செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

ஸ்லிம்மி பியூட்டி... ஜனனி அய்யர்! ஆடைகள், ஷாப்பிங் பற்றிப் பேசும்போது, அந்தப் பெரிய கண்களின் மொத்த விட்டமும் வெளிப்படுகிறது!

அம்மா தந்த அந்த டிரெஸ்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபாவளிக்கு எங்க வீட்ல எல்லோரும் சேர்ந்துதான் ஷாப்பிங் போவோம். ரொம்ப சந்தோஷமா, கலகலப்பா இருக்கும். ஆனா, நான் சினிமாவுக்கு வந்த பிறகு ஒருமுறை, வீட்டில் தீபாவளி ஷாப்பிங்குக்கு நாள் குறிச்ச அன்னிக்கு எனக்கு ஷூட்டிங். ‘சரி, நீ தனியா போய் எடுத்துக்கோ, நாங்கள்லாம் கிளம்புறோம்’னு என்னை மட்டும் விட்டுட்டு எல்லோரும் போயிட்டாங்க. ஷூட்டிங்ல இருந்தாலும், மனசு என்னவோ அவங்ககூடவே ஷாப்பிங்குக்கு போயிருச்சு. சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, எல்லாரும் அவங்கவங்க எடுத்துட்டு வந்த டிரெஸ்ஸை எங்கிட்ட காட்ட, எனக்கு அழுகையே வந்துருச்சு. அப்போ எங்க அம்மா, ‘உனக்கும் நானே எடுத்துட்டு வந்துட்டேன்...’னு ஒரு சல்வார் பையை என் கையில் கொடுத்தாங்க. வாழ்க்கையில அதுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ டிரெஸ் எடுத்திருந்தாலும், அந்த டிரெஸ்தான் எப்பவும் என்னோட ஃபேவரைட்.

பச்சை தமிழச்சி!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

எனக்கு ரொம்பப் பிடிச்சது, வெஸ்டர்ன் ஆடைகள். ஆனா வீட்டில் ஏதாவது விசேஷம்னாலோ, கோயிலுக்குப் போறதுனாலோ பச்சை தமிழச்சியா புடவை கட்டுவேன். புடவை கட்டிட் டாலே ஒரு பாந்தம் வந்துடும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஆன்லைன் ஷாப்பிங்... ஆகாது!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

என் நண்பர்கள் சிலாகித்துச் சொல்றதைக் கேட்டுட்டு, சில ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங் களில் போய் பார்த்திருக்கேன். ஆனா, அதில் ஆடை வாங்க மனசு ஒப்புக்காது. ஏன்னா, நான் எந்த டிரெஸ்ஸையும் ட்ரயல் பார்க்காம வாங்க மாட்டேன். அது ஆன்லைனில் முடியாது என்பதால, அதுக்கும் எனக்கும் எப்பவுமே ரொம்ப தூரம்தான்.

ரசிப்பேன்... காப்பியடிக்க மாட்டேன்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

நான் பக்கா சென்னைப் பொண்ணு. சிட்டியில் வளர்ந்த தால, ஃபேஷன்ல எப்பவும் அப் டேட்டா இருப்பேன். பொதுவா ஆடைகளிலோ, ஸ்டைலிலோ மத்தவங்களைப் பார்த்து காப்பி அடிக்க மாட்டேன். ஆனா, எல்லாரோட ஆடைத் தேர்வை யும் ரசிச்சுப் பார்ப்பேன். அதில் அவங்களோட ப்ளஸ், மைனஸ் கவனிப்பேன்.

ஆல் கலர்ஸ்... ஓகே!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

ஆடைகள் வாங்கும்போது, மெட்டீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதுக்காக பிராண்டட் ஆடைகள்தான் அணிவேன்னு இல்ல. பெரும்பாலும், பொட்டீக்களில்தான் டிரெஸ் எடுப்பேன். எனக்கு நல்ல பொட்டீக்குகளை அறிமுகப்படுத்திட்டே இருக்கிற என் தோழிகளுக்கு நன்றிகள். எனக்கு குறிப்பிட்ட கலர்கள்தான் பிடிக்கும் என்பதெல்லாம் இல்ல. அதனால, எல்லா நிறங்களிலும் ஆடைகள் எடுப்பேன். என் வார்ட்ரோப் வானவில்லாதான் இருக்கும்!  பிரின்டட் ஆடைகள் ஃபேஷனபிள் லுக் கொடுக்கும் என்பதால, அது அதிகமா பிடிக்கும்.

நான் அப்பவே அப்படி!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே மாடலிங் செஞ்சுட்டு இருந்ததால, அப்போ இருந்தே டிரெஸ்ஸிங்கில் ரொம்ப கவனமா, ரசனையோடதான் இருப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு, அந்த ரசனை இன்னும் மெருகேறிடுச்சு. இப்போ கிட்டத்தட்ட நமக்குள்ளயும் ஒரு காஸ்ட்யூம் டிசைனர் உருவாகிட் டாங்கள்ல!

கொஞ்சம் ஆடம்பரமா..!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

சினிமா நிகழ்ச்சிகளுக்குப் போகும் போது, அங்க எல்லாருமே ரொம்ப கிராண்டா டிரெஸ் பண்ணிட்டு வரு வாங்க. அங்க ‘நான் ரொம்ப சிம்பிள்’னு சொல்லிட்டுப் போனோம்னா, அந்த கேமரா வெளிச்சத்தில் நாம கண்ணுக்கே தெரியாமப் போயிடுவோம். அதனால, அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கொஞ்சம் கிராண்டான ஆடை, அதுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல், அக்ஸசரீஸ்னு கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா ஸ்பெஷலா’தான் ரெடியாகிப் போகணும். அது அந்த இடத்தில் நம்மை கான்ஃபிடன் ஸோடும் நிக்கவைக்கும்.

ஸ்கின் டோனுக்கு ஏற்ற டிரெஸ்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

நான் ரொம்ப கலர் கான்ஷியஸான பொண்ணு. கல்லூரியில் படிக்கும்போதே என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோ ரும், ‘உனக்கு மட்டும் எப்படி இவ்ளோ அழகான கலர் காம்பினேஷன்கள் கிடைக்குது?’னு கேட் பாங்க. அதுக்காக நிறைய மெனக்கெடுவேன். என் ஸ்கின் டோனுக்கு ஏற்ற மாதிரி டிரெஸ் எடுக்கிறதை, என் ப்ளஸ்னு நினைக்கிறேன்.

சமந்தா... செம!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 12

இப்போது எல்லா ஹீரோயின்ஸும் சூப்பரா டிரெஸ் பண்றாங்க. அதில் பெர்சனலா எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க, சமந்தா. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெரைட்டியா டிரெஸ் பண்ணிட்டு வந்து நிப்பாங்க. ஹேர் ஸ்டைல், அக்ஸசரீஸ்னு உச்சியில் இருந்து பாதம்வரை அந்த டிரெஸ்ஸுக்கு ஏற்ற மாதிரி தன்னை அழகா வெளிப்படுத்திக்கு  வாங்க...செம மாஸ் பாஸ்!’’

- சு.சூர்யா கோமதி

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism