
‘கம்மல் அழகா இருக்கே...’ என்ற காம்ப்ளிமென்டைவிட, ‘இந்தக் கம்மலை எப்படிம்மா போட்டீங்க?’ என்று கேட்கவைக்கும் காதணிகள்தான் இப்போது கேர்ள்ஸிடம் ட்ரெண்ட். காது குத்தாமலேயே காதைக் கவ்வியபடி மாட்டிக்கொள்ளும் இயர் கஃப், காதில் படர்ந்து கிடக்கும் இயர் ராப் (Ear wrap), தொங்கட்டானை பின்பக்கம் மாட்டிக்கொள்ளும் பேக் ஸ்டட், முன், பின் என்று இரண்டு பக்கங்களும் போட்டுக்கொள்ளக்கூடிய டபுள் சைடு இயர் ரிங், முன்னும் பின்னும் இரண்டு முத்துகள் தொங்க, ‘எப்படி இந்தக் கம்மலை மாட்டினீங்க?’ என்று தலைசுற்ற வைக்கும் ஹூக் டபுள் சைடு இயர் ரிங், நமக்குக் கொஞ்சம் பழக்கமான க்ளைம்பிங் இயர் ரிங்... என அசத்தல், ஆச்சர்ய ரகங்களில், விலை ரூபாய் 100-ல் இருந்து கிடைக்கிறது மார்க்கெட்டில்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காது... இனி கலைக்கூடம்தான் போங்க!
ஷாலினி நியூட்டன், படங்கள்: தே.அசோக்குமார்
நன்றி: ப்ரிஷா பியூட்டி ஸ்டோர், அல்சா மால், சென்னை