செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

``புடவையில் நான் பொம்மை!’’- லட்சுமி மேனன்

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

ஹோம்லி ஹீரோ யின்... லட்சுமி மேனன். மாடர்ன் உடைகளிலும் அசத்துவார். ‘‘உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் பற்றிப் பேசணும்...’’ என்றதும், ‘‘ஒரு ஷூட்ல இருக்கேன். முடிச்சுட்டு, எவ்வளவு நேரமானாலும் பேசலாம்...’’ என்றபோதே, அவரின் காஸ்ட்யூம் காதல் புரிந்தது!

ஃபங்ஷனுக்கு மட்டும் ஸ்பெஷல் ஷாப்பிங்

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

பொதுவா, என் உடைகள் சிம்பிளாதான் இருக்கும். சமயங்களில் கலர் காம்பினேஷன்கூட சரியா பார்க்காம கைக்கு கிடைச்சதை எடுத்துப் போட்டுப்பேன். ஆனா, சினி மாவுக்கு வந்த பிறகு ஏதாவது ஃபங்ஷன்னா, அழகா டிரெஸ் பண்ணிக்கணும்னு ரொம் பவே மெனக்கெடறேன். கோ ஸ்டார்ஸ், என் ஃபேன்ஸ் எல்லாம் பார்க்கிற சினிமா நிகழ்ச்சிகளில், நான் ஒரு ஹீரோயினா என்னை அங்கே பிரசன்ட் பண்ணிக்கணும்ல... நல்ல உயரம், அதுக்கு ஏற்ற எடைனு ஆண்டவன் நமக்கு திருப்தியான ஒரு பெர்சனாலிட்டியைக் கொடுத்திருக்கார். அதை அழகா வெளிப்படுத்திக்கிறது நம்மோட பொறுப்பு, கடமை!

புடவை கட்டத் தெரியாது!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

ஐ லவ் சாரீஸ்! புடவை தர்ற அழகே தனி. ஆனா, எனக்குப் புடவை கட்டத் தெரியாது. அதில் நான் கம்ஃபர்ட்டபிளாவும் ஃபீல் பண்ணமாட்டேன். புடவை கட்டிட்டா, நான் பொம்மைதான். நடக்கக்கூட சிரமப்படுவேன். அதனால கேஷுவல்ஸ்தான் எப்பவும் என் சாய்ஸ். குறிப்பா, எங்கே போனாலும் ஜீன்ஸ், குர்தாதான்.

பிளான் பண்ணாம பண்ணணும்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

ஷாப்பிங் விஷயத்தில் பெரிய பிளான்லாம் பண்ணிக்க மாட்டேன். ஃப்ரெண்ட்ஸ்கூட எங்கயாவது வெளிய போகும் போது, அப்படியே ஷாப்பிங்கும் முடிச்சுட்டு வந்துடுவேன். டிரெஸ் விஷயத்தில் என் ஃப்ரெண்ட்ஸ் சில ஐடியாஸ் கொடுப்பாங்க. அதை முடிஞ்ச அளவு பின்பற்ற முயற்சி செய்வேன்.

கறுப்புதான்  எனக்குப் பிடிச்ச கலரு!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

ஐ லைக் பிளாக். எப்போ டிரெஸ் எடுக்கப் போனாலும், மறுபடியும் மறுபடியும் பிளாக் டிரெஸ்ஸைதான் மனசு தேடும். அதில்தான் நான் கார்ஜியஸா இருப்பேன்னு தோணும்.

ஷார்ட் டைம் ஷாப்பிங்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

ஷாப்பிங்னு போனா கடைக்குள்ள போனதும், எந்த டிரெஸ் பிடிக்குதோ அதை உடனே பில் போட்டுடுவேன். அதேபோல, டிரெஸ்ஸை ட்ரயல் பார்த்தும் வாங்க மாட்டேன். பிராண்ட், சைஸ் பார்த்தே அது எனக்கு எந்தளவுக்கு ஃபிட்டா இருக்கும்னு கணிச்சிடுவேன். அவ்வளவுதான். நம்புங்க... ப்ளீஸ்!

வாட்ச்  தேடும் உள்ளம்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

எனக்கு அக்ஸசரீஸ் போட் டுக்க பிடிக்கவே பிடிக்காது. சில காஸ்ட்யூம்ஸுக்கு அக்ஸசரீஸ் போட்டாதான் நல்லா இருக்கும்னா, போட்டுப் பேன். வாட்ச் இல்லாம நான் வெளிய வரவே மாட்டேன். எல்லா கலர் டிரெஸ்ஸுக்கும் எங்கிட்ட மேட்சிங் கலர்ஸ்ல வாட்ச் இருக்கு. என் வார்ட் ரோப்பில்,  டிரெஸ்ஸை தேடுறேனோ இல்லையோ, ‘இந்த வாட்ச் எங்கே...’னு கரெக்ட்டா தேடிடுவேன்.

பிராண்டட்தான் பெஸ்ட் சாய்ஸ்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

நான் எப்பவும் பிராண்டட் ஆடைகள் தான் வாங்குவேன். என் அனுபவத்தில் அது தரமாவும் இருக்கும், தனித்துவமான லுக்கும் கொடுக்கும்.

நீங்கதான் சொல்லணும்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

என்னோட டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லாயிருக்கானு, நீங்க தான் எனக்குச் சொல்லணும். ஏன்னா, எனக்குப் பிடிச்சதை நான் உடுத்துறேனே தவிர, பெர்ஃபெக்ட்டா உடுத்துறேன் னானு, எனக்குத் தெரியல. ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவுக்கு வந்துட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு யூனிஃபா மோடயேகூட போயிருக்கேன். படங்களுக்காகத்தான் முதல் முறையா பாவாடை - தாவணி, புடவைனு கட்ட ஆரம்பிச்சேன். எனக்குக் கிடைக்கிறது எல்லாமே பெரும்பாலும் ஹோம்லி கேரக்டர்கள்தான் என்பதால, ஸ்கிரீன்ல என் டிரெஸ்ஸிங்ஸ்ல படத்துக்குப் படம் பெரிய மாற்றம் எதுவும் இல்ல.

அனுஷ்கா சிம்பிள் அண்ட் நீட்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 11

அனுஷ்கா டிரெஸ்ஸிங் சென்ஸ் பிடிக்கும். எவ்வளவு பெரிய ஃபங்ஷனா இருந்தாலும் ரொம்ப கிராண்டா வரமாட்டாங்க. சிம்பிள் அண்ட் நீட்டா இருப்பாங்க. நான் அதைத்தான் ஃபாலோ பண்றேன்.

சு.சூர்யா கோமதி