Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

‘‘காமெடி மட்டுமில்ல, சென்டிமென்ட்டும் வரும்!’’

கேபிள் கலாட்டா!

வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் காமெடி கேரக்டர்களில் அசத்திக்கொண்டிருக்கிறார் மதுமிதா.

‘‘எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்த ‘ஓகே ஓகே’ படத்தைத் தொடர்ந்து சினிமா, சீரியல்னு கரியர் சூப்பரா போயிட்டு இருக்கு. சன் டி.வி ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல்ல தெலுங்கு கலந்து பேசுற ‘பப்பு’ கேரக்டர், நல்ல பெயர் வாங்கிக்கொடுத்திருக்கு. சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்சிருக்கிற சன் டி.வி ‘காமெடி ஜங்ஷன்’ நிகழ்ச்சியிலயும் நான் கலக்குறேன். ஷூட்டிங் ஸ்பாட்ல, எனக்கான டயலாக்ஸை கேட்டு வாங்கி, அதில் நானே சில அட்ராக்டிவ்வான வார்த்தைகளைச் சேர்த்து, ரிகர்சல் பார்த்துட்டுதான் நடிப்பேன்.

‘காஸ்மோரா’ படத்துல கார்த்திக் சாரோட சிஸ்டர் ரோல், ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’, ஒரு தெலுங்கு படம்னு நான் நடிச்ச திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கு. காமெடி மட்டுமில்ல, எனக்கு சென்டிமென்ட்டும் ரொம்ப நல்லா வரும். ரிலீஸ் ஆகவிருக்குற ‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்துல காமெடி, சென்டிமென்ட்னு ரெண்டும் செய்திருக்கேன். ஆச்சி மனோரமா, கோவை சரளாம்மா மாதிரி இல்லாம, திரைப்படங்களில் இப்போ காமெடி நடிகைகளுக்கான ஸ்கோப் ரொம்பவே கம்மியா இருக்கு. அப்பப்போ ட்ராக்கு மட்டுமில்லாம, பேர் (pair) காமெடிக்கான வாய்ப்பை இயக்குநர்கள் கொடுக்கணும்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலக்குங்க ஜாங்கிரி!

ஆயிரம் எபிசோடுகள்... அடி தூள்!

கேபிள் கலாட்டா!

ல மொழி சீரியல்களிலும், சினிமாவிலும் பிஸி, சன் டி.வி ‘பொம்மலாட்டம்’ சீரியல் நாயகி ஸ்ரீஜா.

‘‘என்னோட பூர்வீகம் கர்நாடகா. அப்பா கன்னடத்துல பெரிய டைரக்டர். ஒன்பதாவது படிக்கிறப்போ ஒரு கன்னட சீரியல்ல நடிச்சேன். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வர, டென்த் முடிச்ச நேரத்துல மூணு தெலுங்குப் படங்கள்ல நடிச்சேன். அடுத்து பத்துக்கும் அதிகமான கன்னடப் படங்கள்லயும், தமிழ்ல ‘கொஞ்சிப் பேசலாம்’ படத்துல ஹீரோயினாவும் நடிச்சேன். சினிமா வாய்ப்புகள் தொடர்ந்ததால, டென்த்துக்கு அப்புறம் ஸ்கூல் போக முடியல. கரஸ்ல ப்ளஸ் டூ முடிச்சுட்டு, காலேஜ்ல சேர்ந்தேன். அதையும் முடிக்க முடியாத அளவுக்கு மீடியாவில் பிஸி ஆனேன்.

அந்த நேரத்தில்தான் தமிழ் ‘கோலங்கள்’ சீரியலோட கன்னட வெர்ஷன்ல ஹீரோயினா நடிச்சேன். அப்போ எனக்கு கம்மியான வயசுதான். இருந்தாலும் பெரிய பொண்ணு மாதிரி மேக்கப், டிரெஸ்ஸிங் எல்லாம் செய்து அந்த கேரக்டர்ல ஆர்வத்தோட நடிச்சேன். கன்னடத்துல மூணு சீரியல்களில் பரபரப்பா நடிச்சுட்டு இருந்தப்போதான், ‘பொம்மலாட்டம்’ வாய்ப்பு. மார்னிங் டைம் சீரியல்னாலும், பெரிய ரீச். இப்போ 1,100 எபிசோடுகளை நெருங்கி வெற்றிகரமா போயிட்டு இருக்கு. தமிழ், தெலுங்கு, கன்னடத்துல மொத்தம் 50-க்கும் அதிகமான படங்கள்லயும், ஒன்பது சீரியல்கள்லயும் நடிச்சிருக்கேன். அதுல ஏழு சீரியல்கள் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகியிருக்கு என்பது எனக்குப் பெரிய சந்தோஷம்!’’

சீரியல் ராணி!

‘‘கணவரால நிறைவேறியது என் மீடியா ஆசை!’’

கேபிள் கலாட்டா!

மிழ் தெரியாமலேயே தமிழ் சீரியலில் நடிக்க வந்தவர், தெலுங்குப் பெண் மௌனிகா!

‘‘நான் பிறந்து, வளர்ந்தது ஆந்திரா. கல்யாணத்துக்குப் பிறகு சென்னையில் செட்டில் ஆனேன். மீடியா ஆசையால, கணவர்கிட்ட கொஞ்சம் தமிழ் கத்துக்கிட்டு `விஜே' ஆக முயற்சி செய்துட்டு இருந்தேன். என் ஆசைக்கு முழு சப்போர்ட்டா இருந்த என் கணவர்தான், ஒவ்வொரு சேனலா என்னை இன்டர்வியூவுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு கூட்டிட்டு வருவார். ஒருவழியா ராஜ் மியூஸிக்ல வாய்ப்புக் கிடைச்சு நான் `விஜே' ஆகிட்டேன். அடுத்து சீரியல்ல நடிக்க முயற்சி செய்து, சன் டி.வி ‘தேவதை’ சீரியல்ல கமிட் ஆனேன். என்னோட பெரிய கண்கள்தான், அந்த நர்மதா நெகட்டிவ் கேரக்டர் செய்ய எனக்குக் கைகொடுத்தது.

பாசிட்டிவ் ரோல்ல அமைதியா நடிச்சுட்டுப் போறது ஈஸி. ஆனா, கண்ணுலயும், முகத்துலயும் அடிக்கடி எக்ஸ்பிரஷனை மாத்தி மாத்தி நடிக்கிற நெகட்டிவ் ரோல் இருக்கே... அது, ரொம்பக் கஷ்டம். அதுவும் இயல்பில் அமைதியான பொண்ணான எனக்கு, அது செம சவால்தான். ஆரம்பத்தில் தமிழ் தெரியாம, யூனிட்ல திட்டு, சக ஆர்ட்டிஸ்ட் கிண்டல்னு நொந்துபோயிருக்கேன். ஆனா, அதையே சேலஞ்சா எடுத்துட்டு சரளமா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். ‘தேவதை’ தவிர சன் டி.வி ‘வள்ளி’, கலைஞர் டி.வி ‘தென்பாண்டி சிங்கம்’ வாய்ப்புகளும் கிடைச்சிருக்கு!’’

இப்பவும் கணவர்தான் பிக்அப் அண்ட் டிராப்பா?!

‘‘நான் ஹீரோவாகிட்டேன்!’’

கேபிள் கலாட்டா!

ன் மியூசிக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுரேஷ் ரவி, இப்போது ஹீரோ!

‘‘கேரள மாநிலம், பாலக்காட்டுல பிறந்தாலும், வளர்ந்தது எல்லாம் சென்னைதான். இன்ஜினீயரிங் படிச்சப்போ, மீடியா ஆசை வந்துச்சு. அந்த நேரத்துல ‘அந்நியன்’ படம் ரிலீஸ் ஆகியிருக்க, ‘ரெமோ’ விக்ரம் மாதிரி முடி வளர்த்துட்டு சுத்தினேன். என் ஃப்ரெண்ட், ‘நீ மாடலிங் ட்ரை பண்ணுடா’னு ஏத்திவிட்டான். கொஞ்சநாள் படிச்சுக்கிட்டே மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். அப்போ ஒரு விளம்பரப் படத்துல நடிச்சேன். ஆனா, எடிட்டிங்கில் என் போர்ஷன் கட் ஆனதில் ரொம்ப விரக்தி ஆகி, ‘என் முகம் ஸ்க்ரீன்ல வந்தே ஆகணும்’னு `விஜே’ வாய்ப்புகளைத் துரத்த ஆரம்பிச்சேன். அதே நேரத்துல ஐ.டி நிறுவனத்திலும் வேலை கிடைக்க... அப்பா, அம்மாவுக்காக ஆறு மாசம் அங்க வேலைபார்த்துட்டே சன் மியூசிக் சேனல்லயும் `விஜே’வா இருந்தேன். அப்புறம் என் பெற்றோரின் ஆசியோட ஐ.டி வேலைக்கு `பை' சொல்லிட்டு, சன் மியூசிக்கில் செட்டில் ஆகிட்டேன்.

இப்போ தினமும் மாலை ‘கஃபே டீ ஏரியா’ ஷோ பண்ணிட்டு இருக்கேன். `விஜே' பயணத்துக்கு நடுவுல, ‘மைதான வீதி’ங்கிற ரெண்டு நிமிஷ டீஸர் ஃபிலிம்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுது. அப்போ கொஞ்சம் வெயிட்டா இருந்த நான், 45 நாள்ல 18 கிலோ எடையைக் குறைச்சேன். என்னோட டெடிகேஷனைப் பார்த்த அந்த டீஸர் டைரக்டர் ரஞ்சித் மணிகண்டன், அடுத்து அவரோட ‘அதிமேதாவிகள்’ படத்துல என்னை ஹீரோவாக்கிட்டார். அந்தப் படத்தை அடுத்து நான் ஹீரோவா நடிச்ச ‘மோ' (Mo)ங்கிற தமிழ்ப் படம்தான் முதல்ல ரிலீஸ் ஆகப்போகுது. என் அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் என்னை ஹீரோவா பார்க்கக் காத்திருக்காங்க!’’

வாழ்த்துகள் ப்ரோ!

ரிமோட் ரீட்டா, படங்கள்: எம்.உசேன், ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 150

கரண்ட் ஷாக் தேவையா?

``ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் `அதிர்ஷ்ட லட்சுமி’ நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரு நாற்காலி யில் உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர்கள் இணை சொல்லும் சொற்களை போட்டியாளர்கள் கண்டுபிடிக்காவிடில், குறைந்த அளவு கரன்ட் ஷாக் கொடுக்கப்படுமாம். தேவையா இது? தெரிந்தோ, தெரியாமலோ பல்வேறு விபத்துகள் மக்களுக்கு நேர்கையில் இந்நிகழ்ச்சியைப்பார்க்கும் இளைய தலைமுறை, சிறுபிள்ளைகள் அவற்றை கையாண்டால் என்னவாகும்?’’ என்று கொந்தளிக்கிறார் திருச்சியில் இருந்து என்.சாருலதா.

குறை ஒன்றுமில்லை!

``பொதிகை தொலைக்காட்சியில் சனிக் கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கும், மறுஒளிபரப்பாக செவ்வாய் இரவு 9.30 மணிக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை ஒட்டி ஒளிபரப்பாகும் `குறை ஒன்றுமில்லை’ நிகழ்ச்சி மிகவும் அற்புதம். வெவ்வேறு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்காகவே அவர் செய்த கச்சேரிகள் பற்றிய செய்திகளும் வெவ்வேறு ஊர்களில் அவர் நடத்திய இசைக்கச்சேரிகளின் சில பகுதிகளும் ஒளிபரப்பானது அருமை’’ என வியந்து பேசுகிறார்... சென்னை, மந்தைவெளியில் இருந்து சியாமளா ரங்கன்.

சின்ன சின்ன செய்தி!

``புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வித்தியாசமான விநோதமான செய்திகளை வழங்கும் நிகழ்ச்சியாக `சின்ன சின்ன செய்திகள்’ திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பப்படுகிறது. இதில் சர்வதேச நிகழ்வுகள், வேடிக்கையான சம்பவங்கள், சுவாரசியமான காட்சிகள் என சமூக வலைதளங்களில் உலா வரும் நகைச்சுவை காட்சிகளை மக்கள் பார்வைக்கு காணக்கொடுக்கிறார்கள். சின்னச் சின்ன செய்தி மனதில் நன்கு பதிகிறது’’ என்கிறார் திருக்கானூர்பட்டியில் இருந்து எஸ்.நித்யலட்சுமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism