ஒரு டஜன் யோசனைகள்!

ட்சக் கனவுகளில், லட்சியக் கனவாக ஸ்கூட்டர் வாங்கினால் மட்டும் போதாது லேடீஸ்! அதை சாலையில் பாதுகாப்பாக ஓட்டுவது பற்றியும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான டிரைவிங்குக்கு ஒரு டஜன் யோசனைகள் இதோ...

1.
காலையில் முதன் முதலில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும், முடிந்தளவு செல்ஃப் ஸ்டார்ட் செய்யாமல், கிக் ஸ்டார்ட் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், இரவு முழுவதும் இன்ஜினும் பேட்டரியும் கூலாகி இருக்கும். செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்தும்போது, பேட்டரியும் இன்ஜினும் ஸ்டார்ட் ஆவதற்கு மிகவும் திணறும். கிக் ஸ்டார்ட்டில் பெட்ரோல் ஃப்ளோவும் சீராக இருக்கும். எனவே, கிக் ஸ்டார்ட் நல்லது.

ஒரு டஜன் யோசனைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. ஸ்கூட்டர் கீழே விழுந்தால், ஏர்லாக் ஆகிவிடும், உடனே ஸ்டார்ட் ஆகாது. எனவே பதற்றத்தோடு, ‘க்ரோர்பதி கொஸ்டீன் சாய்ஸ்’ மாதிரி தெரிந்தவர்களுக்கு போன் போடுவதோ, மெக்கானிக் ஷாப்புக்கு பைக்கை உருட்டிக்கொண்டு போவதோ தேவையில்லை. பதற்றப்படாமல், ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்துவிட்டு... முடிந்தால் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு ஸ்டார்ட் செய்து பாருங்கள். ஆல் இஸ் வெல். அதேபோல் ஸ்டார்ட் செய்யும்போது, ஆக்ஸிலரேட்டரை முறுக்கு முறுக்கு என்று முறுக்காதீர்கள். ஆக்ஸிலரேட்டரைத் தொடாமலேயே ஸ்டார்ட் செய்தால் சட்டென ஸ்டார்ட் ஆகும்.

3.
உயரமான பெண்கள் ஸ்கூட்டரில் இரண்டு பக்கமும் கால்களை ஊன்றியபடி தன்னம்பிக்கையோடு இருக்கலாம். இதுவே உயரம் குறைந்த பெண்களுக்கு... டோன்ட் வொர்ரி... எப்போதுமே வலது காலை ஸ்கூட்டரின் மீது வைத்துவிட்டு, இடுப்பை நேராக வைத்து இடது காலை மட்டும் தரையில் ஊன்றினால், பேலன்ஸ் பிரமாதமாகக் கிடைக்கும்.

ஒரு டஜன் யோசனைகள்!

4. ‘வெயிட்டான வண்டிகளை பார்க் பண்றது ரொம்பக் கஷ்டமா இருக்கு’ என்று நினைக்கும் பெண்கள், ஸ்கூட்டரை ரிவர்ஸ் எடுக்கும்போது, இடுப்பால் தாங்கிப்பிடித்தால் எவ்வளவு எடை இருந்தாலும் தெரியாது. ஹேண்டில் பாரை மட்டும் பிடித்து நகர்த்தினால்தான், பேலன்ஸ் கிடைக்காமல் கீழே விழுந்து, அருகில் நிற்கும் வண்டிகள் சீட்டுக் கட்டுபோல சரிந்து விழ வாய்ப்பு உண்டு.

ஒரு டஜன் யோசனைகள்!

5. சைடு மிரர் பார்க்காமல், இண்டிகேட்டர் போடாமல் எப்போதும் திரும்பாதீர்கள். திரும்பும் முன் சிக்னல் செய்வது மிக முக்கியம். அதேபோல் சடன் பிரேக் போடாதீர்கள். இது உங்களுக்கும் ஆபத்து; பின்னால் வரும் அனைவருக்கும் பேராபத்து. பிரேக் பிடிக்கும்போது இரண்டு பிரேக்குகளையும் சேர்த்தே அப்ளை செய்யுங்கள்.

ஒரு டஜன் யோசனைகள்!

6. சாலையில் எப்போதுமே நடுவில் செல்ல வேண் டாம்; இதனால் பெரிய வாகனங்களை ஓட்டி வருபவர்கள் கடுப்பாக வாய்ப்புள்ளது.

ஒரு டஜன் யோசனைகள்!

7. பெண்கள் பலரின் பிரச்னை... சென்டர்  ஸ்டாண்ட் போடுவது. பைக்கை/ஸ்கூட்டரை சென்டர் ஸ்டாண்ட் போட மிகவும் சிரமப்படுவார்கள். சமயங்களில் ஸ்டாண்டில் ஏறி நின்று முழு பலத்தையும் காட்டி ஸ்டாண்டுக்கு செலவுவைப்பார்கள். பதிலாக, லேசாக அழுத்தம் கொடுத்தாலே போதும்; ஸ்கூட்டர் அதுவாகவே பின் பக்கம் சென்று ‘ஜம்’ என்று உட்கார்ந்துகொள்ளும்.

8. சிக்னல் வருவதற்கு ரொம்ப தூரம் முன்னரே கால்கள் இரண்டையும் அகல விரித்துக்கொண்டே வராதீர்கள். கால்களை பின்னால் வரும் வண்டிகள் இடித்துவிட வாய்ப்புள்ளது.

ஒரு டஜன் யோசனைகள்!

9. சாலையில் செல்லும்போது மற்ற வாகனங்களை ஒட்டியபடி ஓவர்டேக் செய்யாதீர்கள்; முக்கியமாக, இடதுபுறம் எப்போதும் டோன்ட் டேக் ஓவர்டேக்.

10.
காதில் ஹெட்போன் மாட்டுவதைத் தவிர்த்துவிட்டு, முன்னால் செல்லும் இரண்டு அல்லது மூன்று வாகனங்களை மட்டும் கவனம்வைத்து ஓட்டுங்கள். விபத்துக்கு வாய்ப்பே இல்லை. வீட்டுக்குப்போய்கூட பாட்டு கேட்கலாம்.

ஒரு டஜன் யோசனைகள்!

11. புடவைத் தலைப்பு, சுடிதார் துப்பட்டா போன்றவற்றை மிகவும் கவனமாக `X' ஸ்டைலில் கழுத்தில் கட்டிவிடுங்கள்.

ஒரு டஜன் யோசனைகள்!

12. மிகவும் முக்கியம்... ஹெல்மெட்! வைஸர் கொண்ட ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான் பரிந்துரைக்க ஏற்றது.

தமிழ்,  படங்கள்:மீ.நிவேதன், மாடல்: வினோஸ்ரீ 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism