Published:Updated:

ஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்!

ஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்!

அவள் 16

ஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்!

அவள் 16

Published:Updated:
ஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்!
ஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்!

றிவியல், பொறியியல் என பட்டம் வாங்கியவர்கள் பலருக்கும் இளங்கலை முடித்த பின்னர் திடீர் என மீடியா ஆசை வரும். ‘ஜர்னலிஸம், விஸ்காம்னு மீடியா படிப்பு ஏதாச்சும் படிச்சிருக்கலாமே?’ என்ற எண்ணமும் வரும். அப்படி ஊடகப் பணிகளில் ஆர்வம் உள்ள பட்டதாரிகளுக்கான முதுநிலைப் படிப்பு, எம்.ஏ., மீடியா ஆர்ட்ஸ். அது குறித்த தகவல்களை வழங்குகிறார், சென்னை, லயோலா கல்லூரியின் ஊடகத்துறை உதவிப் பேராசிரியர் சாம்சன் துரை.

என்ன விதமான படிப்பு?

இரண்டு ஆண்டுகள் பயிலக்கூடிய முதுநிலை படிப்பான எம்.ஏ., மீடியா ஆர்ட்ஸ் (ஊடகக் கலைகள்) படிப்பு... செய்தித்தாள், பத்திரிகைகள், ஆன்லைன் மீடியா, தொலைக்காட்சி என ஊடகம் சார்ந்த பணிகளுக்கான பயிற்சி அளிக்கும்.

எங்கு படிக்கலாம்?

சென்னை, லயோலா கல்லூரியில் இந்தியாவிலே முதல்முறையாக முழுக்க முழுக்க தமிழிலேயே இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே ஒரு மாநிலமொழியில் ஊடகத் துறை குறித்த படிப்பு வழங்கப்படுவது இங்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஊடகத் துறையில் ஒவ்வொரு நாளும் பல வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில், கடந்த 10 வருடங்களாக இங்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது இந்த முதுநிலை படிப்பு. ஆங்கில வழியில் படிக்க விரும்புவோர் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் படிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்!

தகுதி

எந்தத் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர்களும், எம்.ஏ., மீடியா ஆர்ட்ஸ் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதோடு கல்லூரி இளநிலை படிப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

பாடத்திட்டம்

தற்கால ஊடக வடிவங்கள், திரைப்படத் தயாரிப்பு, செய்தித் தயாரிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு, விளம்பரத் தயாரிப்பு போன்றவை கற்றுத்தரப்படும். பிராக்டிகல் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு

தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் போன்ற வேலைவாய்ப்புகளோடு, செய்தித்தாள், பத்திரிகைகள் போன்ற அச்சு ஊடகத்துறைகளில் எழுத்துப் பணிகள், விளம்பர நிறுவனங்களில் தயாரிப்பு வேலைகள் என, ஊடகக் கலைகள் படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. மேலும், எம்.ஃபில் மற்றும் பிஹெச்.டி ஆராய்ச்சி படிப்பை முடித்து ஊடகத் துறை பேராசிரியர் வாய்ப்பும் பெறலாம்.

ஊடகக் கலைகள் படிப்பு... மீடியா கனவுகள் நனவாக கைகொடுக்கும்!

  - கோ.இராகவிஜயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism