Published:Updated:

“நயனுக்கு எல்லா ஹேர்ஸ்டைலும் க்யூட்தான்!”

“நயனுக்கு எல்லா ஹேர்ஸ்டைலும் க்யூட்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நயனுக்கு எல்லா ஹேர்ஸ்டைலும் க்யூட்தான்!”

- ஹேர்ஸ்டைலிஸ்ட் பிங்கி!ட்ரெண்டு

ராயல் அண்ட் எலிகன்ட் ஹேர்ஸ்டைலா? கூப்பிடுங்க பிங்கியை... என்னும் அளவுக்கு சினிமாத்துறையில் குறுகிய காலத்தில் புகழ் பெற்றிருக்கிறார்!

`நயனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகா ஹேர்ஸ்டைல் செட் ஆகுது?’ என்று புலம்பும் பெண்களெல்லாம் காதை கொடுங்க. ஒரு சீக்ரெட் சொல்றோம்....நயன்தாராவுக்கே பிடித்த ஹேர்ஸ்டைலிஸ்ட் பிங்கிதான். அப்படி என்னதான் ஸ்பெஷல் அவரிடம்? அவருடைய ஷார்ட் அண்ட் ஸ்வீட் பதில்கள்...

“நயனுக்கு எல்லா ஹேர்ஸ்டைலும் க்யூட்தான்!”

“உங்களைப்பற்றி...”

``என்னுடைய முழுப்பெயர் பிங்கி லோஹர். மணிப்பூரில் பிறந்து, வளர்ந்தேன். படிப்பில் நான் ஆவரேஜ் ஸ்டூடன்ட். ஆனால், என்னுடைய ஆசைதான் இன்று என்னை சினிமா உலகில் இடம்பிடிக்க வைத்திருக்கிறது.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“அழகுக்கலை ஆர்வம் எப்படி வந்தது?”

``ஒருமுறை சென்னையில் உள்ள  எனது உறவினர் ரச்சேலை பார்க்க வந்திருந்தேன். இரண்டு ஹேர் அண்ட் பியூட்டி சலூன்களுக்கு சொந்தக்காரர் அவர். சினிமா ஸ்டார்ஸுக்கும், மாடல்களுக்கும் ஹேர்ஸ்டைலுக்காக அவர் வொர்க் செய்கிற விதம் என்னைக் கவர்ந்தது. இதுதான் என்னுடைய எதிர்காலம் என்று அப்போதே முடிவு செய்தேன். உடனடியாக ரச்சேலிடமே மிக விரைவாகவும் தெளிவாகவும் அழகுக்கலையை கற்றேன். அதில், 8 வருட கால அனுபவம் எனக்கு இருக்கிறது.”

``நயனும் நீங்களும்..?”

``நயன்தாராவுக்கு `இருமுகன்' மற்றும் `காஷ்மோரா' படங்களில் ஹேர்ஸ்டைலிஸ்டாக பணிபுரிந்துள்ளேன். அதைத் தாண்டி நயனுடைய ‘பெர்சனல் ஹேர்டிரெஸ்ஸர்’ ஆக டி.வி விளம்பரங்கள், போட்டோ ஷூட், விழாக்களில் அவருக்கு விதம்விதமான ஹேர்ஸ்டைல்களை செட் செய்து அழகாக காட்டியிருக்கிறேன்.”

“நயனுக்கு எல்லா ஹேர்ஸ்டைலும் க்யூட்தான்!”

``நயன்தாராவின் ஹேர்ஸ்டைல் லிஸ்ட்..?”

``இதுவரை விளம்பரப் படங்களில், பொதுவிழாக்களில் அவருடைய ஹேர் ஸ்டைல்களைப் பார்த்திருப்பீர்களே. ஃபிஷ் பிரைட், போனி டெய்ல், ஹைப்பர் பன், டபுள் டை பிரைட் எல்லாமே அவங்களுக்கு  க்யூட்தான். இன்னும் எந்த ஹேர்ஸ்டைல் அவருக்கு அழகுனு தெரிஞ்சுக்க நீங்க `காஷ் மோரா',  `இருமுக'னுக்கு வெயிட் பண்ணணும்.”

``ஒவ்வொரு கேரக்டரிலும் நயன் எப்படி வித்தியாசமா ஜொலிக்கிறார்?”


``அந்தந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரிதான் ஹேர்ஸ்டைல் வடிவமைக்கிறோம். சில நேரங்களில் அவரே மாற்றங்கள் சொல்வார். `இதெல்லாம் எனக்கு அழகா செட் ஆகுது...' `இது ஓகேதான்' அப்படில்லாம் கமென்ட்ஸும் கொடுப்பார். அந்த ஆர்வமும், டெடிகேஷனும்தான் நயனின் அழகுக்கு காரணம்”

``ட்ரெடிஷனல், ட்ரெண்டி - எது நயனுக்கு அழகு?”

``முன்னாடியே சொன்னமாதிரி கேரக்டருக்கு ஏத்தமாதிரிதான் ஹேர்ஸ்டைல்னாலும்,  புடவைக்கு பின்னல், மாடர்ன் டிரெஸ்ஸுக்கு ஃப்ரீ ஹேர், கர்லி ஹேர் விட்டா டக்குனு ராயல் லுக் கொடுத்துடும்.”

``எல்லா பொண்ணுங்களுக்கும் நயனோட ஹேர்ஸ்டைல் மேலதான் கண். அவங்க ஹேர் அவ்ளோ ஸ்மூத்தா?”

”இயல்பாவே நயனுக்கு ரொம்ப மென்மையான, அடர்த்தியான முடி. அதை இன்னும் அழகா காட்ட என்னோட ஹேர்ஸ்டைல் நுணுக்கங்களும் தனி இடம் பிடிக்குதுனு நான் நினைக்கறேன்.”

“நயனுக்கு எல்லா ஹேர்ஸ்டைலும் க்யூட்தான்!”

``ஹேர்ஸ்டைல் செலக்ட் செய்யறப்போ எதையெல்லாம் ஃபாலோ பண்ணணும்?”

”முதல்ல நாம செலக்ட் பண்ற ஹேர் ஸ்டைல், முடியைவிட முகத்துக்கு பொருந்துதாங்கறது அவசியம். எல்லா சிகையலங்காரமும் எல்லாருக்கும் சூட் ஆகாது. ஒருத்தருக்கு அழகா தெரியற ஹேர்ஸ்டைல் இன்னொருத்தருக்கு பொருந்தாது. அதனால நமக்கு எது சரியான சாய்ஸோ அதைத்தான் தேர்ந்தெடுக்கணும்.”

``எந்த முகத்துக்கு எந்த ஹேர்ஸ்டைல்?”

``நீளமான முகம் - பேங்க்ஸ், ஃப்ரிங்ஸ்; வட்ட முகம் - லென்த்தி ஹேர் சைடு பேங்க்ஸ்; பெரிய நெற்றி - சைடுஃப்ரிங், ஃப்ரிங்; சிறிய நெற்றி - ஸ்லீக் போனி டெய்ல்.”

- பா.விஜயலட்சுமி