இந்த ஆவணியில் கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி என இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடவிருக்கிறோம். அந்த திருநாட்கள் பற்றிய ஆன்மிகத் தகவல்களைச் சொல்கிறார், கே.குமார சிவாச்சாரியார்.

கோகுலாஷ்டமி

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று ரோஹிணி நட்சத்திரத்தில், நள்ளிரவில் வசுதேவருக்கும், தேவகிக்கும் சிறையில் மகனாக அவதரித் தார் கிருஷ்ணர். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதார பிறப்பே ‘கோகுலாஷ்டமி’ என அழைக்கப்படுகிறது. இந்த துர்முகி வருடத்தில், ஆவணி 9-ம் தேதி (ஆகஸ்ட் 25), வியாழக் கிழமை, தேய்பிறை அஷ்டமியும், ரோஹிணி நட்சத்திரமும் சேரும் நாளில் கோகுலாஷ்டமி வருகிறது.

பூஜையறை வழிபாடு

வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கிருஷ்ணரின் திருப்பாதங்களை மாவு கோலத்தில் வரைய வேண்டும். அப்படிச் செய்வதால் கிருஷ்ணர் வீட்டுக்கு வந்திருப்பதாக ஐதீகம். பூஜையறையில் கிருஷ்ணரின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ அலங்கரித்து, இரண்டு புறங்களிலும் விளக்கேற்றி... தாம்பூலம், தேங்காய், துளசி, ஐந்து வகைப் பழங்கள், வெண்ணெய் மற்றும் கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்களை நிவேதனம் செய்து, கிருஷ்ண அஷ்டோத்திர நாமாவாளி அர்ச்சனை செய்து தூப, தீப ஆரத்தி செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி

இந்த துர்முகி வருடத்தில் ஆவணி 20-ம் தேதி (செப்டம்பர் 5), திங்களன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அத்திருநாளில் விநாயகருக்கு காலை 9 மணி முதல் 10.25 மணிவரை பூஜை செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி... ஏன் கொண்டாடுகிறோம்?

ஒரு முறை திருக்கயிலாயத்தில் விநாயகர் பூதகணங்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தார். இதை வானத்திலிருந்து பார்த்த சந்திரன், விநாயகரின் தும்பிக்கை அசைவை ஏளனமாகக் கேலிசெய்து சிரித்துவிட்டார். இதனால் கோபமுற்ற விநாயகர்... சந்திரனை, ‘தேய்ந்து போ’ என்று சாபமிட்டார். தவற்றை உணர்ந்த சந்திரன், அந்த சாபத்துக்குத் தீர்வு என்ன என்று நாரதரிடம் யோசனை கேட்டார். `நீ விநாயகரிடம் சரணடைந்து சாபவிமோசனம் பெறுவதுதான் வழி’ என்று நாரதர் சந்திரனுக்கு ஆலோசனை கூறினார். அப்படியே செய்து சந்திரன் சாபவிமோசனம் பெற்றார். அந்நாள்தான் `விநாயகர் சதுர்த்தி’ எனக் கொண்டாடப்படுகிறது.

விரத மகிமை

வனத்தில் வேட்டைக்குச் சென்ற வேடன் ஒருவனை புலி துரத்த அருகிலிருந்த வன்னிமரத்தில் ஏறிக்கொண்டான். ஆனால், அன்று முழுவதும் புலி அங்கிருந்து நகரவில்லை. அச்சத்தில் வன்னிமர இலைகளை பறித்து கீழே போட்டபடியே இருந்தான். பொழுது விடிந்ததும், புலியை காணாது ஆச்சர்யம் அடைந்து கீழே வந்தபோது அந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று இருந்ததையும், தான் பறித்து போட்ட இலைகளால் விநாயகருக்கு அர்ச்சனை செய்ததை அறிந்தான். அந்த புண்ணியமே அவனுடைய உயிரைக் காப்பாற்றியது.

பூஜை செய்யும் முறை

சதுர்த்தியன்று காலை அனுஷ்டானங் களை சூர்யோதயத்தின்போது நிறைவுசெய்து கொண்டு, பூஜையறையில் விநாயகரை நினைத்து தீபமேற்றி, ஒரு மணைப்பலகை வைத்து, அதில் சஷ்டிகோலமிட்டு, அருகம்புல், துளசி, வன்னி, மாசி, வில்வ இலை, எருக்கம் மலர்களால் செய்த மாலைகள் மற்றும் வஸ்திரம் சாத்திய பிள்ளையாரை கிழக்குப் பார்த்து வைக்கவும் ஒரு கலசத்தை நூல் சுற்றி வாசனை திரவியங்கள் கலந்த நீரால் நிரப்பி, மாவிலைக் கொத்து, தேங்காய் வைத்து வஸ்திரம், வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிள்ளையாருக்கும் முன்பாக ஒரு தலைவாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் நடுவில் கலசத்தை வைக்க வேண்டும்.

விநாயகருக்குப் பிரியமான பதார்த்தங்களை தாம்பூலத்துடன் நைவேத்தியம் செய்ய வேண்டும். பின்னர் அருகு, எருக்கம், சங்கு புஷ்பம், மாதுளம் இலை ஆகியவற்றுடன் பன்னீர் சேர்த்து விநாயகரின் அஷ்டோத்திர சத நாமாவளி அர்ச்சனை செய்து தீபாராதனை செய்யவும்.

பின்னர் பிரசாதம் எடுத்துக் கொண்டு, ஆத்ம பிரதட்சணம் செய்து (தன்னைத்தானே சுற்றி) விநாயகருக்கு மலரிட்டு புஷ்பாஞ்சலி செய்யவும்.

விநாயகர் அகவல் மற்றும் கணேஷ அஷ்டகம் துதிகளை பாராயணம் செய்யலாம்.

ம.மாரிமுத்து