தன்னம்பிக்கை
Published:Updated:

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!
பிரீமியம் ஸ்டோரி
News
‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

வேலன்டைன்ஸ் டேல இருந்து ஃபர்கிவிங் டே வரை, இன்னிக்கு பல ‘டே’க்கள் கொண்டாடப்படுது. மொத்த உலகமும் மகிழும் மதர்ஸ் டே, என்னிக்கு வருது போகுதுனே தெரியாத ஃபாதர்ஸ் டே, குழந்தைகளுக்கு அன்னிக்கும் லீவு விடாம ஸ்கூல் வைக்குற சில்ட்ரன்ஸ் டேனு... இதெல்லாம் நமக்குத் தெரிஞ்சது. ‘அடி ஆத்தீ! இதுக்குக் கூடவா டே கொண்டாடுறாய்ங்க!’னு நம்மளை அசரவைக்கிற... சமயத்துல தலையில அடிச்சுக்க வைக்கிற டேஸும் இருக்கு. வாங்க பார்க்கலாம்!

சர்வதேச ‘டவுட்டு’ தினம் (International Skeptics Day) - ஜனவரி 13 அல்லது அக்டோபர் 13

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

எந்த விஷயத்தையுமே முழுசா நம்பிடாம, கேள்வி கேட்டு மண்டையைக் குடைஞ்சு உண்மையைத் தெரிஞ்சுக்குற கேள்வி யாளர்களுக்கான தினம் இது. இதுல காமெடி என்னன்னா, ஒரு வெப்சைட்ல இந்த தினம் ஜனவரி 13 என்றும்... இன்னொரு வெப்சைட்ல அக்டோபர் 13 என்றும் இருக்கறதால இந்த `டவுட்டு' தினமே இன்னும் டவுட்டாதான் இருக்கு!

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' (International Ice Cream for Breakfast Day) -  பிப்ரவரி மாதத்தின் முதல் சனிக்கிழமை

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

‘அம்மா, இன்னிக்கு என்ன டிபன்?’னு காலையில நாம கேட்கும்போதே, ‘மகமாயி... இட்லி, தோசைன்னு மட்டும் சொல்லிடக்கூடாது’னு சில செகண்ட்ஸ் நினைப்போம். ஆனா, ‘இத்தாலியன் சீஸ் பாஸ்தா வித் ரெட் சாஸ்’னு அம்மா சொன்னா எப்பூடி இருக்கும்?! இதே மாதிரிதான் 1960-கள்ல நியூயார்க் நகரத்துல ஒரு மம்மி, தன்னோட ரெண்டு குழந்தைகளுக்கு காலை உணவா ஐஸ்க்ரீம் கொடுத்திருக்காங்க... அதுவும் ஒரே பனிமூட்டமான குளிர்காலத்துல! அதில் இருந்து பிப்ரவரி மாசத்தோட முதல் சனிக்கிழமை, ‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்’ ஆயிடுச்சு!

அந்நியன் தினம்(Multiple Personality Day)  - மார்ச் 5

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

நமக்குத் தெரிஞ்ச மல்டிபிள் பெர்சனாலிட்டி, ‘அந்நியன்’ சார்தான். அதனால நாம இந்த மல்டிபிள் பெர்சனாலிட்டி தினத்தை ‘அந்நியன்’ தினமா கொண்டாடலாம். ரெண்டுக்கும் அதிகமான பெர்சனாலிட்டி கொண்ட மனுஷங்களுக்கு ‘மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ என்ற மனநலக் குறைபாடு இருக்கும். அப்படி யாரையும் உங்களுக்குத் தெரிஞ்சா, அடுத்த வருஷம் மார்ச் 5-ம் தேதி, அவங்களுக்கு வாழ்த்து சொல்லுங்க. ஆனா, உங்களால ஒரு வாழ்த்தோட நிறுத்திக்க முடியாது!

நேர்மை தினம் (Honesty Day)  - ஏப்ரல் 30

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

ஒருநாளைக்கு நாம சராசரியா 200 பொய் சொல்றோமாம். அப்புடீன்னு இந்த நேர்மை தினத்த கண்டுபிடிச்ச எழுத்தாளர் கோல்ட்பேர்க் தன்னோட புத்தகத்துல சொல்லியிருக்கார். இந்த தினத்தன்னிக்கு பொய்யே சொல்லக் கூடாதாம்.

‘படுக்கைய மடிச்சு வை’ தினம் (Clean up Your Room Day) - மே 10

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

‘தூங்கி எழுந்ததும் படுக்கைய மடிச்சு வைக்க மாட்டியா?’ - காலையில மம்மி, டாடி தொடங்குற இந்த பூஜை, ‘ரூமை எப்புடி குப்ப மாதிரி வெச்சிருக்க பாரு’, ‘சாப்பிட்ட தட்ட எடுத்துட்டுப் போய் போடு’னு தொடர்ந்துகிட்டே இருக்கும். அதுவும் லீவு நாட்கள்ல கேட்கவே வேணாம். மம்மி - டாடி சொல்லுறதை வருஷத்துல ஒரு நாளாச்சும் கேக்கணும்ல?! அதுக்காகதான் இந்த ‘ரூம் க்ளீனிங் டே’!

‘நாயை வேலைக்குக் கூட்டிட்டுப் போங்க’ தினம் (Take your dog to work day) - தந்தையர் தினத்துக்கு அடுத்த வெள்ளிக்கிழமை

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

`நாய் வளர்க்குறவங்க, தினமும் வேலைக்குப் போகும்போது அதை வீட்டுக்குள்ள வெச்சு பூட்டிட்டுப் போறீங்களே, ஒருநாள் உங்க நாய் உங்கள வீட்டுக்குள்ள வெச்சுப் பூட்டிட்டுப் போனா என்ன ஆகும்?’ - இப்படி நாய்களின் நலனுக்காக வியர்வை சிந்தி யோசிச்ச ஒரு சங்கம், செல்ல நாயை ஒருநாள் குஷிப்படுத்த கண்டுபிடிச்ச தினம்தான், ‘நாயை வேலைக்குக் கூட்டிட்டுப் போங்க’ தினம். அமெரிக்கா போன்ற நாடுகள்ல கொண்டாடுறாங்க. நம்மூருல வேலை பார்க்கிற இடத்துக்கு நாயை கூட்டிட்டுப் போனா, நமக்கு வேலை போயிரும்!

சர்வதேச முத்த தினம் (International Kissing Day) - ஜூலை 6

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

‘அடடா! முத்த தினமா..?!’னு அதிகமா சந்தோஷப்படாதீங்க மக்கா... இது இங்கிலாந்து, அமெரிக்கா மாதிரி நாடுகள்லதான் கொண்டாடப்படுது.

எஜமான் தினம் (Boss day) - அக்டோபர் 16

‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..?!

ஜூஸுக்கும் பாஸுக்கும் என்ன வித்தியாசம்? ஜூஸ் எப்பவுமே கூலா இருக்கும்; பாஸ் எப்பவுமே ஹாட்டா இருப்பாரு. ஹாட்டான பாஸை கூல் பண்ணுறதுக்கான தினம்தான் இது. பாஸ் ஆபீஸுக்குள்ள என்ட்ரி ஆகுறதுக்கு முன்னாடியே அவர் கேபின்ல அலங்காரம் பண்ணி, அவரை வரவேற்று வெரி ஹேப்பி ஆக்குறதுதான் இந்த நாளின் குறிக்கோள், கொண்டாட்டம். வெளிநாட்டுல இதை ஒரே ஒரு நாள்தான் கொண்டாடுறாங்க. ஆனா, நம்மூர்ல பலபேர் பாஸுக்கு ட்ரீட்டும் டிமிக்கியும் கொடுத்து, தினமும் பாஸ் டே கொண்டாடிக்கிட்டுதானே இருக்கோம்!

ஆக, 365 நாளும் ஹேப்பி டேதான் டியூட்ஸ்!

ஜெ.விக்னேஷ் ஓவியம்:பிரேம் டாவின்சி