Published:Updated:

பெண்ணால் முடியும்!

பெண்ணால் முடியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்ணால் முடியும்!

நிகழ்வு

பெண்ணால் முடியும்!

ரு பெண்ணின் முன்னேற்றம் என்பது வீட்டின் முன்னேற்றம் மட்டுமல்ல... நாட்டின் முன்னேற்றமும்கூட. இந்த வாசகம் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், யதார்த்தம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க, அதைத் தொழில்நுட்பத்தின் மூலம் பிரபலமாக்க முடியும் என்பதற்கான ஓர் உதாரணம் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா.

“சின்ன வயசுல இருந்தே கேக் அவ்ளோ புடிக்கும். அதனாலேயே கேக் செய்ய கத்துக்கிட்டேன். அப்படி பண்ற கேக் போட்டோக்களை ஃபேஸ்புக் பேஜ்ல அப்லோட் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய லைக்ஸ் எப்படி செய்யறதுன்னு கத்து கொடுக்கறீங்களான்னும் கேக்க ஆரம்பிச்சாங்க. தெரிஞ்ச சர்க்கிள்ல இருந்து ஆர்டர் வர ஆரம்பிச்சதும்தான், ‘ஓஹோ, இது நமக்கான தொழில்’னு தோண ஆரம்பிச்சது’’ என்கிறார் திவ்யா. இப்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக ‘ஃப்ளேவர்டு’ என்கிற பெயரில் கேக் பிசினஸ் மூலம் வருமானம் பார்க்கிறார்.

பெண்ணால் முடியும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திறமையுள்ள பல பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வழியோ, டெக்னாலஜியோ தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையளித்து வழிகாட்டுவதற்கான ஒரு தளம்தான் ‘விகடன் ஹேக்கத்தான்’ நிகழ்வு. கல்வி, வேளாண்மை, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, சமூகச் செயல்பாடுகள் மற்றும் திறன் உயர்த்தல் போன்றவற்றில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்கான தீர்வாக ஒரு முன்மாதிரியை வடிவமைக்கும் சவால்கள் இங்கு அரங்கேற்றப்படும். இளம் தொழில்முனைவோரின் திறமைகளை அங்கீகரிக்கும் தளமாகவும், நுகர்வோர் சேவைகளின் தேவைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் மேடையாகவும் ஹேக்கத்தான் திகழும். தொழில்நுட்பத் தடம் பதித்திருக்கும் பிரதான நிறுவனங்களிடம் வழிகாட்டுதல் பெறவும் உதவும். நிகழ்வின் முத்தாய்ப்பாக சிறந்த முறையில் பயன் அளிக்கும் முன்மாதிரியை உருவாக்கும் டாப்-3 குழுவினருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்!

தொழில்நுட்பத்தை மக்களுக்காகச் செயல்படச் செய்வோம்!