தங்கம்... உச்சரிக்கும்போதே நம்மை உற்சாகத்தின் உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் ஓர் உலோகம். காது, கழுத்து, கைகளில் மின்னி, பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் தங்க நகைகள் மீது, பட்டி முதல் சிட்டி வரை தனி கிரேஸ்தான்.

20, 25 வருடங்களுக்கு முன்பு சவரனே 2,000 முதல் 3,000 ரூபாய்க்குள் கிடைத்த தங்கத்தின் விலை, இன்றோ பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, ஒரு கிராம் தங்கமே கிட்டத்தட்ட 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியர்களின் பாரம்பர்யத்தில் திருமணங்கள் தங்கமின்றி அமையாது என்ற நிலையில், சாமான்யர்களின் வாழ்வில் தங்கம் என்பது கனவாகிப் போய்விட்டது என்றே சொல்லலாம்.

இந்நிலையில்... தங்கத்துக்கு மாற்றாக ஓர் உலோகம், அதுவும் சல்லிசான விலையில் கிடைத்தால்... நடுத்தர வர்க்க மக்கள்கூட ஒட்டியாணம் வாங்கி அணியலாம் என்ற நிலையை அது உருவாக்கினால்... அப்படி ஒரு மாற்று உலோகம்தான் தற்போது இந்திய ஆபரணச் சந்தையில் தன்னுடைய முத்திரையைப் பதிக்கக் களமிறங்கியுள்ளது. ‘தங்கத்துக்கு மாற்று’ என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய உலோகக் கலப்பின் பெயர், ‘லூமினக்ஸ் யூனோ’ (lumineux uno). நான்கு வெவ்வேறு காஸ்ட்லி உலோகங்களான தங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி ஆகியவற்றைக் கலந்து இந்த லூமினக்ஸ் யூனோ தயாரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் அமைந்துள்ள ஆசிய மற்றும் அமெரிக்க நிறுவனமான ‘லீடிங் ஜுவல்லர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட் (எல்.ஜே.ஓ.டி.டபிள்யூ)’ என்னும் சர்வதேச நகைத் தொழில் கூட்டமைப்பு, இந்த உலோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 கிராம் லூமினக்ஸ் யூனோவின் விலை 1,250 ரூபாய் மட்டுமே என்கிறார் இந்தக் கூட்டமைப்பின் தலைவரான சஞ்சீவ் அகர்வால்.

‘தங்கம், வைரம், பிளாட்டினம் எல்லாமே எட்டாக் கனியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்தப் புதிய உலோகம் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும்கூட, இதன் பயன்பாடு முறையாக தமிழகத்தில் காலூன்றிய பிறகுதான் நம்பகத்தன்மை, துல்லியம், நகை வடிவமைப்புக்கான சாத்தியக்கூறுகளை இங்கிருக்கும் நகையாளர்கள் ஆராய்ந்து, தெரிவிக்க முடியும்’ என்றார் பிரபல நகை வடிவமைப்பாளர் ஒருவர்.

‘புதுயுகத்துக்கான உலோகம்’ என்று சொல்லியே பிரபலப்படுத்தப்படும் இந்த உலோகம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ‘கட்டிகளாகவும், நாணயங்களாகவும் தற்போது இந்திய நகைச் சந்தையில் கிடைக்கத் தொடங்கியிருக்கும் லூமினக்ஸ் யூனோ, அடிப்படையில் வெள்ளை நிறம் கொண்டது. இந்த உலோகத்தை தங்க முலாம் பூசி, வேண்டிய வடிவத்தில் ஆபரணங்களாக உருவாக்கிக்கொள்ளலாம். அதன் அசலான வெண்மை நிறம், முலாம் பூசிய ரோஜாப்பூ நிறம், தங்க நிறம் ஆகிய மூன்று வண்ணங்களில் இதனை வாங்கிக்கொள்ளலாம்’ என்கிறது எல்.ஜே.ஓ.டி.டபிள்யூ நிறுவனம்.

விலைமதிப்புள்ள நான்கு வெவ்வெறு உலோகங்களைக் கலந்து விலைகுறைவான நகை தயாரிப்பு உலோகம் உருவாக்குவது சாத்தியப் படுமா என்பது சிறிய நெருடலை உண்டாக்குவதாக இருந்தாலும், ‘எந்த ஒரு புதிய முன்னெடுப்புக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவது இயல்பே!’ என்கிறார்கள் இதை வரவேற்கும் பலர்.

இந்த உலோக நகைகள் உண்மை யிலேயே தரமானவை என்றால், குறைவான விலையில் கிடைக்கும் ஒரு மதிப்புமிக்க ‘சேவிங் சோர்ஸ்’ ஆக லூமினக்ஸ் யூனோ மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு வரும்வரை காத்திருப்போம்!

- பா.விஜயலட்சுமி

லூமினக்ஸ் யூனோவின் சாத்தியக்கூறுகள், நம்பகத்தன்மை, எதிர்காலம் பற்றி இவர்களிடம் கேட்டோம்...

வ.நாகப்பன், நிதி நிர்வாக ஆலோசகர்

‘‘நகைக்கான உலோகம்னு சொன்னாலே, முதல்ல நம்ம மக்கள் கேட்கிறது, ‘தங்கத்தை விட கம்மியான விலைன்னா, திருப்பிக் கொடுக்கும்போது என்ன விலைக்கு எடுத்துக்கு வாங்க?’ அப்படீங்கிறதுதான். இங்கிருக்கிற நகைக் கடைகள் எல்லாம் இதை தங்கத்துக்கு மாற்றா விற்க முன்வருவாங்களா என்பது அடுத்த கேள்வி. மூன்றாவது, இது அடித்தட்டு மக்களுக்கானதுனு சொல்லப்பட்டாலும், வசதியானவங்கதான் இதை அதிகளவில் வாங்க சாத்தியம் இருக்கு. தமிழ்நாட்டில் தங்கத்தை அழகுக்கு மட்டும் வாங்கிறதில்லை, திடீர் பணத்தேவைக்கு அடகுவைக்க தங்கம் இங்க பெரும்பாலானவங்களுக்கு கைகொடுக்கும். இதில் அது முடியாது. லூமினக்ஸ் பற்றிய கேள்விகளுக்கு எதிர்காலம்தான் பதில் சொல்லணும்.’’

சௌந்தர்யா தேவி, கல்லூரி மாணவி

‘‘இன்றைய காலகட்டத்துல இளம் பெண்கள் தங்கமா, வெள்ளியானு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறதில்ல. ட்ரெண்டியா, ஃபேஷனபிளாதான் எதிர்பார்க்கிறோம். தங்கத்திலேயே கொஞ்சம் வெள்ளி கலந்த மாதிரியான ‘கோல்ட்- வொயிட்’ நகைகள்தான் இப்போ கேர்ள்ஸ்கிட்ட ஹைலைட்டா இருக்கு. அதேபோல பிங்க் கலர்ல எனாமல் வொர்க் பண்ணின கோல்ட் நகைகள் எல்லாம் இப்போ ஹாட் ஃபேஷன். அதனால புதுசா, அதுவும் குறைஞ்ச விலையில ட்ரெண்டியான நகைகள் கிடைச்சா, நிச்சயமா அதுக்கு எங்ககிட்ட வரவேற்பு இருக்கும்.’’

ராஜசேகரன், நகை வடிவமைப்பாளர்

‘‘நாலு உலோகக் கலப்பில் தயாரிக்கப்பட்ட இந்த உலோகத்தில் பெரும்பாலும் மெஷின் கட்டிங் நகைகள்தான் செய்ய முடியும். கையால் நகைகள் செய்யுற சாத்தியக்கூறுகள் இருக்கா என்பது, தமிழகத்துக்கு வந்தப்புறம்தான் சொல்ல முடியும். நாலு உலோகக் கலப்பு எனும்போதே, சுத்தத்தன்மை என்பது 50% தான் இருக்கும். அதனால லூமினக்ஸ் யூனோ பிரபலம் ஆகுமா, நகை வடிவமைப்புக்கு சரிப்பட்டுவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.’’