Published:Updated:

``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்!''

``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்!''
பிரீமியம் ஸ்டோரி
``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்!''

‘கலக்கப்போவது யாரு’ ரன்னர் நிஷா...காமெடி குயின்

``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்!''

‘கலக்கப்போவது யாரு’ ரன்னர் நிஷா...காமெடி குயின்

Published:Updated:
``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்!''
பிரீமியம் ஸ்டோரி
``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்!''
``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்!''

விஜய் டி.வி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த சிறந்த நகைச்சுவையாளர், நிஷா. நேரிலும் அதே கிராமத்துப் பேச்சு, கலகலப்பு என ரசிக்கவைக்கிறார்.

‘‘அறந்தாங்கி முதல் விஜய் டி.வி வரை... இந்தப் பயணம் எப்படி நடந்தது?’’

‘‘ஸ்கூல் படிக்கும்போதே, நான் பேசுறதை ரசிச்சுக் கேட்க எப்பவும் என்னைச் சுத்தி ஒரு கூட்டம் இருக்கும். காலேஜ்ல பி.பி.ஏ, எம்.பி.ஏ படிக்கும்போது, அப்புடியே அமைதியாயிட்டேன். அப்புறம்... கிளாஸ்ல இங்கிலீஷ்லதான் பேசணும்னு சொல்லிப்புட்டாங்கள்ல! ஆனா, கிளாஸுக்கு லெக்சரர் வரலைன்னா, அவங்களை மாதிரியே நடிச்சுக் காட்டி கிளாஸை கலகலப்பாக்குவேன்.

சன் டி.வி-யில முத்து அண்ணனோட சேர்ந்து ஒரு காமெடி ஷோ பண்ணினேன். அதைப் பார்த்துட்டுதான் விஜய் டி.வி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. ஆரம்பத்தில் நிறைய தயக்கம், பயம் இருந்துச்சு. நிகழ்ச்சியோட இயக்குநர் தாம்சன் சார்தான் தைரியம் கொடுத்தார். போட்டியில் முதல் பரிசு வாங்கலைன்னு வருத்தம் இருந்தாலும், ரன்னரா வந்ததே வெற்றிதான்னு சந்தோஷப்படுறேன்.’’

‘‘முக்கியமா யாருக்கு நன்றி சொல்லணும்னு தோணுது?’’

‘‘எங்கம்மா! நெனச்சுப் பாருங்க... அறந்தாங்கியில, அதுலயும் ஒரு முஸ்லிம் குடும்பத்துல பிறந்த பொண்ணு வீட்டுக்குள்ள வாயடிச்சாலே அடக்கி வெச்சிருவாங்க. ஆனா, ‘நீ எல்லா மேடையிலயும் ஏறு. பேசுறவங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்’னு எனக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் தந்து வளர்த்தவங்க, எங்கம்மாதான்.

ஒருநாள் அம்மா விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர்’

ஃபைனல் நிகழ்ச்சி பார்த்துட்டு இருக்கும்போது, ‘நிஷா... உனக்கு இப்படி ஒரு மேடை கிடைச்சா எப்படியிருக்கும்?’னு கேட்டாங்க. ‘அட, சும்மா கெட’னு சொன்னேன். அது உண்மையானப்போ, நான் என் மேல வெச்சிருந்த நம்பிக்கையைவிட பல மடங்கு எங்கம்மா என் மேல வெச்சிருந்தது புரிஞ்சது. எனக்கு வாய்ப்புகள் கிடைச்சப்போ, என் கணவரும் மாமியாரும் ஏணியா இருந்தாங்க. ஆனா, என் திறமையை வெளிக்கொண்டு வந்தது எங்கம்மாதான்!’’

‘‘மாமியாரையும், கணவரையும் நிகழ்ச்சியில் இப்படி போட்டுத் தாக்குறீங்களே... எதுவும் சொல்ல மாட்டாங்களா?’’

‘‘என் வீட்டுக்காரர் எனக்கு முறைமாமன். சின்ன வயசுல இருந்தே அவரை ‘வாடா, போடா’னுதான் கூப்பிடுவேன். கல்யாணத்துக்குப் பிறகும் மாத்திக்க முடியல. அதேபோல, கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க அத்தைகிட்ட நல்லா வாயாடுவேன். அவங்க மாமியாரானதுக்கு அப்புறமும் அது நல்லபடியா தொடர்ந்துட்டு இருக்கு. நிகழ்ச்சியில நான் நகைச்சுவைக்காகப் பேசுறதைப் பார்த்துட்டு அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க அவங்ககிட்ட, ‘உன் மருமக அவ கைதட்டு வாங்கறதுக்கு உன்னயப் போட்டு வறுக்குறாளே... நீ அதெல்லாம் பார்க்குறியா இல்லையா?’னு கேட்டிருக்காங்க. ‘வீட்ல திட்டுறதைத்தானே வெளியில போயும் திட்டுறா? இதுல புதுசா கோவிச்சுக்க என்ன இருக்கு?’னு விட்டுக்கொடுக்காமச் சொன்னாங்களாம். எங்க மாமியார் அந்தளவுக்குத் தங்கமுங்க!’’

``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஸ்கிரிப்ட் எல்லாம் எப்படித் தயார் செய்றீங்க..?’’

‘‘ரொம்பக் கஷ்டம். பெரும்பாலும் பகல் நேரத்தைவிட ராத்திரிதான் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவேன். மக்கள் ரசிக்கணும், மத்த போட்டியாளர்கிட்ட இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டணும்னு மண்டைய உடைச்சு கான்செப்ட் பிடிச்சு தயார் பண்ணிட்டுப் போனா, டீம்ல ‘நல்லாயில்லம்மா’னு சட்டுனு ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும். 

அதேபோல, நைட்டு 12 மணிக்கு ஆரம்பிக்கிற பிராக்டீஸ் காலையில நாலு, அஞ்சு மணிவரைக்கும் போகும். உண்மைக்கே சொல்றேங்க... என் வீட்டுக்காரர் இல்லைன்னா என் தன்னம்பிக்கை சரிஞ்சு போயிருக்கும். அவ்வளவு நேரமும் என்கூடவே கொட்டக் கொட்ட முழிச்சுட்டு இருப்பார். நான் என்ன சொன்னாலும் சிரிக்கணும். ஆனா, சிரிச்சாலும், சிரிக்கலைன்னாலும் ரெண்டுக்குமே கோபப்படுவேங்க. அப்பப்போ காபி வெச்சுக் கொடுப்பார். ‘ஏய், சூப்பரா இருக்கு புள்ள’ னு எனக்கு முதல் நம்பிக்கை தர்றவர் அவர்தான்.’’

‘‘அடுத்த திட்டம்..?’’

‘‘நாலஞ்சு படங்கள்ல வாய்ப்பு வந்தது. யோசிச்சிட்டு இருக்கேன். வடிவேலு சார்கூட ஜோடியா நடிக்கணும்னு எனக்கு ஆசை. எனக்கு ரோல்மாடலே அவருதான்!’’

‘‘நிஷா ஹேப்பி அண்ணாச்சியா..?’’

‘‘ஒரு கவலை இருக்கு. என் பையன் முகமது ஹர்ஷத்துக்கு நாலு வயசு. அறந்தாங்கியில அம்மா வீட்ல இருந்து படிச்சுட்டு இருக்கான். நான் சென்னைக்குக் கிளம்பும்போதெல்லாம், ‘எப்போம்மா வருவ?’னு கேட்பான். பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் பொசுக்குனு அழுகை வந்துடும். எல்லாத்தையும்விட, ஒரு அம்மாவா நான் ஜெயிக்கிறதுதான் முக்கியம். அதுதான் இப்போ என் மனசுல ஓடிட்டு இருக்கு!’’ 

வே.கிருஷ்ணவேணி, படங்கள்:  என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism