Published:Updated:

“நிச்சயமா நீ நடிக்கணும்!'' - கைகொடுத்த கணவர்...

“நிச்சயமா  நீ நடிக்கணும்!'' - கைகொடுத்த கணவர்...
பிரீமியம் ஸ்டோரி
“நிச்சயமா நீ நடிக்கணும்!'' - கைகொடுத்த கணவர்...

ஃப்ளாஷ்பேக்

“நிச்சயமா நீ நடிக்கணும்!'' - கைகொடுத்த கணவர்...

ஃப்ளாஷ்பேக்

Published:Updated:
“நிச்சயமா  நீ நடிக்கணும்!'' - கைகொடுத்த கணவர்...
பிரீமியம் ஸ்டோரி
“நிச்சயமா நீ நடிக்கணும்!'' - கைகொடுத்த கணவர்...
“நிச்சயமா  நீ நடிக்கணும்!'' - கைகொடுத்த கணவர்...

ன்றும் அதே புன்னகைதான்  நடிகை கே.ஆர். விஜயாவின் அடையாளமாக இருக்கிறது. தன்னுடைய எழுபது வயதுகளிலும் தன் திரைப் பயணத்தை தொடர்ந்து வரும் புன்னகை அரசியை, அவரது வீட்டில் சந்தித்தோம்.

சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அவர் கணவர் வேலாயுதம் மறைவு கே.ஆர்.விஜயாவை நிலைகுலையச் செய்திருந்தாலும், அவர் நினைவுகளைப் பேசி தன்னை மலர்த்திக்கொள்கிறார்.

‘‘சின்ன வயசுலயே ‘கற்பகம்’ படம் மூலமா சினிமா வாய்ப்பு கிடைச்சது. என்னோட ரெண்டாவது படத்தில் நடிக்கும்போதுதான் தொழிலதிபரான அவரைச் சந்திச்சேன். ரெண்டு வருஷம் கழிச்சு, 1966-ல் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டோம். ஒரு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நான் நடிக்கிறதை அவர் விரும்புவாரா என்பது கொஞ்சம் குழப்பமா இருந்தது. டெலிவரி முடிஞ்ச சில மாதங்களில் அவர்கிட்டயே, ‘நான் நடிக்கணுமா?’னு கேட்டேன். ‘நிச்சயமா நடிக்கணும்! கடவுள் கொடுத்த திறமையை வீணாக்கிட்டு வீட்டுல சோம்பேறியா உட்காரலாமா? உனக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க, புகழ் இருக்கு. ஒரு குழந்தை பிறந்துட்டதால, இது எல்லாத்தையும் விட்டுட்டு வர்ற தியாகத்தை நீ ஏன் பண்ணணும்?’னு அவர் சொன்னப்போ, நான் நெகிழ்ந்துபோயிட்டேன். அப்பவும், இப்பவும் நடிகைகளை திருமணத்துக்கு அப்புறம் அவங்க கணவர்கள்  நடிப்பில் இருந்து பிரிச்சு நிப்பாட்டுறதை நாம பார்க்கிறோம். ஆனா, என் கணவர் ஊக்கம் கொடுத்து, முழுமையான புரிதலோட வாழ்க்கை முழுக்க என்னோட இணைஞ்சிருந்தது என் வரம்’’ எனும்போது நெகிழ்கிறார்.

‘‘ஒவ்வொரு முறை நான் ஷூட்டிங் கிளம்பும் போதும், என்னை அவரே கார்ல வந்து டிராப் பண்ணிட்டு, நான் தங்குற இடம், கார் ஓட்டுநர், மேக்கப்புக்கான ஏற்பாடுகள்னு எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டுதான் கிளம்புவார். எனக்கு ஷூட்டிங் இருந்தாலும், அவர் வேலை விஷயமா வெளிய போயிருந்தாலும், மதியம் சாப்பிட ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து, சேர்ந்துதான் சாப்பிடுவோம்.

“நிச்சயமா  நீ நடிக்கணும்!'' - கைகொடுத்த கணவர்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுக்கு முன்னாடி நாங்க இருந்த வீடு, பெரிய பங்களா. என் அம்மா, தங்கைகள், அவரோட கூடப் பிறந்தவங்க, உறவினர்கள்னு நிறைய பேர் இருந்தோம். ஸ்விம்மிங் பூல், ஹோம் தியேட்டர்னு அவ்ளோ பிரமாண்டமா, அழகா கட்டினார். அவருக்கு உடல் நலம் குன்றியதுமே, ‘உன்னால இவ்வளவு பெரிய வீட்டை இனி மெயின்டெய்ன் பண்ண முடியாது, எனக்கு ஏதாச்சும்னா நீ பின்னாடி கஷ்டப்படக் கூடாது’னு சொல்லி, அந்த வீட்டை விற்று செட்டில் பண்ணிட்டார். அவசர அவசரமா தி.நகர்ல இடம் வாங்கி, இப்போ நான் இருக்கிற இந்த வீட்டைக் கட்டினார்.

கடந்த 10 - 12 வருஷமாவே அவருக்கு உடம்பு சரியில்லை. நான்தான் கூடவே இருந்து பார்த்துக் கிட்டேன். விசேஷங்களுக்கும், துக்கங்களுக்கும் போகாமத் தவிர்த்துடுவேன். ஆச்சி மனோரமா இறந்தப்போகூட போகமுடியல. ``இப்படி எங்கேயும் போகாமல் இருந்து உன்னை வருத்திக்காதே. நாளைக்கு நான் இல்லைன்னாலும், நீ தைரியமா, தனிச்சு இயங்கப் பழகணும்’னு அவரோட பிரிவுக்கு என்னைத் தயார்படுத்திட்டே இருப்பார். ‘நான் இல்லைங்கிறதுக்காக நீ உன் மேல் கவனம் இல்லாம இருக்கக் கூடாது. பூ, பொட்டுனு அழகா டிரெஸ் பண்ணிக்கணும்’னு சொல்வார். ‘அய்யோ, தயவுசெஞ்சு இப்படியெல்லாம் பேசாதீங்க’னு பதறினாலும், தொடர்ந்து இதையெல்லாம் சொல்லிட்டே இருப்பார். 

‘ஞாயிற்றுக் கிழமைகள், விசேஷ நாட்களில் வேலையைத் தவிர்த்துடு. எல்லா வசதியும் இருக்கு. எங்க போகணும்னு விரும்புறியோ போ. தொடர்ந்து நடித்துக்கொண்டிரு. நான் இல்லைன்னு எந்த விதத்திலும் நீ உன் உலகத்தைச் சுருக்கிக்கக் கூடாது’னுசொல்வார்.  இப்படி ஒருத்தர் கிடைக்க நான் எவ்வளவு கொடுத்து வெச்சிருக்கணும்!’’ என்றவரின் கண்களில் நீர் திரையிடுகிறது. இந்தத் தம்பதியின் மகள் ஹேமலதா, திருமணமாகி சென்னையில் வசிக்கிறார். அவருடைய இரண்டு மகன்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

‘‘கடந்த மார்ச் மாதம் அவர் இறந்து போனப்போ, அவருக்கு 82 வயசு. 50 வருஷம்... நிறைவானதொரு வாழ்க்கையை அவர்கூட வாழ்ந்துட்டேன். இப்போ அவர் நினைவுகள்கூட வாழ்ந்துட்டு இருக்கேன். மலையாளத்துல ஒரு பக்தி சீரியல்ல நடிச்சிட்டு இருக்கேன். பெரும்பாலும் கோயில்களில்தான் அந்த ஷூட்டிங் நடக்கும். வித்தியாசமான கோயில்கள், பூஜைகள்னு நேரம் கழியும்போது மனசுக்கு ஆறுதலா இருக்கும். ‘தொடர்ந்து நடி... அப்போதான் வெளிய போய் நாலு பேரைப் பார்ப்ப. உன் மனசு தனிமையில இருக்காது’னு மரணப்படுக்கையிலும் எனக்காக யோசிச்சு பேசின என் கணவரோட வார்த்தைகள் எவ்வளவு உண்மைனு புரியுது.

அவரோட அன்பும் அக்கறையும் நிறைந்த நினைவுகள் ஆயிரமாயிரம் என்கூட இருக்கும்போது, அவர் என்னை விட்டுப்  பிரிஞ்சுட்டாரா என்ன?!’’

- இப்போது கே.ஆர்.விஜயாவின் புன்னகையில் தெரிகிறார் வேலாயுதம்!   

 ஜெ.கலைவாணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism