ஸ்டைல்... ஐ லைக் இட்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 9

பொதுவா எனக்கு யாராவது ஒரு பிரபலத்தை பார்த்து அதே மாதிரி உடுத்துக்கிற பழக்கம் இல்லை. எனக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு. அதுலதான் நான் தனித்துவமா இருப் பேன்னு நம்புவேன். இருந்தாலும், க்ளோஸ் நெக், அரைக்கை பிளவுஸ், சிவப்பு பொட்டுனு எனக்கு அந்தக்கால ஸ்டைல் ரொம்பப் பிடிக் கும். அதை சீரியலில்கூட ஃபாலோ செய்வேன்.

அக்சஸரீஸ்...

பொதுவா கலர் கலரா அக்சஸரீஸ் பயன்படுத்து றது எனக்குப் பிடிக்காது. கொஞ்சம் எளிமையா இருக்கணும்னு நினைப் பேன். காதுல, கையில எதுவும் போட்டாலும், போடலைன் னாலும் ஹேண்ட்பேக் மட்டும் எப்பவும் வேணும் எனக்கு. அதுவும் பிளாக் மற்றும் பிரவுன் நிறத்தில் மட்டும்தான் பயன்படுத்து வேன். ஜிமிக்கி மேல ஒரு சின்ன காதல் இருக்கு. நிறைய கலெக்‌ஷன்ஸ் வெச்சிருக்கேன்.

சு.சூர்யா கோமதி, படங்கள்:எம்.உசேன்