Published:Updated:

செல்லப் பிராணிகளின் சேவகி!

செல்லப் பிராணிகளின் சேவகி!
பிரீமியம் ஸ்டோரி
செல்லப் பிராணிகளின் சேவகி!

நேசம்

செல்லப் பிராணிகளின் சேவகி!

நேசம்

Published:Updated:
செல்லப் பிராணிகளின் சேவகி!
பிரீமியம் ஸ்டோரி
செல்லப் பிராணிகளின் சேவகி!
செல்லப் பிராணிகளின் சேவகி!

‘‘த ற்போதைய அவசரகதி வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் மனஅழுத்தம், வீட்டில் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் பாசத்தில் காணாமல் போய்விடும். மனஅழுத்தத்தை குறைக்க மனநல மருத்துவர்களே வண்ண மீன்கள், நாய், பூனை போன்றவற்றை வளர்க்கப் பரிந்துரைக்கிறார்கள். இப்படி நம் வீட்டின் காவலாளியாகவும், நம் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் மருந்தாகவும் இருக்கக்கூடிய செல்லப் பிராணிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பு, பசிக்கு உணவு, சிறு இருப்பிடம் மட்டுமே! ஆனால், நம்மில் பலர் அந்தஸ்தின் அடையாளமாகவும், வீட்டுப் பாதுகாப்புக்காகவும் மட்டுமே அவற்றை வளர்த்து, அவற்றுக்கு வயதாகி நோய்வாய்ப்படும் நிலை ஏற்பட்டால் வீதியில் விட்டுவிடுவது சுயநலத்தின் எல்லை!’’

- ஆதங்கத்துடன் சொல்லும் ஜெய்ஸ்ரீ ரமேஷ், சென்னையில் ‘பெட்ஸ் ஆன் வீல்ஸ்’ எனும் விலங்குகளுக்கான வாடகை வாகன சேவையைச் செய்துவருகிறார்.

‘‘அப்பாவுக்கு கேரளா, அம்மாவுக்கு கரூர். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆப்பிரிக்கா.  நியூட்ரிஷன் அண்ட் டயடிக்ஸ் படிப்புக்காக சென்னை வந்து, திருமணம் முடிந்து இங்கேயே செட்டிலாகிவிட்டேன். என் சிறு வயதில் அப்பா, அம்மா இருவருமே வேலைக்குப்போய்விட... எங்கள் வீட்டின் நாய்க்குட்டிதான் என்னுடைய நட்பு. அப்போதிருந்தே எனக்கும் பிராணி களுக்குமான நட்பு தொடங்கிவிட்டது.

வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆதரவற்ற பிராணிகளுக்கு உதவி வந்த நான், 2013-க்குப் பிறகு வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் பிராணிகளுக்கு செலவிட்டேன்.

செல்லப் பிராணிகளின் சேவகி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘லாஸ்ட் & ஃபவுண்ட்’ எனும் செல்லப் பிராணி களுக்கான அமைப்பின் ஃபேஸ் புக் அக்கவுன்ட் டில் இணைந்தேன். அதன் மூலம் செல்லப் பிராணிகளைத் தத்துக்கொடுப்பவர்களுக்கும் தத்து எடுப்பவர்களுக்கும் ஒரு பாலமாக இருக்கும் சேவையைச் செய்துவந்தேன். தொடர்ந்து, ஆதரவு இல்லாத, கைவிடப்பட்ட நிலையில் உள்ள பல நாய்களுக்கும் இருப்பிடம் தேடிக்கொடுத்து வருகிறேன். அந்த வகையில் இதுவரை 200 பிராணிகளுக்கும் மேல் காப்பாற்றியுள்ளேன்’’ எனும் ஜெய்ஸ்ரீ, தன் அனுபவங்களைப் பகிர்ந்தார்...

‘‘ஒருமுறை வேப்பேரி கால்நடை மருத்துவமனையில், ஒரு வளர்ப்பு நாயை முடி எல்லாம் உதிர்ந்து, தோல் தெரியும் நிலையில் விட்டுச்சென்றுவிட்டனர். அதனை எடுத்துக்கொள்ள முடியுமா என எனக்குத் தகவல் வர, உடனடியாக அங்கு சென்று மருத்துவரிடம் விசாரித்ததில், இரண்டு வயதுடைய அந்த நாய்க்கு தைராய்டு பிரச்னை என்றார். அதற்கு மருத்துவ சிகிச்சை செய்து நானே வளர்த்து வருகிறேன். இப்போது அது ஆரோக்கியமாக இருக்கிறது. ஐந்து வயதாகும் இந்த அம்முதான் அந்த நாய்’’ எனும் ஜெய்ஸ்ரீயின் மடியில் வாஞ்சையுடன் அமர்ந்திருக்கிறது அம்மு.

செல்லப் பிராணிகளின் சேவகி!

‘‘கிட்னி ஃபெயிலியராகி கைவிடப்பட்ட ஒரு வளர்ப்பு நாயை எடுத்து சிகிச்சையளித்து, தத்துக்கொடுக்க விளம்பரம் செய்தேன். அதனைத் தத்தெடுக்க விரும்புவதாக சொன்னவருக்கும் கிட்னி ஃபெயிலியர். அதன் வாழ்நாள் அதிகம் இல்லை என்பதை அறிந்தும், ‘அது இருக்கும்வரை அதைப் பாதுகாப்பது என் பொறுப்பு’ என்ற அவர் சொன்ன தருணம், மிகவும் நெகிழ்ச்சியானது! பிறவியிலேயே முன் கால்கள் ஊனமான ஒரு பொமரேனியன் நாய் ஆதரவற்று இருந்தது. மருத்துவர்கள் உதவியுடன் அதற்கு சக்கர நாற்காலி போன்று ஒரு உபகரணம் பொருத்தப்பட, பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் இப்போது அதை வளர்த்துவருகிறார்’’ என்றவர்,

‘‘இதுபோல் ஆதரவற்ற நிலையில் உள்ள நாய்களுக்கு சிகிச்சையளிக்க பல ஆயிரங் கள் செலவாகிறது. என் தோழி ஒருத்தி, ‘நாய்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல, பெரும் பாலான ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் முன்வரு வதில்லை. நீ ஏன் வளர்ப்புப் பிராணிகளுக்கான பிரத்யேக வாகன சேவை ஒன்றை ஆரம்பிக்கக்கூடாது? அதில் வரும் தொகை நாய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு உதவுமே?’ என்றாள். அதுதான் ‘பெட் ஆன் வீல்ஸ்’ ஆரம்பிக்கக் காரணம். என் சேவையில்  என் கணவரின் ஒத்துழைப்பும் பெரிய பலம்’’ என்று சொல்லும் ஜெய்ஸ்ரீ, அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல தானே அந்த வாகனத்துக்கு ஓட்டுநராகிறார்; தொலைவில் என்றால் கணவரின் உதவியைப் பெறுகிறார்.

செல்லப் பிராணிகளின் சேவகி!

‘‘முன்காலில் அடிபட்ட நிலையில் ஆதரவற்று தெருவில் அலைந்துகொண்டிருந்த ஒரு டாபர் மேன் நாய் பற்றி பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்துக் காத்திருக்கிறேன். அதன் உரிமையாளர் தொடர்புகொண்டால் ஒப்படைப்பேன், இல்லையென்றால் அதற்கான மறுவீடு, அதாவது அதைத் தத்தெடுக்க விரும்புபவர்களிடம் ஒப்படைத்துவிடுவேன். நாய்களைக் குட்டிகளில் இருந்தேதான் வளர்க்க வேண்டும் என்பதில்லை. வளர்ந்த நாய்களையும் தாராளமாக வளர்க்கலாம், உண்மையிலேயே அன்பு செலுத்துபவர்களிடம் விரைவில் இணக்கமாகிவிடும்’’ என்றவர் இறுதியாக ஒரு வேண்டுகோளுடன் முடித்தார்...

‘‘பசியோடு வரும் நாய்களுக்கு உணவளிக்க விருப்பமில்லை என்றால், ஒரு டம்ளர் தண்ணீரை அதன் மீது ஊற்றினாலே ஓடிவிடும். மாறாக கல், கட்டையை எல்லாம் வீசி எறிந்து அதை அடித்து, ஒருவேளை உணவு தேடி வந்த குற்றத்துக்காக கண், கால் என அதை வாழ்க்கை முழுக்க ஊனமாக்கிவிடாதீர்கள்!’’

ஜெய்ஸ்ரீயின் கைகளை நாவால் வருடி தனது நன்றியைத் தெரிவிக்கிறது அம்மு!

- இந்துலேகா.சி, படங்கள்:   ரா.வருண் பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism