Published:Updated:

30 வகை பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...
பிரீமியம் ஸ்டோரி
30 வகை பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

30 வகை பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

30 வகை பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

30 வகை பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

Published:Updated:
30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...
பிரீமியம் ஸ்டோரி
30 வகை பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...
30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

பசி எடுக்கவில்லை, சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை, உடல் எடை அதிகரிக்கிறது, ஞாபகசக்தி குறைவாக இருக்கிறது, ஜலதோஷம் வாட்டியெடுக்கிறது... இப்படி எத்தனையோ பிரச்னைகளை உணவின் மூலமாகவே சரிசெய்ய நம் முன்னோர்கள் வழிவகை செய்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து... நம் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்கள், அருகில் கிடைக்கும் காய், கீரை, மூலிகை வகைகளைக்கொண்டு உடல் ஆரோக்கியத்தை உச்சத்தில் வைத்திருக்க உதவுவதுடன், சுவையிலும் அசத்தும் 30 வகை உணவு வகைகளை இங்கே வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரோக்கியம் எனும் செல்வத்தைக் குவித்து, வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!

தூதுவளை கூட்டு

தேவையானவை: தூதுவளைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு, முளைகட்டிய பச்சைப் பயறு - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: தேங்காய்த் துருவல், தோல் சீவிய இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸான விழுதாக அரைக்கவும். தூதுவளைக்கீரையை ஆய்ந்து, முளைகட்டிய பச்சைப் பயறுடன் சேர்த்து, உப்பு போட்டு நன்கு வேகவிடவும். அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து, எல்லாம் ஒன்றாக கலந்து கொதி வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த நிவாரணம் அளிக்கும்.

இஞ்சித் தொக்கு

தேவையானவை:  இளம் இஞ்சி - 25 கிராம், பச்சை மிளகாய் - 5, புளி - நெல்லிக்காய் அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கிக்கொள்ளவும். இதனுடன் புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:  சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இஞ்சி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

தானியப் பொடி

தேவையானவை: கொள்ளு - 2 டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - 10, மல்லி (தனியா), சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உளுத்தம்பருப்பு, ஓமம் - தலா அரை ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளு, எள், சீரகம், மல்லி (தனியா), மிளகு, ஓமம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:  கொள்ளுப் பயறை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்து குறையும். உடல் இளைப்பதற்கு கொள்ளு மிகவும் சிறந்தது.

சுண்டைக்காய் - வேப்பம்பூ துவையல்

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் - 20, வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூவை தனித்தனியாக, கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். இஞ்சியை தோல் சீவி, நறுக்கி, சிறிதளவு எண்ணெயில் வதக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை எண்ணெயில் தனியாக வறுக்கவும்.

வறுத்த சுண்டைக்காயுடன் புளி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, வேப்பம்பூ எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது, சூடான சாதத்தில் இந்த துவையலை சேர்த்துக் கலந்து சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மிளகு மோர்க்குழம்பு

தேவையானவை: கெட்டியான மோர் - 500 மில்லி, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2,  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப் பிலையை சேர்த்து வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதை மோருடன் சேர்த்துக் கலந்து, உப்பு போட்டு சூடாக்கி லேசாக கொதி வரும்போது, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட் களை தாளித்து சேர்த்து இறக்கவும்.

கறிவேப்பிலை - புதினா  பொடி

தேவையானவை: கொள்ளு - 25 கிராம், கறிவேப்பிலை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு - 2 டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, சீரகம், மல்லி (தனியா) - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, கறிவேப்பிலை, புதினா, மிளகு, சீரகம், சுக்கு, காய்ந்த மிளகாய், சீரகம், மல்லி (தனியா) எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும். ஆறியவுடன் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தப் பொடியை சேர்த்து சாப்பிடலாம். இதற்கு சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன்.

கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். கறிவேப்பிலையை வதக்கவும். இவற்றுடன் புளி, உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:  இந்தக் குழம்பை சில நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலை பித்தத்தை தணிக்கும். பார்வை மேம்பட உதவும்.

பூண்டு லேகியம்

தேவையானவை: பூண்டு - 100 கிராம், வெல்லம் - 50 கிராம், நெய் - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: பூண்டினை தோல் உரித்து சிறிதளவு நெய் விட்டு வதக்கி விழுதாக அரைக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து சூடாக்கி, கொஞ்சம் நெய் விட்டு வதக்கி இறக்கவும்.

குறிப்பு:  இந்த லேகியம் பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. வாயுத்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதயக் கோளாறு வராமல் தடுக்கும். தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு பால் அதிகரிக்கும்.

சுரைக்காய் மிளகூட்டல்

தேவையானவை: சுரைக்காய் - ஒன்று, மிளகு - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, பாசிப்பருப்பு - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாசிப்பருப்பை குழைவாக வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு சேர்த்து வறுத்து, தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கிளறவும். இதை ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸான விழுதாக அரைக்கவும். வாணலியில் வேகவைத்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து, கொதிக்கவிட்டு, வேகவைத்த சுரைக்காயும் சேர்த்துக் கிளறவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து ஒரு கொதிவிட்டு நன்றாக கலக்கி இறக்கவும்.

குறிப்பு: கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற  கூட்டு இது. புளி சேர்க்காத இந்த மிளகூட்டலை சூடான சாதத்தில் சேர்த்து நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

மூன்று சுவை பச்சடி

தேவையானவை: காய்ந்த வேப்பம்பூ - 25 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, மாங்காய்த் துண்டுகள் - 2 (பெரியது),  அச்சு வெல்லம் - 2 அச்சு, கடுகு - ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: மாங்காயை தனியாக வேகவைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்து, பிறகு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு வறுக்கவும்.  புளியைக் கரைத்துவிட்டு, கலவையில் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த மாங்காய், வெல்லம் சேர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்தவுடன் சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:  இனிப்பு, காரம், புளிப்பு எல்லாம் ஒன்று சேர்ந்த இந்தப் பச்சடி, சித்திரை மாதம் வருடப் பிறப்பு அன்று சிறப்பு உணவாக செய்யப்படும். அச்சு வெல்லம் இல்லாவிட்டால், பொடித்த வெல்லம் சிறிய கப் அளவு சேர்த்துச் செய்யலாம்.

முடக்கத்தான் தோசை

தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி - 200 கிராம், உளுந்து - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய், பூண்டுப் பல் - தலா 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: கீரையை சுத்தம் செய்துகொள்ள வும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரையை வதக்கவும். இட்லி அரிசி, உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கிரைண்டரில் சேர்த்து, இத்துடன் வதக்கிய கீரை, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை தோசையாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, இருபுறமும் சுட்டெடுக்கவும். 

குறிப்பு: முடக்கத்தான் கீரை கால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்; வீக்கத்தை குறையவைக்கும்.

மூலிகை பிடிகொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை ரவை - 200 கிராம், ஓமவல்லி இலை - 4, புதினா, முடக்கத்தான்கீரை இலை, பொன்னாங்கண்ணிக்கீரை இலை - தலா ஒரு கைப்பிடி அளவு, துளசி இலை - 10, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: ஓமவல்லி, புதினா, பொன்னாங்கண்ணிக்கீரை, துளசி, முடக்கத்தான்கீரை ஆகியவற்றை அலசி சுத்தம் செய்யவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு இவற்றை வதக்கிக்கொள்ளவும். மீதமுள்ள எண் ணெயை வாணலியில் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, தோல்சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து, ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் தண்ணீர் அளந்து நன்கு கொதிக்கவிடவும். மிளகு - சீரகத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து கோதுமை ரவையை தூவி கெட்டியாகக் கிளறி இறக்கவும்.  ஆறிய உடன் வதக்கிய கீரையை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு கீரைகளை சேர்த்து தயாரிக்கும் இந்தக் கொழுக்கட்டை, உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

வல்லாரை துவையல்

தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, புளி -  நெல்லிக்காய் அளவு, தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வல்லாரைக்கீரையை ஆய்ந்து, நீரில் அலசவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கீரை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி, வெங்காயத்தையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாயை சிறிதளவு எண்ணெயில் தனியாக வறுக்கவும்.

வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம், வதக்கிய கீரை, புளி, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு:  ஞாபகசக்தி அதிகரிக்க வல்லாரைக்கீரை உதவும்.

மல்டி கீரை வடை

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், தூதுவளைக்கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - மூன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: தூதுவளை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை, ஆகியவற்றை ஆய்ந்து, அலசி, சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். பருப்புகளை ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து தண்னீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். இந்த மாவுடன் கீரைகள், உப்பு, நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள்  நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

கறிவேப்பிலை - பிரண்டை துவையல்

தேவையானவை: கறிவேப்பிலை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, இளசான பிரண்டை - 10  துண்டுகள், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறிய துண்டு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். இஞ்சியை தோல் சீவி, நறுக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, புதினா, பிரண்டை ஆகியவற்றை வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக சிறிதளவு எண்ணெயில் வறுக்கவும்.

வதக்கிய கறிவேப்பிலை, புதினா, பிரண்டை, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, புளி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: இந்தத் துவையல் பசியைத் தூண்டும்; ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

முருங்கக்கீரை அடை

தேவையானவை: வரகு அரிசி - 100 கிராம், சாமை அரிசி - 50 கிராம், சிவப்பு அரிசி - 50 கிராம், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம், முருங்கைக்கீரை, சிறுகீரை - தலா ஒரு கைப்பிடி அளவு, புதினா - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வரகு அரிசி, சாமை அரிசி, சிவப்பு அரிசி, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் தெளித்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். முருங்கைக்கீரை, சிறுகீரை, புதினாவை ஆய்ந்து, அலசி, பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும். இத்துடன் உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அடைக்கு அவியல் சிறந்த காம்பினேஷன். முருங்கைக்கீரை இரும்புச் சத்து, விட்டமின் சத்துக்கள் நிறைந்தது. உடல் வலிமையடைய உதவும்.

கீரை பொரித்த குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், முளைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் -  ஒரு டீஸ்பூன்.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: கீரைகளை அலசி, பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.  வாணலியை அடுப்பில் வைத்து, வேகவைத்த கீரையை சேர்த்து சூடாக்கி, அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கலந்து, வெந்த பருப்பும் சேர்த்துக் கிளறி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை:  மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலு மிச்சைப் பழ அளவு, காய்ந்த மிளகாய் - 2, சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வாணலியில் எண் ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலை சேர்த்து வறுத்து, சாம்பார் பொடியை சேர்த்துக் கிளறவும். புளியைக் கரைத்து கலவை யில் உற்றி, உப்பு போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டுக் கலந்து பரிமாறவும்.

மாங்காய் வற்றல் குழம்பு

தேவையானவை: மாங்காய் வற்றல் - 10, காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்து, தண்ணீர் தெளித்து நைஸான விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் புளியைக் கரைத்துவிட்டு, அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து... மாங்காய் வற்றல், உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்.

கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை: கண்டந்திப்பிலி - 10 துண்டுகள், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், புளி -  நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: நெய், ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... மிளகு, கண்டந்திப்பிலி, காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து, நீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து புளியைக் கரைத்து சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டுக் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இந்த ரசம், உடல் வலியை நீக்கும். ஜுரம் விடும் சமயத்தில் கஞ்சியுடன் இந்த ரசத்தை சேர்த்துச் சாப்பிடலாம்.

மூலிகை சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெற்றிலை - ஒன்று, துளசி இலை - 10, ஓமம் - ஒரு டீஸ்பூன், புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். வெற்றிலை, துளசி, ஓமம், புதினா ஆகியவற்றுடன் கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்கு வடிகட்டி, அந்த நீரை மாவில் ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக திரட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, சப்பாத்தியைப் போட்டு, மிதமான தீயில் வாட்டி எடுக்கவும்.

குறிப்பு:  கமகமக்கும் இந்த சப்பாத்தி, உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணைபுரியும்.

கரிசிலாங்கண்ணி கூட்டு

தேவையானவை: கரிசிலாங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பாசிப்பருப்பு - 100 கிராம், தேங்காய்த் துருவல் - சிறிய கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: கரிசிலாங்கண்ணிக்கீரையை ஆய்ந்து, அலசி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். பாசிப்பருப்பை குழைவாக வேகவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... மிளகு, சீரகம் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் சேர்த்து நீர் தெளித்து நைஸான விழுதாக அரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கவும்.

வாணலியில் வேகவைத்த கீரை, அரைத்த விழுது சேர்த்துக் கலந்து, வேகவைத்த பாசிப்பருப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்துக் கொதிக்கவிட்டு... தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும். 

குறிப்பு: கரிசலாங்கண்ணி மஞ்சள்காமாலை உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும்; முடி வளர்சிக்கு உதவும்.

கீரை புலாவ்

தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய அகத்திக்கீரை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய பொன்னாங் கண்ணிக்கீரை - ஒரு கப், பூண்டுப் பல் - 4, கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: அரிசியுடன் இரு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய பொன்னாங்க ண்ணிக்கீரை, அகத்திக்கீரை, புதினா, நறுக்கிய பூண்டுப் பல்  சேர்த்துக் கிளறி...  உப்பு, கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். இதை சாதத்துடன் நன்கு கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

கீரை புளிப்பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை - ஒரு கப், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் - 50 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரையை வதக்கி, புளியைக் கரைத்து விடவும். கீரை வெந்ததும் வெல்லம், உப்பு சேர்த்து,  அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இது வற்றல் குழம்பு சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.

வெஜிடபிள் - கீரை சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய கோஸ் - சிறிதளவு, சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: வாணலியில் நெய் விட்டு கீரை, கோஸ் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, சோள மாவைக் கரைத்து விட்டு, தேவையான நீர் சேர்த்து லேசாக கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்துக் கலந்து சூடாக சாப்பிடவும்.

குறிப்பு: சாப்பிடுவதற்கு முன்பாக இந்த சூப் குடித்தால், நன்கு பசி எடுக்கும்.

கீரை போண்டா

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு - 2 கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய அரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, உருளைக்கிழங்கு - ஒன்று, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். கீரையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, வேகவைத்த உருளைக்கிழங்கு, கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, தேவையான நீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். செய்து வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

அருகம்புல் ஜூஸ்

தேவையானவை: அருகம்புல் - ஒரு கட்டு, பனங்கல்கண்டு - 10, இஞ்சிச் சாறு - ஒரு டீஸ் பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: அருகம்புல்லை நன்றாக அலசி, தேவையான தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டவும். பனங்கல் கண்டை நன்கு பொடித்து வடிக்கட்டிய சாற்றுடன் சேர்க்கவும். உப்பு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.
அருகம்புல் கொழுப்புச்சத்தைக் குறைக்கும். உடல் இளைக்க உதவும்.

கீழாநெல்லி தயிர் பச்சடி

தேவையானவை: கீழாநெல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தயிர் - 100 மில்லி, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: கீழாநெல்லி இலையை ஆய்ந்து, அலசவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு  கீழாநெல்லி இலையை வதக்கி... தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை தயிருடன் சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு: வயிற்றுவலி, குடல் புண்,  மஞ்சள்காமாலை போன்றவற்றுக்கு கீழாநெல்லி மருந்தாக பயன்படுகிறது.

நெல்லிக்காய் அல்வா

தேவையானவை: நெல்லிக்காய் - 10, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு - 10, நெய் - 100 மில்லி, விருப்பமான ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: நெல்லிக்காயை லேசாக வேகவிட்டு, கொட்டையை எடுத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு, அரைத்த நெல்லிக்காயை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் சர்க்கரை சேர்த்து நன்றாக  கிளறி... ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, வறுத்த முந்திரியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: நெல்லிக்காய் ரத்த சோகை போக்கும்; கண்ணுக்கும் மிகவும் நல்லது.

அங்காயப் பொடி

தேவையானவை: கடுகு, மிளகு - தலா 2 டீஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 15, தனியா - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை  பாரம்பர்ய சமையல்! - பாட்டி கைப்பக்குவம்...

செய்முறை: உப்பு நீங்கலாக மற்றப் பொருட்கள் ஒவ்வொன்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுத்து, ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு பொடித்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: சாதத்துடன் அங்காயப் பொடியை சேர்த்து, நெய் அல்லது நல்லெண்னெய் விட்டுக் கலந்து சாப்பிடலாம். இது... வயிற்றுவலி, அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் போக்கும். 

தொகுப்பு: பத்மினி 
படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism