Published:Updated:

விசில் கலை வித்தகி!

விசில் கலை வித்தகி!
பிரீமியம் ஸ்டோரி
விசில் கலை வித்தகி!

அவள் 16

விசில் கலை வித்தகி!

அவள் 16

Published:Updated:
விசில் கலை வித்தகி!
பிரீமியம் ஸ்டோரி
விசில் கலை வித்தகி!
விசில் கலை வித்தகி!

ர்வதேச அளவிலான விசில் போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறார், சென்னை, பாண்டிபஜாரை சேர்ந்த ஸ்வேதா சுரேஷ். தொடர்ந்து 18 மணி நேரம் விசிலில் பாடி, இந்திய சாதனையாளர் புத்தகம் மற்றும் ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் இவர், விசில் இசை, பரதநாட்டியம், கர்னாடக சங்கீதம், புல்லாங்குழல் கலைஞர் என பன்முகம் கொண்டவர்.

சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில், பி.எஸ்ஸி., காட்சி சார் தகவலியல் (விஸ்காம்) பயின்றிருக்கும் ஸ்வேதாவை கௌரவிக்கும் வகையில், தங்கள் முன்னாள் மாணவிக்கு அக்கல்லூரியில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் விசில் பெண்ணைச் சந்தித்தோம்.

‘‘சின்ன வயசுல பாட்டு கிளாஸும், டான்ஸ் கிளாஸும் போனேன். ஒருமுறை விளையாட்டுத்தனமா ஒரு பாடலை விசிலில் பாட, அதை அம்மா பார்த்துட்டாங்க. திட்டுவாங்களேனு நான் பயந்துபோய் நிக்க, ‘விசில்லயே எப்படி இவ்ளோ அழகா பாடுற! இந்தத் திறமையை நீ வளர்த்துக்க உனக்கு சப்போர்ட்டா நாங்க இருக்கோம்’னு சொன்னதுனாலதான், இன்னிக்கு நான் சர்வதேச அரங்குகளில் ஏறும் அளவுக்கு வளர்ந்திருக்கேன்’’ என்று சொல்லும் ஸ்வேதாவுக்கு, இப்போது 24 வயதாகிறது.

‘‘ ‘சாதகப் பறவை’ இசைக் குழுவில் கடந்த 8 வருஷமா பாடிட்டு இருக்கேன். தமிழகம் முழுக்க இதுவரை 2000-க்கும் மேலான மேடைகளில் பாடி இருக்கேன். குரலில் மட்டும் இல்லாம, இடையிடையே விசிலிலும் பாடுவேன். அதைப் பார்த்த டி.இமான் சார், தான் இசையமைக்கும் படங்களில் விசில் போர்ஷன்கள் பாடும் வாய்ப்புகள் தர ஆரம்பிச்சார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘என்னடா என்னடா’ பாடல், ‘ஜில்லா’ படத்தில் ‘வெரசா போகயில’ பாடல், ‘கயல்’ படத்தில் ‘பறவையா பறக்கிறோம்’ பாடல்னு இந்தப் பாடல்களில் எல்லாம் விசில் போர்ஷன் பாடினேன். தொடர்ந்து ‘போக்கிரி ராஜா’ படத்தில் `வால்ட்ஸிங் விசில் தீம்' (Waltzing whistle theme) மூலமாக பல இடங்களில் பாடியிருக்கிறேன். வெளிவரவிருக்கும் ‘வாகா’ படத்தில் ‘ஏதோ மாயம் செய்கிறாய்’ பாடலிலும் விசிலில் பாடியிருக்கேன்’’ என்று தன் திரை இசைப்பயணம் பற்றிச் சொன்ன ஸ்வேதா, 2008-ம் ஆண்டில் இருந்து இந்திய விசில் இசை சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்.

‘‘சாரே ஜஹான் சே அச்சா பாடலை, இந்தியாவைச் சேர்ந்த 48 விசிலர்கள் இணைந்து பாடிய அனுபவம் மறக்க முடியாதது. பலரும் என்னை ‘நீ விசில் அடிக்கிறியா?’னு விசாரிக்கும்போது, எங்கப்பா அவங்ககிட்ட எல்லாம் ‘விசில் அடிக்கிறது இல்லை... விசில் இசைக்கிறதுனு சொல்லுங்க’னு திருத்திச் சொல்வாங்க. இதுவரை விசில் என்பதை கேலிக்கான விஷயமாவே பார்க்கிறாங்க. அந்நிலை மாறணும். இதை ஒரு கலையா கொண்டுசெல்லணும். ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் விசில் பயிற்சிப் பள்ளிகள் இருக்கு. சர்வதேச அளவில் இரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை நடக்கிற விசில் போட்டியில், இந்தியா, தமிழகம் சார்பில் மிகக்குறைவானவர்களே கலந்துக்கிறோம். இந்தக் கலையில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்ட, இதை பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதற்கான சிலபஸ் தயாரிச்சுட்டு இருக்கோம். இதுக்கு அரசு உதவணும்’’ என்று கோரிக்கை வைக்கும் ஸ்வேதா, சென்ற மாதம் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடந்த விசில் போட்டியில் கலந்துகொண்டு வந்திருக்கிறார்.

விசில் கலை வித்தகி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘அந்தப் போட்டிக்கு ஆன்லைன்லதான் பதிவு செய்யணும். பயணம், விடுதினு எல்லா செலவையும் நாமேதான் பார்த்துக்கணும். இவ்வளவு மெனக்கெடலோட அங்க போகும்போது, `இதில் நிச்சயம் வெற்றியோடதான் திரும்பணும்' என்ற வைராக்கியத்தோடதான் கிளம்பினேன். தமிழ்ப் பாடல்கள்தான் பாடணும்னு முடிவு பண்ணினேன். இரண்டு பிரிவுகளில், சிவாஜி சாரின் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலையும், ரஜினி சாரின் ‘மின்சாரக் கண்ணா’ பாடலை பரதநாட்டியம் ஆடியபடியேவும் விசிலில் இசைத்தேன். இரண்டிலும் வெற்றி பெற்றேன். அந்த ஆடியன்ஸ் அவ்ளோ ரசிச்சாங்க.

என்னோட வெற்றிக்கு உறுதுணையா இருக்கிற வாய்ஸ் டிரெயினர் ஸ்டாலின் சார், கர்னாடக இசை ஆசிரியர் நிர்மலா நரசிம்மன் மேடம், மேற்கத்திய இசைப் பயிற்சியாளர் அகஸ்டன் பால் சார் எல்லாருக்கும் நன்றி. விசில் இசையில் கின்னஸ் ரெக்கார்டு செய்யணும். கர்னாடக இசைக் கச்சேரிகளில் விசிலில் பாடணும். இதுதான் என்னோட ஆசை, கனவு எல்லாம்!’’

- விசில் இசைத்து கைகுலுக்குகிறார், ஸ்வேதா!

 வே.கிருஷ்ணவேணி

  படங்கள்: எம்.வஸீம் இஸ்மாயில்

பி.எஸ்ஸி படிப்பில் பல்கலைக்கழக தர வரிசையில் ஒன்பதாவது இடம் பிடித்தவர் ஸ்வேதா. எல்.வி. பிரசாத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிலையத்தில் டி.எஃப்.டி (D.F.T  - Diploma in Film Technology, in Editing & Sound Design) பயின்றவர், திரைப்பட தொகுப்பில் தங்கப் பதக்கமும், ஒலி அமைப்பில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். ஸ்ரீலங்கா, ஓமன், ஃபிரான்ஸ், மஸ்கட் உள்ளிட்ட பல உலக நாடுகளில் விசில் இசை நிகழ்ச்சி செய்திருக்கும் ஸ்வேதா, ‘ரெயின் டிராப்’ எனும் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக பலருக்கு உதவிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism