Published:Updated:

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10
பிரீமியம் ஸ்டோரி
News
செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

ப்ளி பெண் மியா ஜார்ஜ், இப்போது தமிழ்நாட்டின் செல்ல ஹீரோயின். தனக்குப் பிடித்தது, பிடிக்காதது, பொருந்துவது, பொருந்தாதது என்று, அவருடைய டிரெஸ்ஸிங் ஸ்டைல் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

அக்கேஷனல் ஷாப்பர்!

எல்லா பெண்களையும்போல எனக்கும் ஷாப்பிங்னா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனா, அடிக்கடி போக மாட்டேன். ஏதாச்சும் ஒரு நிகழ்ச்சி, ஷூட்டிங்குக்கு புது டிரெஸ் தேவைப்பட்டா, அந்தத் தருணத்தில் மட்டும் போய், அந்தச் சூழ்நிலைக்கு எந்த மாதிரியான டிரெஸ் தேவைப்படுதோ அதை எடுத்துட்டு வருவேன். ‘இந்த டிரெஸ் செம அழகா இருக்கே’னு தேர்ந்தெடுக்க மாட்டேன். அது எவ்ளோ சூப்பரா இருந்தாலும், பிடிச்சிருந்தாலும், எனக்கு சூட் ஆகுமானு யோசிச்சு, மனசு ‘மியாவுக்கு நல்லா இருக்கும்’னு சொன்னாதான் எடுப்பேன்.

அம்மா சொன்னா கேட்டுப்பேன்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெரும்பாலும் என் அம்மாவும், ஃப்ரெண்ட்ஸும் என் டிரெஸ் விஷயத்துல சொல்ற கமென்ட்ஸ் சரியா இருக்கும். அவங்க நல்லாயிருக்குனு சொன்னா, மத்தவங்களுக்கும் பிடிக்கும். அவங்க, ‘ஏதோ சரியில்லையே...’னு இழுத்தாங்கன்னா, அந்த டிரெஸ்ஸுக்கு ஏகோபித்த பாராட்டெல்லாம் கிடைக்காது. அதனால, பெரும்பாலும் இவங்களோடதான் ஷாப்பிங் போவேன். ட்ரயல் பார்த்து, இவங்க சொல்ற பரிந்துரைகளையும் காதுகொடுத்துக் கேட்டுப்பேன்.

டக்கு... டக்கு... டக்கு!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

ஒரு கடைக்குப் போய் அங்க இருக்கிற எல்லா டிரெஸ்ஸையும் பார்த்துட்டு, பிடிக்கலைன்னு அடுத்த கடைக்குப் போய் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிற ஆள் இல்லை நான். பொதுவா மிக்ஸ் அண்ட் மேட்ச் ஆடைகள்தான் அதிகமா உடுத்துவேன் என்பதால, அதிகமா ரிஜெக்ட் பண்ணாம...  பேன்ட், டாப்னு சிங்கிள் பீஸ்களா பிடிச்சதை எல்லாம் அள்ளுவேன். அதிகபட்சம் 15 நிமிஷம்தான்... ஒரு டிரெஸ் செலக்ட் பண்ண! 

சீப் அண்ட் பெஸ்ட்தான் என் பாலிசி!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

சினிமாவில் இருக்கிறதால வெரைட்டியான ஆடைகள் நிறைய தேவைப்படும். அதனால, அதிக விலை கொடுத்து நாலு டிரெஸ் எடுக்கிறதுக்கு பதிலா, சீப் அண்ட் பெஸ்ட்டா எட்டு டிரெஸ் எடுத்துடலாம் என்பதுதான் என் பாலிசி. அப்போதான் கைவசம் கலெக்‌ஷன்ஸ் நிறைய இருக்கும். சில சிறப்பு நிகழ்வுகளுக்கு மட்டும் காஸ்ட்லியா எடுத்துப்பேன். அப்போகூட, பணத்துக்குத் தகுந்த தரம் அந்த டிரெஸ்ஸில் இருந்தாதான் முழு மனசோட பில் போடுவேன். 

எளிமைதான் இயல்பா காட்டும்!

எனக்கு கிராண்டா டிரெஸ் பண்ணிக்கப் பிடிக்காது. ஸ்டோன் வொர்க், எம்ப்ராய்டரினு ஹெவி டிசைன்ஸ் பக்கம் போகவே மாட்டேன். ஃப்ரெண்ட்ஸ்கூட சில நேரங்கள்ல, ‘மேடம்... நீங்க இப்போ நடிகை. கொஞ்சம் கிராண்டா டிரெஸ் பண்ணிக்கலாம்ல..?’னு கேட்பாங்க. ஆனா, நான் படிக்கும்போது எப்படி டிரெஸ் பண்ணிக்கிட்டேனோ அதே எளிமையைதான் இப்பவும் ஃபாலோ பண்றேன். இதுதான் என்னை இயல்பா காட்டுது. சினிமா நடிகைனா ஆடம்பரமா  உடை உடுத்தணும்னு எல்லாம் கிடையாது.

குட்டியா, க்யூட்டா இருக்கணும்! 

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

எனக்கு அக்ஸ்சரீஸ் பிடிக்கும். ஆனா, அது குட்டியா, க்யூட்டா இருக்கணும். வாட்ச் ரொம்பப் பிடிக்கும். இயரிங்ஸ்னா கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆசை. டிரெஸ் வாங்கும்போதே மேட்சிங்கா இயரிங்க்ஸும் வாங்கிட்டு வந்துடுவேன். ஒருமுறை என் அக்கா எனக்காகத் தேடித் தேடி அவ்வளவு அழகா ஒரு இயரிங்ஸ் வாங்கிக் கொடுத்தாங்க. என் வார்ட்ரோப் பொக்கிஷம் அது.

பிடித்த உடை!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

ஜீன்ஸ் அண்ட் டாப், எனக்கு ரொம்பப் பிடிச்ச, நான் ரொம்ப வசதியா உணர்ற ஆடை. லாங் கவுன் மற்றும் சல்வார், என்னோட ஆல்டைம் ஃபேவரைட்.

டிரெஸ்ஸிங் சென்ஸ்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 10

எனக்கு சோனம் கபூரோட டிரெஸிங்க்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதுக்காக அதையே நான் ஃபாலோ பண்ணினா  எனக்கு செட் ஆகாதே? அதனால, ரசிக்கிறதோட சரி.

கலர் செலக்‌ஷன்!

நான் கலர் கான்ஷியஸான பொண்ணுனு எல்லோரும் சொல்லுவாங்க. என் ஸ்கின் டோனுக்கு, பொதுவா எனக்கு பிரைட் கலர்ஸ்தான் நல்லாயிருக்கும். தவிர, சீஸனலாவும் கலர்ஸை தேர்வு செய்வேன்.

நானே டிசைன் பண்ணுவேன்!

சில அக்கேஷன்களுக்கு நானே டிரெஸ் டிசைன் செய்துப்பேன். அதுக்காக நிறைய மெனக்கெடுவேன். ரெடிமேடா ஒரு டிரெஸ் வாங்கிப் போட்டுட்டுப் போறதைவிட, நமக்கான டிரெஸ்ஸை நாமே பார்த்துப் பார்த்து வடிவமைக்கும்போது அது மனசுக்கு ஒரு திருப்தியைத் தரும் என்பதைத் தாண்டி, நமக்கு பிரத்யேக லுக்கும் தரும்.

சு.சூர்யா கோமதி, படங்கள்: செனி பி.அருகாட்டு