Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
News
கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

“நான் இப்போ புதுமாப்பிள்ளை!”

ன் டி.வி ‘பிரியமானவள்’ பிரபா கேரக்டர் மூலமாக பல குடும்பங்களிலும் பரிச்சயமான முகமது அசீம், இப்போது புதுமாப்பிள்ளை!

கேபிள் கலாட்டா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘நான் பக்கா சென்னைப் பையன். ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்போ நேஷனல் லெவல் அத்லெட் மற்றும் கார் ரேஸரா இருந்தேன். கலகலனு பேசுவேன். ‘நீ மீடியாவுக்குப் போகலாமே’னு நிறைய பேர் சொன்னாங்க. பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு இருந்தப்போ தொடங்கப்பட்ட ஜீ தமிழ் சேனல் ஆடிஷன்ல கலந்துகிட்டு `விஜே'வா தேர்வாகி அதில் ‘சென்னை 28’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அடுத்து ஒரு எஃப்.எம் வேலை, பல சேனல்கள்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர்னு நாட்கள் ஓடிச்சு.

எம்.எஸ்ஸி., விஸ்காம் படிச்சுட்டே, சன் மியூசிக்ல ரெண்டு வருஷம் `விஜே'வா வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ, விஜய் டி.வி ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் சீஸன் டூ-வுல ஹீரோ வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து விஜய் டி.வி ‘தெய்வம் தந்த வீடு’, சன் டி.வி ‘பிரியமானவள்’ சீரியல்னு நல்லா போயிட்டு இருக்கு. குறிப்பா, ‘பிரியமானவள்’-க்கு முன், ‘பிரியமானவள்’-க்கு பின்னு சொல்ற அளவுக்கு இந்த சீரியல் எனக்குப் பெரிய ரீச் கொடுத்திருக்கு. அந்த சீரியல்ல நாலு பிரதர்ஸ்ல கடைசித் தம்பியா, ஹீரோயிஸம் காட்டுற கேரக்டர். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு டயலாக் பேசுறப்போ, யூனிட்ல எல்லோரும் எனக்கு சிரிப்பு காட்டி, ஷூட்டிங் ஸ்பாட் கலகலனு இருக்கும். எங்க போனாலும்‘பிரபா’ன்னு என் கேரக்டர் பெயரைச் சொல்லிக் கூப்பிடுறது எக்ஸ்ட்ரா சந்தோஷம்.

அஜித் சார் படிச்ச ஆசான் மெமோரியல் ஸ்கூல்லதான் நானும் படிச்சேன். என்னோட இன்ஸ்பிரேஷன், ‘தல’தான். எனக்கு வாழ்க்கையில பெரிய பக்கபலம்னு யாரும் இல்லாததால, எல்லா விஷயங்களையும் நானே அடிபட்டு அடிபட்டு தோல்விகள்ல இருந்துதான் பாடமா கத்துக்கிட்டேன், அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்தேன். ரெண்டு ஷார்ட் ஃபிலிம் இயக்கியிருக்கேன். ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி மாதிரி `மாஸ்'ஸான வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசை. இப்போ ரெண்டு படத்துல ஹீரோவா நடிக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. அப்புறம் பாஸ்... நான் இப்போ புதுமாப்பிள்ளை. போன வாரம்தான் எனக்குக் கல்யாணம் முடிஞ்சுது. சல்மாகூட சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கேன். ஆசீர்வதிங்க..!’’

இல்லறம்... நல்லறம்... வாழ்த்துகள் சகோ!

‘‘வெண்ணிலாதான் எனக்கு சவால்!’’

ன் டி.வி ‘வள்ளி’ சீரியலில், ‘வள்ளி’, ‘வெண்ணிலா’ என இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார் வித்யா!

கேபிள் கலாட்டா!

‘‘பூர்வீகம் கேரளா. ஸ்கூல் படிக்கும்போதே விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். விரைவில் திரைப்பட வாய்ப்பும் வந்தது. தமிழ், மலையாளம், கன்னடத்தில் 20 படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். ஒரு மலையாள சீரியல்ல நடிச்சுட்டு இருந்தப்போதான், ‘வள்ளி’ சீரியல் வாய்ப்பு வந்தது. சீரியலோட கதையில் திடீர்னு வள்ளியோட தங்கை ‘வெண்ணிலா’னு ஒரு கேரக்டர் உருவாக்கப்பட்டு நான் ‘வள்ளி’, ‘வெண்ணிலா’னு டூயல் ரோல் பண்ணவேண்டி வந்தப்போ, அது சவாலா இருந்தது. அக்கா கேரக்டருக்கும் தங்கச்சி கேரக்டருக்கும் வித்தியாசம் காட்டி நடிக்கணும். அதோட பார்வையில்லாத ‘வெண்ணிலா’ கேரக்டருக்காக கண்களை வருத்தி நடிக்கும்போது, பயங்கரமா தலைவலி வரும். அதை முகத்துல காட்டிக்காம நடிக்கணும். ஆனா, ‘வெண்ணிலா’தான் எனக்கு அதிக பாராட்டை வாங்கிக்கொடுத்திருக்கா.

என் கணவர் வினுமோகனும் அவர் குடும்பமும் மலையாள சினிமா துறையில் இருக்காங்க. நானும் அவரும் கிடைக்கிற ஓய்வு நேரங்கள்ல பைக் அல்லது கார்ல அவுட்டிங் சுத்திட்டே இருப்போம். என் கணவரும் அவரோட நண்பர்களும் சேர்ந்து ‘தெருவோரம்’ என்ற அமைப்பு மூலமா ஆதரவற்றவங்களுக்கு உணவு, இருப்பிடம்னு உதவி செய்துட்டு இருக்காங்க. அதுல அப்பப்போ என்னோட பங்களிப்பையும் கொடுக்கும்போது, அது புதுவிதமான சந்தோஷத்தைக் கொடுக்குது!’’

டூயல் ரோல்... தூள் கிளப்புங்க!

‘‘12 வருஷமா ஃபீல்டுல இருக்கேன்!’’

சின்னத்திரையில் அகிலா சீனியர்! ‘‘பள்ளிப்படிப்பை முடிச்சுட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முயற்சி செய்துட்டு இருந்தப்போ, சன் டி.வி ‘செல்வி’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அடுத்து ‘மலர்கள்’ சீரியல் எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்துச்சு. அப்படியே இன்னும் சில சேனல் சீரியல்களில் பிஸியானப்போ, ஜெயா டி.வி ‘டேக் 5’ நிகழ்ச்சி மூலமா, ஒருவழியா என் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆசை நிறைவேறியது. இதுக்கு நடுவில் கரஸ்ல பி.ஏ படிச்சேன். இப்போ சன் டி.வி ‘கல்யாணப்பரிசு’ சீரியல்ல ஹீரோயின் கேரக்டர்லயும், ‘அபூர்வ ராகங்கள்’, ‘பைரவி’, ஜீ தமிழ் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’னு மூணு சீரியல்கள்ல பயங்கர நெகட்டிவ் ரோல்லயும் நடிச்சுட்டு இருக்கேன்.

கேபிள் கலாட்டா!

40-க்கும் அதிகமான சீரியல்களில் விதவிதமான கேரக்டர்களில் நடிச்சிருக்கிறதோட, ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷ் சாரோட தங்கச்சி கேரக்டர் உள்பட நிறைய படங்கள்ல யும் நடிச்சிருக்கேன். தொடர்ந்து 12 வருஷமா ஃபீல்டுல இருக்கேன். நடிப்புக்கு நடுவுல என்னோட நண்பர்களோட சேர்ந்து ‘ஐடியா செல்லர்’ங்கிற புரொடக்‌ஷன் நிறுவனம் மூலமா நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், ஈவன்ட்களும் தயாரிக்கிறேன்! ’’

சின்சியர் சீனியர்!

 ரிமோட் ரீட்டா, படங்கள்: எம்.உசேன்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

திருத்தங்கைகள்... அருமை!

``பொதிகை தொலைக்காட்சியில் சனிக் கிழமைதோறும் காலை 11 மணிக்கு `திருத்தங்கைகள்’ எனும் தலைப்பில் திருநங்கைகள் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் இடம்பெற்ற, மதபோதகராக இருக்கும் திருநங்கை பற்றிய நிகழ்ச்சி அருமை. அவரது மென்மையான குரல் பலரின் கண்ணீரைத் துடைக்கும் என்று அவரைப் பேட்டி கண்ட கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி கூறியது சரியே! நல்ல தொரு நிகழ்ச்சியை பார்த்த திருப்தி’’ என்று பாராட்டுகிறார் திருச்சியில் இருந்து ந.சாருலதா.

அன்பு பெருகட்டும்!

``விஜய் டி.வி-யில் சமீபத்தில் ஒளிபரப்பான `நீயா நானா’வில் குழந்தைகளின் சண்டைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் தங்கள் மனக்குமுறலை கொட்டினார்கள். முதல் குழந்தையாக பிறந்தால் நிராகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது... மிகவும் வேதனையாக இருந்தது. அந்தக் காலத்தில் பத்து குழந்தைகள் இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று வேறுபாடு கொண்டிருக்காது. ஆனால், இன்றைய காலத்தில் இரு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் குட்டி சகோதர யுத்தம் நடைபெறுவது எதிர்காலத்தில் இக்குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பை கேள்விக்குறியாக்குகிறது. பெற்றோர் - குழந்தைகளிடையே அன்பு, பாசத்தை அதிகப்படுத்த வேண்டுமென்பதை உணர்த்திய விதம்...சூப்பர்!’ என சிலாகிக்கிறார் சென்னை, பெரம்பூரில் இருந்து பி.கே.பிரேமிகா.

அரிய தகவல்... இனிய இசை!

``எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை ஒட்டி `குறையொன்றுமில்லை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் எம்.எஸ். பற்றிய பல அரிய விஷயங்களை அறிய முடிகிறது. சமீபத்திய நிகழ்ச்சியில், எம்.எஸ்.சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியின் தயாள குணத்தைப் பற்றி நல்லி குப்புசாமி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், நிகழ்ச்சியில் எம்.எஸ். அவர்களின் இனிய இசை யையும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது'' என்று மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் பெங்களூரில் இருந்து ஜி.இந்திரா.

திருத்தம்

அம்மா அல்ல!

அவள் விகடன் 26.7.16 தேதியிட்ட இதழின், கேபிள் கலாட்டா பகுதியில் நடிகை பிரவீணாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது. அதில், ‘வெற்றிவேல் திரைப்படத்தில் சசிகுமாரின் அம்மாவாக நான் நடித்திருக்கிறேன்' என்று பிரவீணா சொல்வது போல் வெளியான தகவல் தவறானது. அவர் அந்தப் படத்தில் நடிகர் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கிறார் என்பதே சரி.

தவறான தகவலுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்