Published:Updated:

தேமலை குணப்படுத்தும் நாயுருவி!

தேமலை குணப்படுத்தும்  நாயுருவி!
பிரீமியம் ஸ்டோரி
News
தேமலை குணப்படுத்தும் நாயுருவி!

வைத்தியம்

தேமலை குணப்படுத்தும்  நாயுருவி!

நாயுருவி... பேரைக் கேட்டதுமே சிலபேர் முகம் சுளிக்கலாம். ஆனால், இந்த மூலிகையை முறைப்படி பயன்படுத்தினால் கைமேல் பலன் கிடைக்கும். மிகவும் சாதாரணமாக ரோட்டோம் வளர்ந்து கிடக்கக்கூடிய நாயுருவியின் இலையும், வேரும் மிகுந்த பலன்தரக்கூடியவை.

நாயுருவி இலைச்சாற்றில் கடுக்காய்த் தூள் இரண்டு கிராம் அளவு சேர்த்துச் சாப்பிட்டு வர, பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் உடனே குணமாகும். நாயுருவி இலையுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை சேர்த்து மையாக அரைத்து தேமலின் மீது பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். அழுக்குத்தேமல் என்று சொல்வார்களே, அவற்றின்மீதும் இதே கலவையை பூசி வந்தால் பலன் கிடைக்கும்.

நாயுருவி வேரால் பல் துலக்கினால் பல் தூய்மையாகும். நாயுருவி வேரை பாலில் வேகவைத்து உலர்த்தித் தூள் செய்து, தினமும் இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மன நோய்கள், பயம், மன உளைச்சல், தூக்கமின்மை, படபடப்பு, சித்தபிரம்மை போன்றவை விலகும்.

எம்.மரிய பெல்சின்