Published:Updated:

மறக்க முடியாத பரிசு... மனம் மயக்கும் கான்செப்ட்!

மறக்க முடியாத பரிசு... மனம் மயக்கும் கான்செப்ட்!
பிரீமியம் ஸ்டோரி
மறக்க முடியாத பரிசு... மனம் மயக்கும் கான்செப்ட்!

சர்ப்ரைஸ் கிஃப்ட்!

மறக்க முடியாத பரிசு... மனம் மயக்கும் கான்செப்ட்!

சர்ப்ரைஸ் கிஃப்ட்!

Published:Updated:
மறக்க முடியாத பரிசு... மனம் மயக்கும் கான்செப்ட்!
பிரீமியம் ஸ்டோரி
மறக்க முடியாத பரிசு... மனம் மயக்கும் கான்செப்ட்!
மறக்க முடியாத பரிசு... மனம் மயக்கும் கான்செப்ட்!

‘‘நமக்கு விருப்பமானவர்களின் பிறந்தநாள், திருமணநாள் என முக்கியமான தினங்களில் அவர்களை மகிழ்விக்க பரிசுகள் கொடுப்பது வழக்கம். அதோட அடுத்தகட்ட வளர்ச்சிதான்... சர்ப்ரைஸ் கிஃப்ட். இந்தப் பரிசு, வாழ்நாளுக்கும் அந்த தினத்தை அவங்க மறக்கமுடியாத அளவுக்கு அமையும். அதற்கான ஏற்பாட்டாளர்கள் நாங்க’’ என்று சுவாரஸ்யமான தன் தொழில் பற்றிச் சொல்கிறார், சென்னையில் உள்ள ‘தி6 சர்ப்ரைஸ் மேக்கர்ஸ்'ஸின் (The6 surprise makers) நிறுவனர் சக்திவேல்.

‘‘கார்த்திகாவுக்கு அவர் கணவர் பிறந்தநாளுக்கு ஷாப்பிங் மால் மத்தியில் அவருக்குப் பிடித்த பறை இசையால வாழ்த்து சொல்ல ஆசை. அந்த ஆசையை அவர் எதிர்பார்த்ததுக்கும் மேலாக நாங்க நிறைவேற்றினப்போ, பரிசைக் கொடுத்த மனைவிக்கும், அந்தப் பரிசை வாங்கிக்கிட்ட கணவருக்கும் அத்தனை சந்தோஷம். அதுதான் எங்களுக்கும் சந்தோஷம்’’ என்பவருக்கு, இந்த பிசினஸ் ஐடியா கிடைத்தது, ஒரு காதல் திருமணத்தை நடத்திவைத்த தருணத்தில்.

‘‘இன்ஜினீயரிங் முடிச்சிட்டு வேலைக்குப் போயிட்டு இருந்தேன். அப்போ என் நண்பன் ஒருத்தன் காதல் திருமணம் பண்ணிக்கிட்டான். இரு வீட்டாருக்கும் தெரியாம நண்பர்கள் முன்னின்று நடத்தின திருமணம் அது. அதேசமயம், பெற்றோர் அங்கே இல்லாத குறை தெரியாத அளவுக்கு சந்தோஷமும், குதூகலமும் அந்தத் தம்பதிக்குக் கிடைக்கணும்னு நினைச்சோம். சின்னச் சின்ன சர்ப்ரைஸ் விஷயங்களை அவங்க கல்யாணத்தில் செய்தப்போ, ரெண்டு பேர்கிட்டயும் அவ்ளோ சந்தோஷம்! அதைப் பார்த்த பலரும் தங்களோட திருமணம், தங்கள் அன்புக்குரியவர்களின் பிறந்தநாள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய தினங்களில் இப்படி எதிர்பாராத சந்தோஷப் பரிசுகள் வழங்கப்படணும்னு ஆசைப்பட்டாங்க. அப்போதான் பிறந்தது `தி6 சர்ப்ரைஸ் மேக்கர்ஸ்’.

2009-ல் இந்த பிசினஸை ஆரம்பிச்ச சமயம், மக்களுக்கு இது ரொம்பப் புதுசா இருந்தது. ஆனா, பிடிச்சதாவும் இருந்தது. கிடைச்ச வாய்ப்புகளை எல்லாம் கிரியேட்டிவா நாங்க செய்துகொடுக்க ஆரம்பிக்க, நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இப்போ ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு ஆர்டராச்சும் வருது. நிறைய வாய்ப்புகள் வந்தாலும், ஒவ்வொரு பரிசையும் பழசு படர்ந்திடாம புதுசு புதுசா யோசிச்சு நிறைவேற்றுகிறோம்’’ என்று சொல்லும் சக்திவேல், கட்டணங்கள் பற்றிச் சொன்னார்.

மறக்க முடியாத பரிசு... மனம் மயக்கும் கான்செப்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஒவ்வொருத்தரோட ஐடியாவைப் பொறுத்து ரேட் மாறுபடும். கஸ்டமர்ஸின் விருப்பத்தைப் பொறுத்து நடுக்கடல், வானத்துல எல்லாம் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கோம். 2,000 ரூபாய்ல ஆரம்பிச்சு 50,000 வரை செலவழிச்சவங்க இருக் காங்க. பிறந்தநாளில் ஆரம்பிச்சு, திருமணம், திருமண நாள், அன்னையர் தினம், ஆனிவர்சரி கொண்டாட்டங்கள், லவ் புரபோஸ் பண்ண, அவ்வளவு ஏன்... சமீபத்துல பிரேக் அப் ஆன பையனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கச் சொல்லி ஒரு ஆர்டர் வந்துச்சு. பொது இடத்துல, பரிசு கொடுக்கப்பட வேண்டியவரைச் சுற்றி நடனம் ஆடுறது, மோட்டார் ஸ்டன்ட்னு... கஸ்டமர்களோட ரசனைக்கும் தேவைக்கும் ஏற்ப கான்செப்ட்டுகள் விரிஞ் சுட்டே போகும்’’ என்றவரிடம் அவர்கள் கொடுத்ததில் மறக்க முடியாத சர்ப்ரைஸ் பற்றிக் கேட்டோம். 

‘‘ஒருமுறை பஹ்ரைனில் இருந்து எங்களை அழைத்த ஒருத்தர், ‘கஷ்டத்துல இருக்கிற யாராச்சும் ஒரு சின்னப் பையனை சர்ப்ரைஸ் செய்யுங்களேன்’னு கேட்டார். கேன்சர் இன்ஸ்டிட்யூட்ல தன் வாழ்நாளை எண்ணிட்டு இருந்த விமல் என்ற பையனை மாலுக்குக் கூட்டிட்டுப்போய், படம் பார்க்கவெச்சு, அவனோட கனவா இருந்த ப்ளே ஸ்டேஷனை பரிசா கொடுத்தோம். அந்த நாள் முடியும்போது, ‘இவ்வளவு சந்தோஷமா நான் இருந்ததே இல்லை’னு அவன் சிரிச்சதை மறக்கவே முடியாது.

தொழில்னு மட்டுமே ஓடிக் கொண்டிருக்காம... ஆசிரமம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கும் சென்டர் களுக்கு வாரத்தில் ஒருநாள் சர்ப்ரைஸ் நிகழ்ச்சிகள் செய்றது எங்க வழக்கம். கடந்த டிசம்பர் சென்னையில் மழை வெள்ளம் வந்தப்போ, கோட்டூர்புரம் ஏரியாவில் மீட்பு நடவடிக்கை களில் ஈடுபட்ட காவல்துறைக்கு நன்றி சொல்ல, காவல் நிலையத் துக்கே போய் சர்ப்ரைஸ் கொடுத்தோம். ‘முதல் முதலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வாழ்த்த வந்தது நீங்கதான்’னு சொன்னார் இன்ஸ்பெக்டர். ரொம்ப நெகிழ்ந்த தருணம் அது’’ என்கிறார், இந்த சர்ப்ரைஸ் குத்தகைதாரர்!

பி.நிர்மல், படங்கள்: மா.பி.சித்தார்த்