Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

சிந்துவின் ஸ்வீட் லைஃப்!

சன் டி.வி ‘தெய்வமகள்’ சீரியலில் ‘திலகவதி’ கேரக்டரில் தன் எதார்த்தமான நடிப்பால் அசத்திக்கொண்டிருக்கிறார், சிந்து ஷ்யாம் கணேஷ். ‘‘கேரளா நான் பிறந்த மண். கிளாஸிக்கல் டான்ஸர். டென்த் படிச்சுட்டு இருந்தப்போ, ‘பூதக்கண்ணாடி’ மலையாளப் படத்துல மம்முட்டி சாரோட பொண்ணா நடிச்சேன். மோகன்லால் சாரோட பொண்ணாவும் ஒரு படத்துல நடிச்சேன். தொடர்ந்து பி.எஸ்ஸி., மேத்ஸ் படிச்சுக்கிட்டே, நிறைய சீரியல்கள்ல ஹீரோயினாவும், சில மலையாளப் படங்கள்லயும், நிறைய விளம்பரப் படங்கள்லயும் நடிச்சேன். நானும், தமிழ் நடிகரான ஷ்யாம் கணேஷும் ஒரு விளம்பரப் படத்துல நடிச்சப்போ அறிமுகமானோம். எங்க ரெண்டு வீட்டாரும், நாங்க நிஜ ஜோடியாக முடிவெடுத்தாங்க. தமிழ்நாட்டு மருமகள் ஆனேன்.

‘ஆய்த எழுத்து’ உள்ளிட்ட சில படங்கள்லயும், விஜய் டி.வி ‘ஸ்ரீராமன்  ஸ்ரீதேவி’, சன் டி.வி ‘ஆனந்தம்’னு நிறைய சீரியல்கள்லயும் நடிச்சேன். இப்போ ‘தெய்வமகள்’, விஜய் டி.வி ‘பகல் நிலவு’ சீரியல் கலெக்டர் ‘ரேவதி’ கேரக்டர், சில விளம்பரப் படங்கள், தயாராகிட்டு இருக்கிற ‘போகன்’ படத்துல ஜெயம் ரவியோட அக்கா கேரக்டர், கௌதம் கார்த்திக் நடிக்கிற ‘ரங்கோன்’ படம்னு வாழ்க்கை கேமரா முன்னாடி சுவாரஸ்யமா சுழன்றுட்டே இருக்கு. நடிப்பைத் தாண்டி என் வீட்டிலேயே பரதநாட்டிய கிளாஸ் எடுக்கிறேன். பரதநாட்டியத்துல மேற்படிப்பும் படிச்சுட்டு இருக்கேன். குடும்பம், நடிப்பு, டான்ஸ்னு வாழ்க்கை நிறைவா போயிட்டு இருக்கு!’’

கலக்குங்க... கலெக்டரம்மா!

சகலகலா சிஸ்டர்ஸ்!

கேபிள் கலாட்டா!

படிப்பு, நடிப்பு, நடனம், விளையாட்டு என பல துறைகளில் அசத்திக்கொண்டிருக்கும் நிருபமா - ஸ்ரீநிதி சகோதரிகள், கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்கள். ‘‘நான் ஏழாம் வகுப்பும் அக்கா நிருபமா எட்டாம் வகுப்பும் படிக்கிறோம். நாலு வருஷத்துக்கு முன்னாடி நடிக்கிற வாய்ப்பு எங்களைத் தேடிவர, ‘சுட்ட பழம் சுடாத பழம்’ படத்துல நாங்க ப்ரெண்ட்ஸா நடிச்சோம். கேமரா, புது அனுபவமாவும், சந்தோஷமாவும் இருந்துச்சு’’ என்று புன்னகைக்கிறார் தங்கை ஸ்ரீநிதி.

‘சாஸ்திரிகளான அப்பா சபேசனும், அரசு இணை இயக்குநரா இருக்குற அம்மா ராஜலக்ஷ்மியும் எங்களை ரொம்பவே என்கரேஜ் பண்ணுவாங்க. அதுதான் எங்க திறமைகளை நாங்க துணிச்சலா வெளிக்காட்டக் காரணம்’’ என்று துள்ளலுடன் பேசும் நிருபமா, ஜெயா டி.வி ‘அக்கா’ சீரியலில் நடித்துள்ளார். ‘‘முதல் படத்தைத் தொடர்ந்து மூணு திரைப்படங்கள்ல நடிக்கும்  வாய்ப்பு எங்களுக்கு வந்தது. இதுக்கு நடுவுல கலைஞர் டி.வி ‘சூரியபுத்ரி’ சீரியல், புதுயுகம் ‘நாயன்மார்கள்’ சீரியல், சுட்டி டி.வி நிகழ்ச்சிகள், பல விழிப்பு உணர்வு குறும்படங்கள், விளம்பரப் படங்கள்னு பிஸி ஆகிட்டோம். 10 வருஷமா சென்னை, மஹதி அகாடமி ஆஃப் மியூசிக் அண்ட் டான்ஸ்ல வரலக்ஷ்மி குருகிட்ட நடனம் கத்துக்கிற நாங்க, சமீபத்துலதான் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சபாவில் அரங்கேற்றம் செய்தோம். அரங்கேற்றத்துக்காக தற்காலிகமா நடிப்பை நிறுத்தியிருந்தோம். இனி நடிப்பு, விளையாட்டுனு அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க வேண்டியதுதான்’’ என்கிறார் நிருபமா துறுதுறுவென!

அக்கா, தங்கச்சி... மகிழ்ச்சி!


`Mr & Mrs கில்லாடிஸ்’...

கலக்கலோ கலக்கல்ஸ்!

கேபிள் கலாட்டா!

ஒவ்வொரு எபிசோடிலும் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் எதிர் பார்பை கூட்டிக் கொண்டே செல்கிறது, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘Mr & Mrs கில்லாடிஸ்’ நிகழ்ச்சி.

‘‘10 தம்பதிகளோட கோலாகலமா தொடங்கின இந்த நிகழ்ச்சியில், இப்போ ஆறு தம்பதிகள் களத்தில் இருக்காங்க. நடிகர் தீபக் தொகுப்பாளரா இருக்கும் இந்தப் போட்டியில, சக போட்டியாளர்களே நடுவர் களாக இருந்து, குறிப்பிட்ட எபிசோட் முடிவில் ஒவ்வொரு தம்பதியா எலிமினேட் செய்வாங்க’’ என நிகழ்ச்சி பற்றி உற்சாகமாகப் பேசு கிறார், அதன் இயக்குநர் விஜயகுமார்.

‘‘ஒரு சில இலக்குகளை நிகழ்ச்சிக்கு முன்பே சொல்லி யும், சில இலக்குகளை

ஆன் தி ஸ்பாட்டில் சொல்லியும் தம்பதிகளைச் செய்ய வெப்போம். அவங்களோட பாதுகாப்பை முதல்ல உறுதிப்படுத்திட்டு, அடுத்ததா அவங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவோம். ஒவ்வொரு இலக்கையும் பயிற்சியாளர்கள் முதல்ல செய்துகாட்டிட்டு, அப்புறமா போட்டியாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பாங்க.

இந்த நிகழ்ச்சிக்காகவே எல்லா தம்பதிகளும் நிறைய பயிற்சிகள் செய்து தங்களை ஃபிட் ஆக வெச்சிருக்கிறாங்க.

‘இவ்வளவு கஷ்டமான டாஸ்க் தேவைதானா?’னு பலரும் கேட்குறாங்க. தம்பதிகளுக்கு இடையிலான புரிதல், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன், தன்னம்பிக்கை, தீர்க்கமான முடிவெடுக்கிறது, விட்டுக்கொடுக்கிறது, அந்யோன்யம்னு இதையெல்லாம் வெளிக்கொண்டு வர்ற விதமாதான் இலக்குகளை தேர்வுசெய்றோம். தம்பதிகள், ‘ஒவ்வொரு எபிசோடிலும் நாங்க புதுவிதமான பாசப் போராட்டங்களை எதிர்கொள்றோம். வெறும் நடிப்பு, டான்ஸ் தாண்டி புதுப் புது சவால்களை ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கிறது சூப்பரா இருக்கு’னு ஹேப்பியா சொல்றாங்க.

இதுவரை 18 எபிசோட் முடிஞ்சிருக்கு. 25 எபிசோடுகள் வரை நடத்தி, அதன் பிறகு இறுதிப் போட்டி நடத்த முடிவு செஞ்சிருக்கோம். இறுதிப் போட்டியில, வெற்றி பெறும் தம்பதிக்கு பெரிய பரிசுத்தொகை காத்திருக்கு. அடுத்தடுத்த வாரங்கள்ல இன்னும் கடினமான இலக்குகளை போட்டியாளர்கள் ஆர்வமா செய்யப்போறாங்க. இந்த நிகழ்ச்சியைப் போல அடுத்தடுத்து பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். பார்க்க ஆர் யூ ரெடி?!’’

ச்சும்மா தெறிக்கவிடுறீங்க பாஸ்!

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 150

பகைமை தவிர்!

``விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் `அச்சம் தவிர்’ என்ற `கேம் ஷோ’ தொடக்கத்தில் நன்றாக இருந்தது. ஆனால், போகப்போக போட்டியாளர்களிடையே சண்டை, கோபம், வெறுப்பு என்று பார்ப்பவர்களை எரிச்சலூட்டி வருகிறது. `ஸ்போர்ட்டிவ் நேச்சர்’ என்பது போட்டியாளர்கள் அவர்களது நட்பை இழக்காமலேயே வெல்ல வேண்டும் என்பதுதானே..! ஆனால், `அச்சம் தவிர்’ போட்டி முடிவதற்குள் அவர்களிடையே தீராத பகை மூண்டுவிடும் போலிருக்கிறது. தயவுசெய்து பாஸிட்டிவ் எண்ணத்தை தூண்டும்விதத்தில் கேம் ஷோவை மாற்றி அமையுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் கோவையில் இருந்து சி.எஸ்.சித்ரா.

இதுவா `ஸ்மார்ட்’?!

அது ஒரு தொலைக்காட்சி விளம்பரம். அதில், ஐ.டி. துறையில் பணிபுரியும் இரண்டு தோழிகள் பேசிக்கொள்கின்றனர். `கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் போக வீடு பார்த்தாச்சா?’ என்று ஒருவர் கேட்க, `என் `உட்பி’ ரொம்ப ஸ்மார்ட்... ஏற்கெனவே வீடு பார்த்துட்டார்’ என்கிறார்.  திருமணமானவுடனேயே பெற்றோரை ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனம் செல்பவர்தான் ஸ்மார்ட் ஹஸ்பண்டா? முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெருகிவரும் சூழலில் இதுபோன்ற விளம்பரங்கள் அவற்றை நியாயப்படுத்துவதுபோல் இருக்கின்றன!’’ என்று வேதனைப்படுகிறார் சென்னையில் இருந்து பிரேமா.

கவர்ந்திழுக்கும் `காலைத்தென்றல்’!


``பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 7.45 மணிக்கு ஒளிபரப்பாகும் `காலைத்தென்றல்’ நிகழ்ச்சியில், சுவாமிநாதன் என்பவர் நல்ல பல கருத்துச்செறிவான விஷயங்களை சிறுகதைகள் மூலம் சொல்லி அசத்துகிறார். மேலும் அவர் கதை சொல்லும் பாங்கு கேட்பவர்களை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. இதுபோன்ற நல்ல விஷயங்களைக் கொடுத்துவரும் பொதிகை தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றி!’’ என்று மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறார் ஸ்ரீரங்கத்தில் இருந்து புவனா சாமா.