Published:Updated:

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா... `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா...  `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ட்ரெஸ் பிராப்ளமா... `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!

அவள் 16

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா...  `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!

ரபரப்பான வாழ்க்கையில் 10 வயதிலேயே இப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ் வந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் ஆப்ஸ் இருக்கும் போது, இந்தப் பிரச்னைக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன? யெஸ்... இந்த `ஆப்’களை பதிவிறக்கம் செய்யுங்கள்...  ஸ்ட்ரெஸ்ஸை விரட்டுங்கள்.

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா...  `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!

பசிஃபிக்கா (PACIFICA)

இது உங்கள் `மூட் பார்ட்னர்’. தினம் காலை எழுந்து உங்கள் வேலைகள், அன்றைய பிரச்னைகளை எல்லாம் இதில் உள்ளீடு கொடுத்தால், உங்கள் மூட் என்னவாக அமையும், அதை எப்படி எல்லாம் சரிசெய்து மனதை ஜாலியாக வைத்துக்கொள்ளலாம் என்று டிப்ஸ் கொடுக்கும். மேலும் உங்களை நாள் முழுவதும் கண்காணித்துக்கொண்டே, அலாரம் கொடுத்துக்கொண்டே இருக்கும். தினமும் கண்கள் மற்றும் மூளைக்குப் பயிற்சி, செவிக்கு மெல்லிசை கொடுப்பதோடு நீங்கள் முன்னரே பேசி பதிவுசெய்த நல்ல விஷயங்களை உங்களுக்கு ப்ளே செய்து மனதை உற்சாகமூட்டும்!

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா...  `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!

அடல்ட் பெயின்ட்டிங் (ADULT PAINTING)

இது பார்க்க குழந்தைகள் வாட்டர் கலரிங் செய்வதுபோல இருக்கும். ஆனால், நம்புங்கள் மக்களே... மனநல மருத்துவர்களே பரிந்துரைக்கும் `ஆப்’ இது. வண்ணம்தீட்ட மிக நுணுக்கமான படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். எப்படி வண்ணம்தீட்ட வேண்டும் என்ற வழிகாட்டலும் இருக்கும். ஒவ்வொரு படத்தையும் வண்ணம்தீட்டி முடிக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். முழுக்க முழுக்க அதில் கவனம் செலுத்தும்போது, திருப்தி கிடைக்கும்; மன அழுத்தம் விலகும்.

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா...  `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!

ரிலாக்ஸிங் ஆன்டி-ஸ்ட்ரெஸ் (RELAXING ANTI-STRESS)

இது ஒலி சம்பந்தப்பட்டது. ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் தனிமையைப் போக்க சினேகா விதம்விதமான ஒலிகள் சேகரிப்பாரே... அதே கான்செப்ட்தான் பாஸ்! மழை, புயல், நெருப்பு, அலை என்று பலவிதமான இயற்கை ஒலிகள் இதில் இருக்கும். நீங்களும் உங்களுக்குப் பிடித்த ஒலிகளைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளலாம். பதற்றம் எகிறும்போது இதைக் கேட்டால், மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்தான்!

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா...  `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!

செவன்கப்ஸ்  (7 CUPS)

வேலைச்சுமை அதிகமாகும் போது, அதைபற்றி பகிர்ந்துகொள்ள யாரும் இல்லை என்பதே பலரின் பிரஷர் ஏறக் காரணம். அவர்களுக்கு ஏற்றது செவன் கப்ஸ் செயலி. நீங்கள் என்னவெல்லாம் மனம் திறந்து கொட்ட வேண்டுமோ, கத்த வேண்டுமோ இந்த செயலியிடம் கொட்டலாம்; கத்தலாம். நிதானமாகக் கேட்டு, உங்களை கூல் ஆக்கும் ஆலோசனைகளை அள்ளிக் கொடுக்கும். அதுமட்டுமல்ல, உங்கள் பிரச்னை தீர்ந்ததா என்று ஃபாலோவும் செய்யும் இந்த உற்ற தோழி `ஆப்’!

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா...  `ஆப்’ இருக்கு... பதிவிறக்கு!

வாட்’ஸ்அப் (WHAT’S UP)

வாட்ஸ்அப் (whatsapp) தெரியும். அது என்ன வாட்’ஸ் அப் (what’s up)? உங்கள் மூட் எப்படி இருக்கிறதென அடிக்கடி ‘வாட்’ஸ் அப்?’ என்று கேட்டு கண்காணிக்கும் செயலி இது. உங்களுக்கு எந்த மாதிரியான டென்ஷனுக்கு எந்த மாதிரியான நெகட்டிவ் எண்ணங்கள் தோன்றும், அதை எப்படி நேர்மறையான எண்ணங்களால் தூக்கி எறியலாம் என ஆலோசனை கொடுக்கும். மனஅழுத்தத்தால் கஷ்டப்படும்  சமயங்களில் கேளிக்கை கேள்விகள் கேட்டு, ஜாலியாக பதிலளிக்கவைத்து சிரிக்க வைக்கும். தினமும் காலை ஒரு பொன்மொழி கொடுத்து உங்கள் நாளை உற்சாகமாக்கும்.

 தா.நந்திதா