வீட்டுக் கடன் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களை ஒரு டஜன் யோசனைகளாக வழங்குகிறார், பஞ்சாப் நேஷனல் வங்கி போரூர் கிளையின் மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன்.

1. எதற்கெல்லாம் கடன்..?

புதிதாக வீடு கட்ட மட்டுமே வங்கி களிடம் வீட்டுக் கடன் பெறலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், புதிதாக இடம் வாங்கி வீடு கட்டவும், கட்டிய வீடுகளை வாங்கவும், பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டவும்கூட வங்கிக் கடன் பெறலாம்.

2. கடன் சதவிகிதம்

வீடு கட்டத் தேவையான முழுப் பணத்தையும் வங்கிகள் கடனாக அளிக்காது. வீட்டின் மொத்த மதிப்புத்தொகையில் 75% முதல் 80% வரை மட்டுமே கடன் பெற முடியும்.

3. கடன் தொகை எப்படி வழங்கப்படும்?

புதிதாக வீடு கட்டுகிறவர்கள் எனில், கட்டுமான வேலை முடிய முடிய, கடன் தொகையை மூன்று அல்லது நான்கு தவணைகளாகப் பிரித்து வங்கிகள் வழங்கும். கட்டிய வீட்டை வாங்கும்போது செலுத்த வேண்டிய தொகையில் 75% முதல் 80% தொகையை எந்த பில்டரிடமிருந்து அல்லது எந்த நபரிடமிருந்து வீடு வாங்கப் போகிறீர்களோ அவரின் கம்பெனி அல்லது அவரின் பெயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் ஆக வங்கி கொடுக்கும்.

4. எவ்வளவு கிடைக்கும்?

வீட்டைப் பழுது பார்க்க அல்லது புதுப்பித்துக்கட்ட 20 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். மனை மட்டும் வாங்க, 50 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை கிடைக்கும். இவை வங்கிக்கு வங்கி மாறுபடும். கட்டிய வீட்டை வாங்க அல்லது புது வீடு கட்ட, உங்கள் சம்பளம் மற்றும் வாங்கப் போகும் சொத்தின் மதிப்பு அடிப்படையில் கடன் வழங்கப்படும்.

5. தகுதி

வீட்டுக்கடன் பெற குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 65. கடன் வாங்குபவரின் மாத சம்பளம் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் எனில், சம்பளத் தொகையில் 50% தவணையாக கட்டும் விதமாக கடன் தொகை இருக்கும். இதுவே சம்பளம் ஒரு லட்சத்துக்கு மேல் எனில், சம்பளத் தொகையில் 60 சதவிகிதம் மாத தவணையை கட்டும் விதமாக கடன் கிடைக்கும்.

6. இன்ஷூரன்ஸ்

ஒருவேளை ஓய்வுபெற்ற பின்னும் தவணை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, அதற்கேற்ற வருமானம் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், வங்கிகள் கடன் அளிக்கும். சில சமயங்களில் கடன் பெறுபவர் 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால் அவரது துணைவரோ (கணவர் / மனைவி), வாரிசுதாரரோ எழுத்துப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். கடன் வாங்கியவரின் திடீர் மரணம் அல்லது வேறு சில காரணங் களால் கடனைக் கட்ட முடியாத சூழலில் அவரது வாரிசுகள் பாக்கி கடனை கட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்கியிருந்த வர் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் பட்சத்தில், அவர் இறந்துவிட்டால் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் அவரது கடனை செலுத்திவிடும். இதனால், குடும்பத்தினர் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியும்.

7. தவணைக் காலம்

ஏற்கெனவே கட்டிய வீட்டுக்கு கடன் வாங்குகிறீர்கள் எனில், கடன் பெற்ற 3-வது மாதத்தில் இருந்து தவணை தொகையைக் கட்ட ஆரம்பிக்க வேண்டும். புதிதாக வீடு கட்ட கடன் பெறும்போது, கடன் தொகை முழுமையாக வழக்கப்பட்ட மறு மாதம் முதல் அல்லது வீடு கட்டுமானம் முடிந்த பிறகு தவணையை கட்ட ஆரம்பிக்கலாம்.

பொதுவாக, வீட்டுக் கடன் முதல் தவணை கொடுக்கப்பட்டதில் இருந்து 18-வது மாதத்தில் இருந்து தவணை செலுத்த வேண்டி இருக்கும். இந்த தவணைக் காலத்தை கடன் வாங்கியவரின் வயது, சம்பளம் ஆகியவற்றைப் பொறுத்து வங்கிகள் நிர்ண யிக்கும். பொதுவாக, கடனை 5 முதல் 30 ஆண்டுகள் வரை திரும்பச் செலுத்தலாம்.

8. எத்தனை நாளுக்குள் கடன் கிடைக்கும்?

எந்த வகையான வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித் திருக்கிறீர்களோ, அதற்கேற்ப ஆவணங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். ஏற்கெனவே கட்டியிருக்கும் வீட்டை வாங்க வேண்டும் எனில், சட்டப்படியான கருத்து (லீகல் ஒப்பீனியன்) கேட்பார்கள். இதனை வங்கி குறிப்பிடும் வக்கீலிடம் வாங்கி கொடுக்க வேண்டும். புது வீடு வாங்கப் போகிறீர்கள் அல்லது கட்டப் போகிறீர்கள் எனில், கட்டுமான மதிப்பீட்டை (எஸ்ட்டிமேட்) வங்கி கைகாட்டும் பொறியாளரிடம் பெற்று கொடுக்க வேண்டும். உங்களது ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில், 10 முதல் 15 நாட்களுக்குள் வங்கிக் கடன் கிடைத்துவிடும்.

9. கூடுதல் கடன்

வீடு கட்டி முடித்த பின் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் 2 லட்சம் ரூபாய் வரை கூடுதலாகக் கடன் பெற முடியும்.

10. வங்கியை மாற்றலாம்

நீங்கள் கடன் வாங்கிய வங்கியில் வட்டி சதவிகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், கடனை வேறு வங்கிக்கு சட்டத் திட்டத்துக்கு உட்பட்டு மாற்றிக்கொள்ள முடியும்.

11. தேவையான ஆவணங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வயதுச் சான்று (பத்தாவது அல்லது பன்னிரண்டாவது வகுப்பின் மதிப்பெண் பட்டியல்), மனைப் பத்திரம் (சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது), தாய்ப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்டக் கருத்து, கட்டட வரைபடம், கட்டுமான அங்கீகார வரைபட நகல், கட்டடத்தின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை, வருமானச் சான்றிதழ், கடந்த ஆறு மாதத்துக்கான வங்கி பாஸ்புக் நகல், வருமான வரி கணக்கு தாக்கல் படிவ நகல், பான் அட்டையின் நகல்

12. ஃப்ளோட்டிங் ரேட், ஃபிக்ஸ்டு ரேட்

வீட்டுக் கடன் வட்டியில் மாறுபடும் வட்டி விகிதம் (ஃப்ளோட்டிங் ரேட்), நிலையான வட்டி விகிதம் (ஃபிக்ஸ்டு ரேட்) என இரண்டு வகைகள் உள்ளன. ஃப்ளோட்டிங் ரேட்டில் வட்டி விகிதம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூடும் அல்லது குறையக் கூடும். ஃபிக்ஸ்டு ரேட்டில் வட்டி கிட்டத்தட்ட 3 அல்லது 5 ஆண்டுக்கு ஒரே மாதிரி இருக்கும். 5 வருடங்களுக்குள் கடனை முடிப்பவர்கள் ஃபிக்ஸ்டு ரேட்டை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

சு.சூர்யா கோமதி