வில்வம்...

தாவரப்பெயர்: AEGLE MARMELOS

வேறு பெயர்கள்: கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம்

பயன் தரும் பாகங்கள்: இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பட்டை, பிசின்.

வில்வம் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு மரம். இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. பெரும்பாலும் சிவன் கோயில்களில் காணப்படும். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படுத்தப்படுகிறது. வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

மருத்துவப் பயன்கள்: வில்வ மரத்தின் இளம்தளிரை வதக்கி பொறுக்கும் சூட்டுடன் கண் இமைகளில் ஒத்தடம் கொடுத்தால் கண் வலி, கண் சிவப்பது, கண் அரிப்பு போன்றவை குணமாகும். வில்வக்காயை உடைத்து அதன் சதையை எடுத்து புளி, இஞ்சி, கொத்தமல்லித்தழை, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் வாய்ப்புண், குடல்புண் மற்றும் கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.

வில்வப்பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி, அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு நாளைக்கு 3 முறை ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால்... மலத்தில் சீழ், ரத்தம் போவதை தடுத்து, மலத்தை ஒழுங்காக வெளியேற்றும். அத்துடன், உடல் வெப்பமும் நீங்கும். வில்வப்பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தகுந்தபடி நல்லெண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும்பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு வாரம் 2 நாள் அதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், சூட்டினால் வரக்கூடிய கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் சரியாகும். கண்கள் குளிர்ச்சியடையும். வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து நசுக்கி குடிநீர் சேர்த்து அருந்த... மூல நோய் நாளடைவில் குணப்படும்.

எம்.மரிய பெல்சின்