Published:Updated:

சுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

சுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
சுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

மாடியில் விளையுமே மணியான காய்கறிகள்...மாடித்தோட்டம்

சுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

மாடியில் விளையுமே மணியான காய்கறிகள்...மாடித்தோட்டம்

Published:Updated:
சுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
சுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!
சுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

‘‘நா ங்க கடையில் காய்கறிகள் வாங்கி ரெண்டு வருஷமாச்சு. எங்க வீட்டுத் தேவைக்கும் அதிகமாவே எங்க மாடித்தோட்டத்தில் விளையுது. அதனால அதை நண்பர்கள், உறவினர்களுக்கும் பகிர்ந்துக்கிறோம்!’’

- பரபரப்பான பெங்களூரு நகரில், தன் வீட்டு மாடியை குட்டிச் சோலையாக்கியிருக்கும் சரோஜாவின் வார்த்தைகளில் உற்சாகம்.

‘‘நான் பிறந்தது கோயம்புத்தூர். என் கணவர் ஹரிஷ் கர்நாடகாவைச் சேர்ந்தவர்; ஓய்வுபெற்ற எலெக்ட்ரானிக் இன்ஜினீயர். எங்களுக்கு ரெண்டு பையன்கள், அமெரிக்காவில் இருக்காங்க. என் கணவருக்கு சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்ப்பதில் ஆர்வமும் அனுபவமும் அதிகம். அதனால, ஆரம்பத்தில் தோட்டம் போட்டப்போ சுலபமாதான் இருந்தது. அவர்கிட்ட இருந்து நானும் தோட்டம் தொடர்பான விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

ரொம்ப வருஷமா பூக்கள்தான் அதிகமா வளர்த்தோம். நூற்றுக்கணக்கில் பூச்செடிகள் இருந்தன. இப்ப ரெண்டு வருஷமா, முழுக்க முழுக்க காய்கறிகள்தான் பயிர்செய்யறோம். எங்க மாடி 2,600 சதுர அடி அளவுகொண்டது. இதில் 2,000 சதுர அடி முழுக்க தோட்டம்தான். கிட்டத்தட்ட 20 வகை காய்கறிகள் விளையுது. பெங்களூருல எப்பவுமே க்ளைமேட் நல்லா இருக்கும் என்பதால, எல்லா சீஸன்லயும் நல்ல விளைச்சல் இருக்கும்’’ என்றவர், தன் மாடித்தோட்டத்தின் தொழில்நுட்பங்கள் பற்றிப் பகிர்ந்தார்.

‘‘தோட்டம் வெச்ச உடனேயே அறுவடையை எதிர்பார்க்கிறவங்க, அந்த ஆர்வம் சோர்ந்து போகாமல் இருக்க ஆரம்பத்தில் கீரை வகைகளைப் பயிர் செய்யலாம். அரைக்கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, கொத்தமல்லி, புதினா மற்றும் பீன்ஸ், வெண்டைக்காய், தக்காளி, கத்திரிக்காய் போன்றவை எல்லாம் நிச்சயமா ரெண்டு மாசத்தில் விளைச்சல் கொடுக்க ஆரம்பிச்சிடும். 

சுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்க தோட்டத்தில் நாங்க மண் பயன்படுத்தல. மாறா, தேங்காய்நார்க் கழிவில்தான்  செடிகளை வளர்க்கிறோம். காரணம், மாடியில் செடிகள் வளர்க்க ஏற்றவிதமா, மண்ணைவிட இது எடை குறைவானது. மேலும், மண்ணில் வளரக்கூடிய எல்லா செடிகளும் இதிலும் வளரும். தண்ணீர், சத்துக்களை எல்லாம் இந்த தேங்காய்நார்க் கழிவு தக்கவைத்துக்கொள்ளும் என்பதால, செடிகளுக்கு மண்ணைவிட இது சிறந்தது. மேலும், மண்ணில் இருந்து செடிகளுக்கு சில நோய்த் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு. அதிலிருந்தும் விடுதலை தரக் கூடியது, இந்த தேங்காய்நார்க் கழிவு. மெட்ரோ சிட்டி வீடுகளில் தோட்டம் அமைக்கும்போது, மண், தண்ணீர்ப் பிரச்னைகளைச் சமாளிக்க இது நல்ல ஏற்பாடா இருக்கும்.

அடுத்ததா, உரங்கள். இயற்கை உரங்கள் என்று பயன்படுத்தினா, 30% அதிக விளைச்சல் கிடைக்கும். காய்கறிகள், செடிகளுக்கு அதிக சத்தும் கிடைக்கும். எங்க தோட்டத்துக்கு பஞ்சகவ்யம், ஜீவாமிர்தக் கரைசல்  போன்றவற்றைத்தான் பயன்படுத்துறோம். அதேபோல, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைச்சுனு வீட்டிலேயே பூச்சி விரட்டிகள் தயாரிச்சு, அதைத்தான் செடிகளுக்குப் பயன்படுத்துவோம். விதைகளைப் பொறுத்தவரை, எங்க மாடித் தோட்டத்துல விளையுற காய்கள் மூலமாவே விதைகளை சேகரிச்சு அடுத்த தடவைக்கு விதைப்போம். விதைகளை  வெளியில் வாங்கும்போது, அதோட தரத்தை உறுதிப்படுத்திக்கிறது முக்கியம்’’ என்றவர்...

``பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் போட்டு விளைந்த காய்கறிகளையே சாப்பிட்டு சாப்பிட்டு, நமக்கெல்லாம் இயற்கையான காய்கறிகளின் அசல் சுவையே தெரியாமப்போச்சு. இயற்கையில் விளையுற காய்கறிகளை ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்தா தெரியும்... சுவை, வாசம்னு காய்கறிகளில் நாம தவறவிடுறது என்னென்ன, ரசாயனத்துல விளையுற காய்கறிகளின் மூலமா நமக்கு வந்து சேருகிற தீமைகள் என்னென்னனு!

`ஆஹா.. இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே'னு ஒரு வருத்தம் வருதுல்ல?  `இனிமேயாச்சும் ஆரோக் கியமான, சத்தான காய்கறிகளைச் சாப்பிடணும்'னு ஆசை வந்தா... இப்பவும் காலம் இருக்கு. எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போடுங்க. குடிக்கிற தண்ணீர், சுவாசிக்கிற காற்றுனு எதுவுமே நமக்கு நல்லதா கிடைக்கல. அதையெல்லாம் ஈடுகட்டும் விதமா, சாப்பிடும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததா இருக்கணும். அதுக்கு, உங்க வீட்டில் தோட்டம் அமைக்கணும்!’’

- உந்துதல் தருகிறது சரோஜாவின் பேச்சு.

கே.அபிநயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism