Published:Updated:

``உணர்வுபூர்வத்தை ஒதுக்குங்கள்... அறிவுபூர்வமாக அணுகுங்கள்!''

``உணர்வுபூர்வத்தை ஒதுக்குங்கள்... அறிவுபூர்வமாக  அணுகுங்கள்!''
பிரீமியம் ஸ்டோரி

மிழ்நாட்டு ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள்வரை, பல பத்திரிகையாளர்களை, புகைப்படக் கலைஞர்களை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டிருப்பது, ஆனந்த விகடனின் ‘மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’. 2016 - 2017 ஆண்டுக்கான திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,686 மாணவர்களில், பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 75 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் பெண்கள். மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் 25-ம் ஆண்டான இவ்வருடம், பெண்களின் எண்ணிக்கை முதல்முதலாக இருபத்தைந்தை எட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. புதிய மாணவப் பத்திரிகை யாளர்களுக்கான பயிற்சி முகாம், சென்னையில் ஜூலை 22, 23, 24 தேதிகளில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு துறை பிரமுகர்களும் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை முன்வைத்தனர். இவர்களில், ‘நில் கவனி சொல்’ என்ற தலைப்பில் திரை இசையமைப்பாளர்  ‘ஹிப்ஹாப்’ ஆதி பேசியது குறிப்பிடத்தக்க படிப்பினையாக இருந்தது. ‘‘நல்லவிதமாக, கெட்டவிதமாக என நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கான விளைவும், நம்மைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கும். அதற்கு என்னையே பாடமாகச் சொல்வேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான் சமீபத்தில் ‘டக்கரு டக்கரு’ பாடல் வெளியிட்டபோது, ‘அதைச் சொல்ல இவன் யாரு? பெண்களை இழிவுபடுத்தி ‘கிளப்புல மப்புல’ பாடலை எழுதினவன்தானே இந்த ‘ஹிப்ஹாப்’ ஆதி?’ என்று என்னை விமர்சித்தார்கள்.

``உணர்வுபூர்வத்தை ஒதுக்குங்கள்... அறிவுபூர்வமாக  அணுகுங்கள்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு வேகத்தில் வெளியிட்டுவிட்ட ‘கிளப்புல மப்புல’ பாடலின் விளைவு என்னை இன்னும் பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நான் நல்ல விஷயங்களை முன்னெடுக்கும்போதும் அதையெல்லாம் பின்தள்ளி, நான் தெரியாமல் செய்த பிழையே என் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. எனவேதான் சொல்கிறேன்... எந்த ஒரு விஷயத்தையும் சமூகத்துக்கு சொல்வதற்கு முன் அதை உணர்வுபூர்வமாக அணுகாமல், அறிவுபூர்வமாக அணுகுங்கள்’’ என்று அழகாக பாடம் எடுத்தார் ஆதி.

``உணர்வுபூர்வத்தை ஒதுக்குங்கள்... அறிவுபூர்வமாக  அணுகுங்கள்!''

டந்த 2015 - 2016 ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், 38 மாணவர்களுக்கு முதல் வகுப்பு, சிறப்புத்தகுதி, மிகச் சிறப்பு தகுதி, தலைசிறந்த தகுதி என்ற பிரிவுகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதில் விருது பெற்ற பெண்கள், தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்...

தா.நந்திதா, தலைசிறந்த தகுதி

``உணர்வுபூர்வத்தை ஒதுக்குங்கள்... அறிவுபூர்வமாக  அணுகுங்கள்!''

“முன்னாடி எல்லாம் மாலை 6 மணிக்கு மேல வெளிய போறதுனா எனக்கு பயம். இப்போ இரவு 11 மணி ஆனாலும், வேலையை முடிச்சுட்டு வீடு திரும்புற தைரியம் வந்திருக்கு. பொறுமை, யோசிச்சு முடிவு எடுக்குற பக்குவம், துணிச்சல் இதெல்லாம் விகடனுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் எனக்குக் கிடைச்சிருக்கு.’’

ச.ஆனந்தப்பிரியா, தலைசிறந்த தகுதி

‘‘இந்த ஒரு வருஷ களப் பயிற்சியில் எனக்கு ஏகப்பட்ட அனுபவங்கள். குறிப்பா, தேர்தல் நேரத்தில் எடுத்த சர்வேக்கள் மறக்கவே முடியாது. இந்த ஒரு வருடத்தில் எனக்குப் பொறுமையும், பொறுப்பு உணர்ச்சியும் அதிகமாகியிருக்கு. கிடைச்ச பாடத்தை வாழ்க்கை முழுக்கப் பின்பற்றுவேன்.’’

கோ.இராகவிஜயா, தலைசிறந்த தகுதி

‘‘மேற்படிப்புக்காக டெல்லி வந்திருக்கேன். அதனால நிகழ்ச்சியை ஒரு பக்கம் மிஸ் பண்ணினாலும், எனக்கான விருதை என் அப்பா, அம்மா வாங்கிக்கிட்டது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. விகடனில் எழுத்து மட்டுமில்ல, என்னோட இன்டெர்பெர்சனல் ஸ்கில்ஸையும் வளர்த்துக்க முடிந்தது. விகடனுக்கு நன்றி!’’

ஐ.மா கிருத்திகா, மிகச் சிறப்புத் தகுதி

‘‘எனக்கு பேசத் தயங்கற சுபாவம். ஆனா, இந்தத் திட்டத்தில் சேர்ந்ததுக்கு அப்புறம் டாக்டர், போலீஸ், அட்வகேட் முதல் எளிய மக்கள் வரை பலரையும்  சந்தித்து பேட்டி எடுத்தது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. சமூகப் பிரச்னைகளை ஆன்லைனில் எழுதும்போது, மக்கள்கிட்ட அதுக்குக் கிடைக்கிற வரவேற்பை லைக்ஸ், கமென்ட்ஸில் நேரடியாப் பார்த்தது, பரவச அனுபவம்!’’

``உணர்வுபூர்வத்தை ஒதுக்குங்கள்... அறிவுபூர்வமாக  அணுகுங்கள்!''

சூ.நந்தினி, மிகச் சிறப்புத் தகுதி

‘‘காலேஜ், வீடு... இதுதான் என் உலகமா இருந்தது. எங்க ஊரில் இந்த இடங்கள் எல்லாம் இருக்கு என்பதையே, இந்தத் திட்டத்தில் தேர்வாகி அசைன்மென்ட்களுக்குப் போனப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். முன்பு, அரசியல்னா கலைஞர், ஜெயலலிதானு ரெண்டு பேர்தான் தெரியும். ஆனா, எலெக்‌ஷனுக்கு சர்வே, ரிப்போர்ட்டிங்னு வேலை பார்த்ததுக்கு அப்புறம்தான், சமூகப் பார்வை, பொது அறிவுனு பல தளங்களிலும் நான் முன்னேறி இருக்கிறதா உணர்றேன்.’’

 - கே.அபிநயா
படங்கள்:   சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism