ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவ நிதி திரட்டும் நோக்கத்துடன், சென்னை தீவுத்திடலில் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி மாணவிகளால் `பெண் கல்வி' என்ற பெயரில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஒருங்கிணைக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதி அதிகாலை, தீவுத்திடலே விழாக்கோலமாக இருந்தது. ‘நான் ஓடுவ தால் அவள் படிக்கப்போகிறாள்’ (I run, she learns), ‘பெண்களின் படிப்புக்காக ஓடுவோம்’ (Run to educate) என்ற வாசகங்கள் மைதானமெங்கும் காணப் பட்டன. ‘ஆட்கியர் மீடியா’வுடன் கைக்கோத்த மாணவிகள்...

பெண்களால் தனித்து ஒரு நிகழ்வை சிறப்பாக நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை, பெண் கல்விக்கு தாங்களும் உதவப்போகிறோம் என்ற சந்தோஷத்துடன் மாரத்தானில் பங்கேற்கக் காத்திருக்க, சென்னை ‘ஃபிட்னஸ் பட்ரோல்’ குழுவின் நடன நிகழ்ச்சி அவர்களின் உற்சாகத்தை இன்னும் அதிகமாக்கியது.

நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால், ‘‘பல பெண்களோட கல்விக்கு உதவவுள்ள இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மாணவிகளோட முயற்சி பாராட்டுக்குரியது. அதனாலதான் ஞாயிறு காலை ஆறு மணி என்றாலும், ஆர்வத்தோட இங்க வந்திருக்கேன்’’ என்று கொடியசைத்து மாரத்தானை துவங்கிவைத்த, பல நூறு கால்கள் ஓடத்துவங்கின.

5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என்ற இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் தீவுத்திடலில் தொடங்கி சென்னை லைட் ஹவுஸ் வரை சென்று மீண்டும் தீவுத்திடல் வந்து சேர்வதாகத் திட்டமிடப் பட்டிருந்தது. காலை 6 மணிக்குக் தொடங்கிய ஓட்டம், 6.50-க்கு நிறைவுபெற, ஆண்கள், பெண்கள் என்று இரண்டு பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.

வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பால கிருஷ்ணன், வி.வி.சபா இணைச் செயலாளர் அசோக்குமார் முந்திரா மற்றும் லண்டன் ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய ருஷ்மி சக்கரவர்த்தி பரிசுகளை வழங்கினர். 10 கிலோமீட்டர் பெண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற ரிதன்சா, தன் பரிசுத் தொகை ஐயாயிரம் ரூபாயை பெண்களின் கல்விக்கு உதவ எம்.ஓ.பி மாணவிகளிடமே வழங்கியது பாராட்டுக்குரியது.

‘‘இந்தியாவில் ஆண்களின் கல்வியறிவு சதவிகிதம்... 82.14. அதுவே பெண்களின் கல்வியறிவு சதவிகிதம்... 65.46 மட்டுமே. அதை அதிகரிக்க எங்களின் இந்த ‘பெண் கல்வி’ நிகழ்வு முயற்சி சிறு துளியாகவேனும் பங்களிக்கும் என நம்புகிறோம். நல்ல முயற்சிகள் தொடரும்..!’’

- மகிழ்வும் பெருமிதமுமாகச் சொன்னார்கள் வைஷ்ணவா கல்லூரி மாணவிகள்!

- ம.சக்கர ராஜன், படங்கள்: கெசன்ட்ரா இவாஞ்சலின்