Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா!

அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!

கபாலி... ராசாளி... தக்காளி!டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா!

கபாலி... ராசாளி... தக்காளி!டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!

`‘முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை... முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை... ராசாளி ராசாளி...’'

- டெசிபல் அளவைக் கூட்டி சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தாள் அனு.

‘‘ஏய் அனு... என்ன ஒரே ரொமான்டிக் மூட்ல இருக்கபோல!’’

‘‘ ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில தாமரையோட வரிகள்தான் இப்படி ரிப்பீட் மோட்ல என்னைப் பாடவைக்குது. வைரல் ஆஃப் த வீக்... ‘ராசாளி’தான்!’’

‘‘யார் சொன்னது? ‘கபாலிடா... நெருப்புடா... ரஜினிடா’னு மீம்ஸ் போட்டு தாக்கிட்டு இருக்காங்களே... கபாலி சாங்ஸ் நீ கேட்கலையா அனு?’’

‘‘ஆதிரா குட்டி... நீங்க ரெண்டு பேரும் சொல்றதை நான் ஒப்புக்கறேன். கபாலிக்கும் ராசாளிக்கும் நடுவுல தக்காளியை மறந்துட்டீங்களே?! தக்காளி விலை 100 ரூபாயைத் தாண்டினாலும் தாண்டிச்சு... நம்ம நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு தக்காளியையே அழ வெச்சுட்டாங்க!’’

‘‘எப்டியோ... ஒருவழியா மீம்ஸ் போட்டு கலாய்ச்சே தக்காளி விலையை ஓரளவுக்காச்சும் குறைச்சுட்டாங்க.’’

‘‘அப்ப... தக்காளி விலை குறைஞ்சதுக்குக் காரணம் மீம்ஸுங்கிற?!’’

‘‘ஹாஹாஹா! குட் ஜோக்!’’

அனுஷா... ஆதிரா... இனியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஜோக் இல்லப்பா, இது சீரியஸ் மேட்டர். ஒரு கிலோ தக்காளியோட விலையைக் கேட்டப்போ எவ்வளவு வலிச்சது நமக்கெல்லாம்?! ஒரே ஒரு தக்காளிப் பழத்தை நம்ம வீட்டுத் தொட்டிகள்ல பிழிஞ்சுவிட்டிருந்தாலே, சமையலுக்குத் தேவையான அளவுக்கு தக்காளி கிடைச்சுப்போயிருக்கும்.’’

‘‘சரி சரி... நாமெல்லாம் சோம்பேறிங்கறதுதான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே!’’

‘‘நாமெல்லாம்னு என்னை எதுக்கு இழுக்குற?’’

‘‘என்ன... இன்னிக்கு ஜாலியா பாட்டுல ஆரம்பிச்ச பேச்சை இப்படி சண்டைக்குக் கொண்டுபோறீங்க? வெயிட். செடி வளர்க் கணும்னு சொன்னதால நான் ஒரு வீடியோவைக் காட்டுறேன் பாருங்க. அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி. ஒரு விதை முளைக்கறதையும், ஒரு பூ மலரும் தருணத்தை யும், ஒரு கொடி படர்ந்து போகுறதையும் நேர்ல பாத்திருக்கீங்களா?’’

‘‘ஆதிரா... பூ பூக்குறதையெல்லாம் பார்க்க முடியாது. அது நம்ம கண்ணுக்கு அகப்படாம நடந்து முடிஞ்சுடுற இயற்கையோட படைப்பு.’’

அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘அதான் இல்ல. ஒரு விதை முளைக்கறதுல ஆரம்பிச்சு, அது கொடியாகி பூக்கற வரைக்கும் ஓர் உயிரினம் வாழ்றதுபோலவே அந்த வீடியோவை பதிவு செஞ்சிருக்காங்க. `கபாலி'க்கும், `ராசாளி'க்கும், தக்காளிக்கும் இணையா இந்த வீடியோதான் இப்ப செம வைரல்!’’

‘‘ஏய்ய்ய்ய்... காட்டுமா... எனக்கு இப்பவே பார்க்கணும்போல இருக்கு!’’

(வீடியோவைப் பார்த்துவிட்டு ஒருவருக்கொரு வர் பிரமிப்பாக பார்த்துக்கொண்டார்கள்.)

‘‘இந்த வீடியோவைப் பார்க்கறப்பதான் ஒரு செடியோட மதிப்பு எனக்குப் புரிஞ்சது இனியா. உயிர்களை மதிக்கக் கத்துக்கணும்னு தோணுது எனக்கு.’’

‘‘அனு... ஓவர் ஃபீலிங் உடம்புக்கு நல்லது இல்ல. நம்ம சீனியர் அக்கா நிஷாந்தினி உடல் உறுப்பை தானம் பண்ண இப்பவே கையெழுத்து போட்டிருக்காங் களாம்.’’

‘‘உடல் உறுப்பு தானம்னு சொல்றப் பதான் எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு     வருது. நீ தோல் தானம் பத்தி கேள்விப் பட்டிருக்கியா?’’

‘‘என்னது தோல் தானமா? அப்படீன்னா என்ன?’’

‘‘நம்மோட தோலை தானம் செய்ய ஒப்புக்கிட்டோம்னா, நாம இறந்த பிறகு அது தீக்காயங்களால பாதிக்கப்பட்ட நோயாளிகளோட உயிரைக் காக்க உதவும்னு மருத்துவத்துல சொல்றாங்க. இதைப்பத்தி நீ முழுசா தெரிஞ்சுக்க லிங்க் அனுப்புறேன்.’’

`புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது’ - ஆதிராவுக்கு அலைபேசியில் அழைப்பு வர, ‘அன்பே வா’ படத்தின் இந்தப் பாடல் அவள் செல்போனின் ரிங் டோனாக ஒலித்தது. ஆதிரா பேசி முடித்து போனை வைத்ததும்,

‘‘ஆமா... இது ரொம்ப பழைய பாட்டாச்சே ஆதிரா? இதை ஏன் ரிங்டோனா வெச்சிருக்கே?’’

அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘நீங்க இப்படி ‘ஏன்?’னு கேட்கணும்னுதான் வெச்சிருக்கேன். போன தலைமுறையில வாழ்ந்த சில நல்ல இயக்குநர்கள் பத்தி நாம தெரிஞ்சுக்கறதே இல்ல இனியா. இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? எம்.ஜி.ஆர் நடிப்புல வெளியான ‘அன்பே வா’, சிவாஜி நடிப்பில் ‘தெய்வமகன்’, ‘பாரதவிலாஸ்’, ‘தர்மம் எங்கே’, ‘எங்கிருந்தோ வந்தாள்’,  திகில் படமான ‘அதே கண்கள்’னு நிறைய நல்ல படங்களை இயக்கி இருக்கிறார். இதுல ‘தெய்வமகன்’ திரைப்படம் அப்போவே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கு.  இந்த அழகான படைப்புகளுக்கு எல்லாம் சொந்தக்காரரான அவர், கடந்த ஜூன் 15 அன்னிக்கு இயற்கை எய்திட்டார்னு நியூஸ்ல படிச்சேன். இந்தப் பாட்டை எங்க மாமா அடிக்கடி கேட்டுட்டே இருப்பார். இந்த நேரத்துல அது ரொம்ப மனசுக்குப் பிடிச்சதா இருந்ததால, ரிங்டோனா செட் பண்ணிட்டேன்!’’

மூவரும் சைலன்ட் மோடுக்குப் போனார்கள்.

இனியாவின் போனுக்கு நோட்டிஃபிகேஷன் வர, என்னவென்று பார்த்தால்... `ரெமோ' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் செம போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

‘வாவ்’ என்று வாயைப் பிளந்தார்கள் மூவரும்!

அனுஷா... ஆதிரா... இனியா!

- கச்சேரி களைகட்டும்...