ஒரு டஜன் யோசனைகள்!

ம்மில் பெரும்பாலானோர், நம்முடைய மற்றும் நம் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி காப்பீடு எடுத்திருப்போம். ஆனால், அதை க்ளெய்ம் செய்வது என்பது, பலருக்கும் கண்ணைக்கட்டி காட்டில்விட்ட கதையாகத்தான் இருக்கும். இது தொடர்பாக தெளிவுபெற, இன்ஷூரன்ஸ் தொகை க்ளெய்ம் செய்வது பற்றிய வழிகாட்டல்களை இங்கே வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரன்.

1. தெஃப்ட் இன்ஷூரன்ஸ்


வீடு/அலுவலகத்தில் திருடுபோகும் பொருளுக்கான காப்பீடு அளிக்கும் ‘தெஃப்ட் இன்ஷூரன்ஸ்’ எடுக்கும்போது, மொத்தப் பொருட்களின் மதிப்பைக் கணக்கிட்டு க்ளெய்ம் செய்வதற்கான தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் முடிவு செய்யும். பொருட்கள் திருடுபோனால், குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள காவல் நிலையத்தில் FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவுசெய்து, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து, ஒரு வாரத்துக்குள் அதற்கான படிவத்தைப் பூர்த்திசெய்து தொலைந்த பொருட்களின் பட்டியலை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். நிறுவனம் தன் விசாரணை மூலம் அதை உறுதிசெய்து, ஒரு மாதத்துக்குள் இழப்பீடு வழங்கும்.

2. ஆயுள் காப்பீடு

ஒரு டஜன் யோசனைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!ஆயுள் காப்பீடு எடுத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், நாமினி க்ளெய்ம் படிவத்தைப் பூர்த்திசெய்து, பாலிசியின் அசல் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் இணைத்து சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் இழப்பீடு தொகை கிடைக்கப்பெறலாம்.

3. மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு எடுக்கும்போதே, எந்த நோய்களுக்கு எல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. காப்பீடு நிறுவனம் கூட்டு (டை-அப்) வைத்திருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்போது, மருத்துவமனையே நேரடியாக அந்நிறுவனத்திடம் கட்டணத்தை பெற்றுக்கொள்ளும். இன்ஷூரன்ஸ் நிறுவனம் டை-அப் வைத்திராத மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்போது, பரிசோதனை, மருந்து, மாத்திரைகள் என ஒவ்வொன்றுக்குமான ரசீதுகளைச் சேகரித்து, விண்ணப்பத்துடன் சமர்ப்பித்து காப்பீடு நிறுவனத்திடம் க்ளெய்ம் செய்ய வேண்டும். அனைத்துச் செலவுகளுக்கும் க்ளெய்ம் கிடைக்காது என்பதால், காப்பீடு எடுக்கும்போதே எந்தெந்த செலவுகளுக்கு க்ளெய்ம் செய்து பணம் பெறலாம் என்பதில் தெளிவுபெற்றுக்கொள்ளவும்.

4. க்ரிட்டிக்கல் இல்னஸ்

இதய நோய், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட மிக ஆபத்தான சில நோய் களுக்கு சாதாரண மெடிக்ளெய்ம் பாலிசியில் கவரேஜ் கொடுக்கப்படுவதில்லை. இதற்கெனவே க்ரிட்டிகல் இல்னஸ் என்ற பிரத்யேக பாலிசி  உள்ளது. பாலிசி எடுத்த நபருக்கு எப்போது நோயின் அறிகுறியோ, இறப்போ நேரிடுகிறதோ அப்போது முழுத் தொகையும் உரிய சான்றிதழுடன் பெற்றுக்கொள்ள முடியும்.

5. தீப்பிடித்தால்...

ஃபயர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, வீடு அல்லது அலுவலகத்தில் தீப்பிடித்த உடன், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து, அவர்களிடம் சான்றிதழ் பெற்று, காவல் நிலையத்தில் `FIR' பதிவு செய்ய வேண்டும். விபத்து நடந்த ஒரு வாரத்துக்குள் காப்பீடு நிறுவனத்தின் க்ளெய்ம் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அதற்கடுத்த இரண்டு நாட்களுக்குள் நிறுவனம் வீடு/அலுவலகத்தை ஆய்வுசெய்து இழப்பீடு தொகை அளி்ப்பார்கள் . அதுவரை, விபத்து நடந்த இடத்தில் எந்தப் பொருளையும் மாற்றியமைக்கக் கூடாது என்பது நிபந்தனை.

ஒரு டஜன் யோசனைகள்!

6. கால்நடை இழப்பு

கால்நடைகள், செல்லப்பிராணிகள் விபத்திலோ, நோயுற்றோ இறக்க நேரிட்டால், குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள கால்நடை மருத்துவரிடம் இறப்புக்கான காரணச் சான்றிதழைப் பெற்று காப்பீடு நிறுவனத்தில் க்ளெய்ம் செய்ய வேண்டும். பாலிசி எடுக்கும்போதே, எந்தெந்த வியாதிகளால் ஏற்படும் இறப்புக்கு க்ளெய்ம் செய்ய முடியும் என்பதை கேட்டறிந்துகொள்ளவும்.

7. வாகன இழப்பு

வாகனங்களுக்கு விபத்தினால் ஏற்படும் சேதாரம், திருடு போவது ஆகிய இரண்டு காரணங்களுக்காக இழப்பீடு பெற முடியும். வாகனம் வாங்கிய நிறுவனம் டை-அப் வைத்திருக்கும் காப்பீடு நிறுவனத்தில் பாலிசி எடுத்திருக்கும் பட்சத்தில் விபத்தினால் ஏற்பட்ட பழுதுகளை சரிபார்ப்பதற்கான செலவை வாகன நிறுவனமே நேரடியாகக் காப்பீடு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும். அது அல்லாத வேறொரு நிறுவனத்தில் காப்பீடு எடுத்திருந்தால், பழுது செலவுக்கான ரசீதுகளை சமர்ப்பித்தே இழப்பீடு பெற முடியும். வாகனம் திருட்டுபோனால் காவல் நிலையத்தில் `FIR' பதிவுசெய்து, பாலிசி எடுத்த நிறுவனத்தின் க்ளெய்ம் விண்ணப்பத்துடன் அதை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

8. வீட்டுக் கடன்

வீட்டுக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிறுவனத்துடன் டை-அப் வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஹோம்லோன் இன்ஷூரன்ஸ் பாலிசியும் எடுக்க முடியும். இதன்படி, லோன் வாங்கியவர் இறந்துவிட்டால், க்ளெய்ம் படிவத்துடன் அவரின் இறப்புச்சான்றிதழை இணைத்து சமர்ப்பிக்க, அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமே அவர் கடன் தொகையைக் கட்டிவிடும்.

ஒரு டஜன் யோசனைகள்!

9. பயிர்களுக்கான காப்பீடு

பயிர்க்கடன் வழங்கும் வங்கி அல்லது கூட்டுறவு வங்கியை அணுகி, உங்கள் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி, பயிர்க் காப்பீடு விண்ணப்பத்தை அங்கேயே பெற்று பூர்த்திசெய்து, பிரீமியம் தொகையுடன் சமர்ப்பிக்கவும். பிரீமியம் தொகையானது  பயிரின் வகை, அதன் கால அளவு, பயிரிடப்படும் பரப்பு போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். பிரீமியம் தொகையை வங்கி/விவசாயக் காப்பீடு நிறுவனத்திடம் செலுத்திவிட்டால் காப்பீடு பெற முடியும். ஒவ்வொரு பருவத்துக்கும் புதிய காப்பீடு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. க்ளெய்மைப் பொறுத்தவரை, தனிப்பட்ட விவசாயியின் கோரிக்கையை ஏற்று பணம் தருவது கிடையாது. புயல், வெள்ளம், பூச்சித் தாக்குதல், வறட்சி என அந்தப் பகுதியில் பயிர் செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், இழப்பீடு வழங்கப்படும்.

10. வேலை இழப்பு இன்ஷூரன்ஸ்

பணிபுரியும் நிறுவனம் காலவரையறையின்றி அடைக்கப்பட்டாலோ, அல்லது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலோ வேலையை இழந்தால், கட்டிய பிரீமியம் தொகையைப் பொறுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் அன்றாடத் தேவைக்கான தொகையை 3 - 6 மாதம் வரை வழங்கும்.

ஒரு டஜன் யோசனைகள்!

11. மின்சாதனப் பொருட்கள்

வீட்டிலிருக்கும் மின்சாதனப் பொருட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்து, அவை பழுதடைந்தால் அல்லது திருட்டுபோனால் க்ளெய்ம் செய்ய முடியும். என்னென்ன காரணங்களுக்காக க்ளெய்ம் செய்ய அனுமதிக்கப்படும் என்பதை, பாலிசி எடுக்கும்போது கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

12. கவனம்

இன்ஷூரன்ஸ் தொகையை எந்தச் சிக்கலுமின்றி பெற, பிரீமியம் தொகையை நிபந்தனைக்குட்பட்டு முறையாகச் செலுத்தியிருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

சு.சூர்யா கோமதி