வீர, தீர, சாகசச் செயல்புரியும் பெண்களுக்கு தமிழக அரசினால் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் ‘கல்பனா சாவ்லா’ விருதை, இவ்வருடம் பெற்றிருக்கிறார் ஜெயந்தி. இவரைப் பற்றி கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியிட்ட அவள் விகடன் இதழில் ‘மயான புத்ரி! ஆச்சர்யமூட்டும் ஜெயந்தி' என்ற தலைப்பில், கட்டுரை வெளியானது.

சுடுகாடு என்றாலே அஞ்சும் பெண்களுக்கு மத்தியில், நாமக்கல் நகராட்சியும், யுனைடெட் வெல்ஃபேர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திவரும் மின்மயானத்தில் மேனேஜராகவும், சிதையூட்டும் பணியாளராகவும் வேலைசெய்து வரும் ஜெயந்தி, ஒரு பிராமணப் பெண். ஆறரை ஆண்டுகளாக இப்பணியில் 2,300-க்கும் அதிகமான உடல்களுக்கு சிதையூட்டியிருக்கிறார். விருதுடன் 5 லட்சம் பரிசுத் தொகை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் என ஜெயந்தி விருது உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘அவள் விகடன்தான் சிதையூட்டுற என்னைப் பத்தி முதல்ல எழுதி ஊக்கப்படுத்துச்சு. அதுக்குப் பிறகு கடந்த ஒன்றரை வருஷத்தில் கிட்டத்தட்ட தமிழத்தின் எல்லா பத்திரிகைகளும், செய்தி சேனல்களும் என்னைப் பத்தின செய்திகளை வெளியிட்டாங்க. ஆரம்பத்துல, ‘வெட்டியாள் வேலை செய்றியே..?’னு முகம் சுளிச்சவங்க அதிகம். ஆனா, இப்போ ‘துணிச்சலான பொண்ணு’னு என்னை எல்லோரும் பாராட்டுறாங்க. வெளியூர், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் முகம் தெரியாத எத்தனையோ பேர் என்னை வாழ்த்திப் பேசினாங்க.

நான் சிதையூட்டுற ஒவ்வொரு உடலையுமே என் அப்பா, அம்மா, உறவினர்களாதான் பார்க்கிறேன். என்னோட உழைப்புக்கும் துணிச்சலுக்கும் கிடைச்ச அங்கீகாரம்தான், ‘கல்பனா சாவ்லா’ விருது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த விருதை நான் கடவுளா நினைக்கும் என் அப்பா, சமீபத்தில் மறைந்த என் அம்மா, எனக்கு உறுதுணையா இருக்கும் என் கணவர் வாசுதேவன், எட்டாவது படிக்கிற என் இரட்டைக் குழந்தைகள் நந்தகுமார், நவீன் குமார் மற்றும் தோழி மலருக்கு சமர்ப்பணம் செய்றேன்.

என் உடன்பிறக்காத சகோதரிகளுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்... எந்தத் துறையிலும் நாம சாதிக்கலாம். நம்மாள முடியாததுனு எதுவும் இல்ல!’’

- கு.ஆனந்தராஜ், படங்கள்: க.தனசேகரன்