Published:Updated:

‘‘எனக்கு சமைக்கவும் தெரியும்!’’

‘‘எனக்கு  சமைக்கவும் தெரியும்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘எனக்கு சமைக்கவும் தெரியும்!’’

- இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்`கிச்சன்

‘‘எனக்கு  சமைக்கவும் தெரியும்!’’

வள் விகடன் கிச்சன் இதழின் இரண்டாம் ஆண்டு விழா, சென்னையிலிருக்கும் கிரவுன் பிளாஸாவில் ஜூலை மூன்றாம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்க வந்தவர்களுக்கு அரங்கத்தின் வாயிலிலேயே நன்னாரி சர்பத், மின்ட் ஜூஸ் என வெல்கம் டிரிங்க்ஸ் பரிமாறப்பட, உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தனர்.

சொன்ன நேரத்துக்கு `டான்' என்று தன் லேப்டாப் பேக்கோடு சிம்பிளாக வந்திறங்கினார் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். விழாவை `ஆர்ஜே' சனோ தொகுத்து வழங்க, விகடன் பப்ளிஷர்ஸ் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனின் உரையோடு ஆரம்பித்தது விழா. இரண்டாம் ஆண்டு இதழை, இயக்குநர் கௌதம் மற்றும் கிரவுன் பிளாசாவின் எக்ஸிகியூட்டிவ் செஃப் ப்ரவீன் ஆனந்த் வெளியிட்டார்கள்.

‘‘எனக்கு  சமைக்கவும் தெரியும்!’’

அட்டைப்படத்திலிருந்த பனானா கேக்கை ரசித்தபடியே பேசிய கௌதம், ‘‘எங்க வீட்டில் எப்போதுமே எங்க அம்மா சமையல்தான். தி பெஸ்ட்டா இருக்கும். வெளியில் பல உணவுகள் சாப்பிட்டாலும், விரும்பிச் சாப்பிடுறது அம்மா சமையலைத்தான். நான் இயக்குநர்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, எனக்கு சமைக்கவும் தெரியும்’’ என்று ஆச்சர்யம் தந்தார். அதிலும், கௌதம், பேக்கிங் ஸ்பெஷலிஸ்ட் என்பது ஆச்சர்ய தகவல். வீட்டில் நேரம் கிடைக்கும்போது விதம்விதமாக கேக்குகளை செய்து அசத்திவிடுவாராம்.

விருந்தினர்கள் கூட்டத்தை நோக்கிய `ஆர்ஜே'. ``இங்கே எத்தனை ஆண்களுக்கு சமைக்கத் தெரியும்?'' என கேட்க, பலரும் கை உயர்த்தி நெகிழ வைத்தார்கள். அவர்களுள் ஒருவரிடம் ரசம் ரெசிப்பி கேட்கப்பட, `‘சுடுதண்ணீரில் புளியை ஊறவைக்கணும்'' என்று அவர் சொல்ல ஆரம்பிக்க... கூட்டத்தினர் பலத்த ஆரவாரம் செய்து, அவருக்கு அப்ளாஸ் கொடுத்தார்கள். விருந்தினர்களை மகிழ்விக்கும் விதமாக த்ரில் வீராவின் ஜக்லிங் (சாகச) நிகழ்ச்சி நடத்தப்பட... வெகுவாக ரசித்தார்கள் அனைவரும். இரண்டாம் ஆண்டு விழாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட `இண்டோ-ஃபிரெஞ்ச் ஃபியூஷன்' உணவைப் பற்றி செஃப் பிரவீன் ஆனந்த் விரிவாக விளக்க, ஆச்சர்யத்தோடு ருசிக்கத் தயாரானர்கள் விருந்தினர்கள்.

25-க்கும் மேற்பட்ட ரெசிப்பிகளோடு ஆரம்பமானது பிரமாண்ட லஞ்ச். ஆங்காங்கே செல்ஃபிக்களும், சிரிப்புக்களும் சிதற, உணவை ருசிக்க ஆரம்பித்தார்கள் விழாவுக்கு வந்திருந்தவர்கள்.

‘‘எனக்கு  சமைக்கவும் தெரியும்!’’

விருந்து முடிந்ததும் வாழ்த்துச் சொல்லியபடியே விடைபெற்றவர்களில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தந்த பாராட்டு... ‘‘தேங்காய்ப்பால் ரசம்னு ஒண்ணு கொடுத்திருந்தாங்க... சூப்பர்! சாலட்ஸ், கவுனி அரிசியில செஞ்ச அல்வா செம்ம!”ருச்சி ஊறுகாய் பாட்டில், சக்தி மசாலாவின் பஜ்ஜி மாவு பாக்கெட் ஆகிவற்றோடு பறவைகளுக்கு உணவு வைப்பதற்கான பாட்டிலும் பரிசாக கொடுக்கப்பட, ``கிஃப்ட்லயும் மனச கவர்ந்துட்டீங்க!'' என்றபடியே கிளம்பினார்கள் விருந்தினர்கள்.

பகுத்துண்டு வாழ்வோம்!

கே.அபிநயா, படங்கள்:எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார்