Published:Updated:

“இஷ்டப்பட்டால் கஷ்டமில்லை!”

“இஷ்டப்பட்டால் கஷ்டமில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“இஷ்டப்பட்டால் கஷ்டமில்லை!”

முதலிடத்தைப் பிடிக்க, முத்தான சூத்திரங்கள்...சாதனை

“இஷ்டப்பட்டால் கஷ்டமில்லை!”

முதலிடத்தைப் பிடிக்க, முத்தான சூத்திரங்கள்...சாதனை

Published:Updated:
“இஷ்டப்பட்டால் கஷ்டமில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“இஷ்டப்பட்டால் கஷ்டமில்லை!”
“இஷ்டப்பட்டால் கஷ்டமில்லை!”

 ‘‘இன்னிக்கு நான் அடைந்திருக்கும் இந்த வெற்றி, என் பெற்றோர் என் மேல வெச்ச நம்பிக்கை. அது அவங்களோட ஆசை, கனவு எல்லாம். அதனால, அதை அடைந்தது எப்படினு நான் சொல்றதைவிட, அதை என்னை அடைய வெச்சது எப்படினு எங்கம்மா சொல்றது இன்னும் சிறப்பா இருக்கும்!’’

- சமீபத்தில் வெளியான சி.ஏ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த, சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையைச்  சேர்ந்த ஸ்ரீராமிடம், அவரின் சக்சஸ் சீக்ரெட் பற்றிக் கேட்டபோது இப்படிச் சொன்னார்.

இதோ, ஸ்ரீராமின் அம்மா பத்மா பேசுகிறார்... ‘‘ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதை அம்மாவால் நிச்சயம் உணர முடியும். அதைக் கண்டறிந்து, அம்மாதான் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பிள்ளையார்சுழி போடணும். என் பையன் சின்ன வயசுல பாடக் கணக்குகளை மத்த வங்களைவிட வேகமாவும், தவறில்லாமலும் செய்வதை, அவனோட தனித்திறமையா நான் கண்டறிஞ்சேன். அதில் அவனை மெருகேத்தினேன்.

யாரோடும் ஒப்பிட்டதில்லை!

சின்ன வயசில் இருந்தே எங்க மகனை யார்கூடவும் ஒப்பிட்டுப் பேசினதே இல்ல. அதேபோல, அவனோட சின்னச் சின்ன முயற்சிகளுக்கு, வெற்றிகளுக்கு பாராட்டிட்டே இருப்போம். அடிக்கடி எங்க குடும்பத்தோட எதிர்காலத் திட்டங்களைப் பற்றிப் பகிர்ந்துக்குவோம்.

வளர வளர, அவனும் தனக்குனு சில இலக்குகள், திட்டங்கள் வெச்சுக்கிட்டு, அதை எங்ககிட்ட சொல்ல ஆரம்பிச்சான். அவன் ஏழாம் வகுப்பு படிச்சப்போ, எங்க உறவினரின் பெண் ஒருவர் சி.ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று வெளிநாடு சென்றார். அப்போதான் சி.ஏ படிப்பு பற்றின தகவல்களை எங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அதையே லட்சியமா ஆக்கிட்டான்.

பொதுவா குழந்தைகளுக்கு அந்த வயசுல இருக்கிற லட்சியம், காலப்போக்கில் மாறிடும். அதுபோல, அவனுக்கும் வேற ஏதாச்சும் துறைகளில் ஈடுபாடு வந்தா, அதுக்கு உரிய சப்போர்ட் கொடுக்கலாம்னுதான் நாங்க நினைச்சோம். ஆனா, அவன் தன் லட்சியத்தை மாத்திக்கவே இல்லை.

உறுதியோட படிச்சான்!


பதினோராம் வகுப்பில் ஆர்ட்ஸ் குரூப்பை தேர்ந்தெடுத்தான். தினமும் ரெண்டு மணி நேரம் சி.ஏ நுழைவுத்தேர்வுக்குப் படிச்சான். எல்லோரும், ‘அதுல பாஸாகறது ரொம்பக் கஷ்டம்’னு சொன்னாங்க. ஆனா, ரொம்ப உறுதியா, தன்னம்பிக்கையோட படிச்சான். படிக்கிற நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்கள்ல  ஃப்ரெண்ட்ஸ், கேம்ஸ், சினிமானு எல்லா பசங்க மாதிரி இயல்பா இருப்பான்.

மகனுக்காக `விஆர்எஸ்'!

2012-ம் ஆண்டு, சி.ஏ படிப்பின் முதல்நிலைத் தேர்வில் ஸ்ரீராம் 180/200 மதிப்பெண் பெற்று, சேலம் அளவில் முதலிடம் பிடித்தான்.பையனோட எதிர்காலத்துக்காக என்னோட அரசாங்க வேலையை விட நான் முடிவெடுத்திருக்கிறதா கணவர்கிட்ட சொல்ல, ‘நீ வேலைக்குப் போ. நான் `விஆர்எஸ்' வாங்கிட்டு அவனைப் பார்த்துக்கிறேன்’னு சொன்னார் அவர். அப்பாவா மட்டுமில்லாம, அம்மாவாவும் இருந்து அவனுக்கான எல்லா வேலைகளையும் பார்த்துப் பார்த்து செஞ்சார்.

பாராட்டுகள்தான் உத்வேகம்!

2013-ம் ஆண்டு நடந்த சி.ஏ .இன்டர்மீடியட் தேர்வில், ஸ்ரீராம் 551/700 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 7-வது இடத்தைப் பிடித்தான். எங்களால் எந்தளவுக்கு அவனை உற்சாகப்படுத்த முடியுமோ, கொண்டாட முடியுமோ, அதை எப்பவும் செய்துட்டே இருப்போம். 2014-ம் ஆண்டு கம்பெனி செக்ரட்டரி தேர்வில் இந்திய அளவில் முதலிடமும், இப்போ சி.ஏ இறுதி தேர்வில் 613/800 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடத்தையும் வாங்கியிருக்கான். இதுல, எங்களைவிடவா அவன் சந்தோஷப்பட்டுடப் போறான்?!’’

தன் பிள்ளை குறித்த தாயின் பெருமிதம், எப்போதுமே அழகுதான்!

- சு.சூர்யா கோமதி,   படங்கள்: ரா.வருண் பிரசாத்

கவனிக்க..!

*  பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப் பிரிவில் படித்தவர்களும் சி.ஏ படிக்கலாம்.

* சி.ஏ-வை பகுதிநேரப் படிப்பாக அல்லாமல் முழுநேரப் படிப்பாகத் தேர்வுசெய்வது அவசியம்.

* சி.ஏ தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும்.

* மூன்று வருட இன்டர்ன்ஷிப் செய்ய, அனுபவம் உள்ள சிறந்த ஆடிட்டராகத் தேர்வுசெய்ய வேண்டும். அவர்களிடம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். ரெகுலராகப் பயிற்சி செய்யாமல் சான்றிதழ் மட்டும் வாங்கிக்கொள்வது பலன் தராது.

* சி.ஏ-வில் தேர்ச்சி பெற, தினமும் இரண்டு மணி நேரம் தவறாமல் படிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இஷ்டப்பட்டால் கஷ்டமில்லை!”

சி.ஏ  படிப்பு... ஸ்ரீராம் தரும் டிப்ஸ்!

‘‘என்னைப் பொறுத்தவரை சி.ஏ மிகவும் எளிமையான படிப்பு. ஆனால், ஆரம்பத்தில் இருந்து இடைவிடாமல் படிக்க வேண்டும். சி.ஏ படிப்பில் சேர ஐ.சி.ஏ.ஐ. (Institute Of Charterded Accountants Of India) நடத்தும் சி.பி.டி (Common Proficiency Test) என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். www.icai.org என்ற ஆன்லைன் முகவரியில் கிடைக்கும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யலாம். இல்லையென்றால் ஐ.சி.ஏ.ஐ கிளைகளிலும் வாங்கலாம்.

இது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும். 12-ம் வகுப்புத் தேர்வின் ரிசல்ட்  வரும் முன்னரே, அதே கல்வியாண்டில் சி.ஏ நுழைவுத் தேர்வை எழுத முடியும்.

நுழைவுத்தேர்வுக்கான சிலபஸில் அக்கவுன்ட்ஸ், எகனாமிக்ஸ், மெர்கன்டைல் லா, குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் என மொத்தம் நான்கு பாடப்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைந்தது 35% மதிப்பெண்களும், எல்லா பாடப் பிரிவுகளின் சராசரி மதிப்பெண் குறைந்தது 50 சதவிகிதமும் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும். கேள்விகள் அனைத்தும் தெரிவு (அப்ஜெக்டிவ்) முறையில் கேட்கப்படும்.

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, 9 மாதத்துக்குப் பிறகு இன்டர்மீடியட் தேர்வு நடைபெறும். அதில் 7 பாடப்பிரிவுகள் இருக்கும் (அக்கவுன்ட்ஸ், பிசினஸ் லா எத்திக் அண்ட் கம்யூனிகேஷன், அட்வான்ஸ்டு அக்கவுன்ட்ஸ், காஸ்ட்டிங் அண்ட் ஃபினான்ஷியல் மேனேஜ்மென்ட், டைரக்ட் அண்ட் இன்டைரக்ட் டாக்ஸ், ஆடிட்டிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அண்ட் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்). தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைந்தது 40% மதிப்பெண்களும், எல்லா பாடப்பிரிவுகளின் சராசரி மதிப்பெண் குறைந்தது 50 சதவிகிதமும் எடுக்க வேண்டும். இந்தத் தேர்வில் தெரிவு  (அப்ஜெக்டிவ்)  வினாக்களாக இல்லாமல் சொல்யூஷன் வகை சார்ந்த வினாக்கள் கேட்கப்படும்.

இன்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், உங்கள் பகுதியில் இருக்கும் ஆடிட்டரிடம் மூன்று வருடங்கள் இன்டன்ஷிப் மேற்கொள்ள வேண்டும். பிறகு மெயின் தேர்வு எழுத வேண்டும். 7 பாடப்பிரிவுகளைக் கொண்ட மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், பெரிய நிறுவனங்களில் சிறப்பான பணி வாய்ப்புகள் வசப்படும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism