Published:Updated:

பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!

பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!
பிரீமியம் ஸ்டோரி
பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!

சமூகம்

பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!

சமூகம்

Published:Updated:
பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!
பிரீமியம் ஸ்டோரி
பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!

 ‘பாகுபலி’ திரைப்படத்தில், ராணி ‘சிவகாமி’யாக வரும் ரம்யா கிருஷ்ணன், இரண்டு குழந்தைகளுக்கும் தன் இரண்டு மார்பகங்களிலும் அரியணையில் அமர்ந்தபடி அரசவையில் பாலூட்டும் காட்சி, மிக கம்பீரமான, வலிமையான காட்சி. இப்படி நிஜத்தில் தாய்மார்கள் பொதுவெளியில் பாலூட்டுவது சாத்தியம்தானா?

கஸ்ட் மாத தொடக்கத்தில், உலகம் முழுக்கத் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்தச் சூழலில், பொதுவெளியில் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதில் உள்ள சிரமங்களும், அதற்கான தீர்வுகளும் பேசுபொருளாகியிருப்பது வரவேற்கத்தக்கது.

தன் பிளாக்கில் ஒரு பெருநகரத்துப் பெண் எழுதி இருக்கிறார்... ‘குழந்தையுடன் விமான நிலையத்தில் காத்திருந்தேன். அது பசியில் அழ ஆரம்பித்தது.

பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!

பாலூட்டும் அறையைத் தேடி விமான நிலையம் முழுக்க அலைந்தேன். ஒரு பெரிய அறை தென்பட்டது. அது, புகைப்பவர்களுக்கான அறை. `பாலூட்டும் அறை’ என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்ற உண்மை புரிய, ஒரு முடிவெடுத்தேன். கழிவறை சென்றேன். சம்மணமிட்டு அமர்ந்தேன். என் குழந்தையின் பசியாற்றினேன். நம் இந்திய நாட்டில், பொது இடங்களில் பாலூட்டுவதற்கென அறை இல்லை. வெட்கக்கேடு!’

சென்னையைச் சேர்ந்தவர் மோகனா. `‘கோயிலுக்குப் போயிருந்தப்போ குழந்தை பசியில அழ ஆரம்பிச்சிடுச்சு. கொஞ்சம் சமாதானப்படுத்தி வீட்டுக்கு வந்துடலாம்னா நேரம் ஆக ஆக அதோட அழுகை கூடிக்கிட்டே போயிருச்சு. தவிச்சுப் போயிட்டேன் நான். அப்புறம் என்கூட வந்த ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமா துண்டை வெச்சு மறைச்சுக்க, பசியாத்தினேன். குழந்தை பால் குடி மறக்குற வரைக்கும் வெளியே எங்கேயும் போக வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்’' என்றார்.

பொது இடத்தில் பாலூட்டும் பெண் களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான். பெரும்பாலான பெண்கள் பாலூட்டும் காலம் வரை வீட்டுக்குள்ளேயே முடங்குகிறார்கள். அல்லது, வெளியில் சென்றாலும் பாலூட்டும் நேரத்துக்கு அரக்கப்பரக்க வீடு அடைகிறார்கள்.இந்தத் தயக்கங்களைக் களையவும், பாலூட்டும்போதும்கூட பெண் களின் மார்பகங்களை ஆபாசத்துட னேயே தொடர்புபடுத்தும் புத்தியை மாற்றவும், அதிரடியான, ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் உலகம் முழுக்கத் தொடங்கியுள்ளன.

பொது இடம் ஒன்றில் தங்கள் குழந்தைகளுடன் கூடும் தாய்மார்கள் அங்கேயே அவர்களுக்குப் பாலூட்டும் விழிப்பு உணர்வு நிகழ்வான ‘த குளோபல் பிக் லேட்ச் ஆன் (The Global Big Latch On) தினம், ஆகஸ்ட் மாதம் 1 மற்றும் 7 என, தாய்ப்பால் வாரத்தின் முதல் மற்றும் இறுதி நாட்களில் பல உலக நாடுகளிலும் ஒருங்கிணைக்கப் பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!

பாலூட்டுவது குறித்த பார்வை!

மேற்கத்திய நாடுகளில் பெண்கள் பொது இடங்களில் பாலூட்டுவது சர்ச்சையாகப் பார்க்கப்படவில்லை எனினும், சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் பெண்கள் பொது இடங்களில் பாலூட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சட்டரீதியாக இல்லையெனினும், கலாசார ரீதியாக அது ஆபாசமாகவே அணுகப்படுகிறது. இந்நிலையில், பிரேசில் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுலா டி’அவிலா, தன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டே அரசியல் அவையில் பேசுவதுபோன்று சமீபத்தில் வெளியான புகைப்படம், சமூக மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கு முன்னர், மனுலா தன் வீட்டில் தன் குழந்தைக்குப் பாலூட்டும் புகைப்படம் ஒன்றை தானே வெளியிட்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்டு, ‘விளம்பரத்துக்காகச் செய்கிறார்’ என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இருந்தாலும், ‘பொது இடத்தில் பாலூட்டுவதை கலாசாரத்துடன் தொடர்புபடுத்த வேண்டிய தில்லை, அது தாயின், குழந்தையின் உரிமை’ என்ற நிலைப்பாடே அதிகமாகப் பகிரப் பட்டது.      

நல்ல மனநிலை வேண்டும்!

`‘எங்கயாச்சும் வெளிய போயிருக்கும்போது, குழந்தை பசியில சிணுங்க ஆரம்பிக்கும். சிணுங்கினதுமே அது பாலுக்காகத்தான்னு புரிஞ்சு, நமக்குத் தானா பால் சுரக்க ஆரம்பிச்சிடும். சிணுங்கல் கொஞ்சம் கொஞ்சமா அழுகையாக, இன்னொரு பக்கம் நமக்குப் பால்கட்டியிருக்கும். ஊசி மாதிரி குத்துற அந்த வலியை எப்படிச் சொன்னாலும் ஆம்பளைங்களுக்குப் புரியவைக்க முடியாது. ஏன்னா, அது அவங்க வாழ்க்கையில அனுபவிச்சு இருக்காத கொடுமையான வலி.

இதை எல்லாம் தாங்கிக்கணுமே தவிர, நாம வெளியிடத்துல பால் கொடுக்க முடியாது. அப்படியே கொடுத்தாலும், சுத்தி இருக்குற கண்ணுங்களுக்கும் தடுப்புபோடுறதைப் பத்தி யோசிக்கிறதுதான், குழந்தையோட பசியாத்துறதைவிட பெரிய வேலையா இருக்கும். இப்போ இதைப்பத்தி பேசுற அளவுக்காச்சும் வந்திருக்கிறதே நல்ல விஷயம்தான்’' என்று வரவேற்றார், அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் நடுத்தர வயது அம்மா ஒருவர்.

பாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்!

தேவை... தாய்ப்பால் அறை!

தமிழக அரசு சென்ற வருடம்  தமிழகம் முழுவதும் 352 பஸ் நிலையங்களில் தாய்ப்பால் அறை வசதிகளை தொடங்கியது. ஆனால், இப்போது அது முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு   தாய்ப்பால் அறை கண்காணிக்கும் அரசு ஊழியர்களால் சொல்லப்படுகிறது. அதேநேரம் தர்மபுரி புறநகர் பகுதியில் இருக்கும் தாய்ப்பால் அறை சுத்தமாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் அங்கு வரும் பெண்கள் அதைப் பயன்படுத்துவதில்லை என்றும், திருச்சி பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் அறை எங்கு இருக்கிறது என்பதை தேடுவதே சிரமாக இருக்கிறது என்றும் மக்கள் கூறியிருக்கிறார்கள்.

பாலூட்டும் அறையில் வருகைப் பதிவேடு அவசியம் வைக்க வேண்டும். இதன் மூலம் திட்டத்தின் நோக்கம் பயன் தருகிறதா என்று அறிய முடியும். இரவிலும் இந்த அறைகளைப் பயன்படுத்தும் வசதி தேவை. பாதுகாப்புக்கு பெண் காவலரை பணியில் அமர்த்த வேண்டும். இதுபோன்ற தாய்ப்பால் அறை பேருந்து நிலையத்தில் எந்தப் பகுதியில் இருக்கிறது என ஆங்காங்கே போர்டு வைக்க வேண்டும். ஆனாலும், மற்ற இடங்களிலும் இந்த வசதி அடிப்படை என்பதை மனதில் நிறுத்தி, பாலூட்டும் தாய்மார்களை அரசு மனதில் வைக்க வேண்டும்.

-  கே.அபிநயா, ப.சரவணகுமார், தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism