Published:Updated:

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

- சரிசெய்துகொள்ள மருத்துவரின் பரிந்துரைகள்...கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

‘‘படுத்ததும் உறக்கம், எழுந்ததும் மலம்கழித்தல்.... இதுவே ஆரோக்கிய வாழ்வு. ஆனால், இன்று 90% பேர் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். அதை சரிசெய்துகொள்ளக்கூடிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றிப் பார்ப்போம்’’ என்று அதுபற்றிய மருத்துவ விழிப்பு உணர்வு தகவல்களை விரிவாகப் பகிர்ந்தார், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர் டாக்டர் கே.பிரேம்குமார்.

மலம் வெளியேறும் முறை

உட்கொள்ளும் உணவானது இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணப் பட்டு தன்னிடமுள்ள சத்துக்களை எல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கையாகப் பெருங்குடலுக்குச் செல்லும். அதில் 80% தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீரின் பெரும் பகுதியும் உறிஞ்சப்பட்டு மலத்தை வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை.

இயல்பான கழிவறைப் பழக்கம் எது?

இந்திய வாழ்க்கை முறைப்படி ஒருவர் தினமும் குறைந்தபட்சம் ஒரு தடவை யாவது மலம் கழித்தாக வேண்டும். காலையில் எழுந்தவுடன் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயமில்லை. காலை,  மாலை,  இரவு என்று நேரம் வேறுபடலாம். இதுவே மேற்கத்திய நாடுகளில் ஒருவர் சராசரியாக வாரத்தில் குறைந்தது 4, 5 தடவை மலம் கழித்தாலே போதும். இந்தியர்களுக்கு ஒவ்வொரு முறையும் 200 - 250 கிராம் அளவுக்கு சாதாரணமாக மலம் வெளியேறக் கூடும். அதுவே மேற்கத்திய நாட்டினருக்கு 100 - 200 கிராம் மலம் கழித்தாலே போதும். சிலருக்கு திடீரென ஓரிரு நாள் மலம் வெளியேறாமல் போகலாம். உணவு, வேலை, உடல்நிலை, சூழல் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம். அச்சப்பட வேண்டியதில்லை.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மலச்சிக்கல் என்பது என்ன?

வழக்கத்துக்கு மாறாக, மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல், வலி ஏற்படுவது, ரத்தம் வெளியேறுவது, மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் வெளியேற முடியாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது... இவற்றை மருத்துவத்தில் ‘சீரற்ற மலப்பிரச்னை’ என்கிறோம். அதுவே மலச்சிக்கல் எனப்படும். மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். அஜீரணம், வாய்வுத்தொல்லை, குடலிறக்கம், குடல் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் போன்றவை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணங்கள்

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

 கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நேரத்துக்கு உணவு உட்கொள்ளாதது, காலை உணவைத் தவிர்ப்பது, மன அழுத்தம், மருத்துவ ஆலோசனையின்றி தேவையில்லாத மற்றும் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொள்வது.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’
நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

கொழுப்பு நிறைந்த மற்றும் பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பால் சார்ந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது, நார்ச்சத்து உணவுகளை குறைவாகச் சாப்பிடுவது, நரம்பு மண்டல பாதிப்புகள், தைராய்டு, சர்க்கரை போன்ற பிரச்னை இருப்போர் அதனை சரிவர கட்டுக்குள் வைக்காமல் இருப்பது... இவை எல்லாம் மலச்சிக்கலை உண்டாக்கும்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

பிறவியிலேயே குடல் இயக்கம் குறைவாக உள்ளவர்களும் மலச்சிக்கல் பிரச்னைக்கு ஆளாகக்கூடும். உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, மூட்டுவலி, இடுப்புவலி உள்ளவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, நீண்ட நேரம் படுத்தே இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படக்கூடும்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

பெண்கள் கர்ப்பகாலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது, தாயின் குடலை கரு அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் உள்ளிட்ட பல காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் அதை தொடர்ந்து தவிர்க்கும்போது, காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காமல் போக, அதனாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

காய்ச்சல், வாந்தி, பசியின்மை பிரச்னைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்து, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்று நோய், குடல் தடிப்பு நோய், சர்க்கரை நோய், தைராய்டு, குடலிறக்கம், தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் இருக்கும்போதும் மலச்சிக்கல் ஏற்படக்கூடும்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

இந்த அறிகுறிகள்... ஆபத்து!

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

50 வயதைக் கடந்தவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாவது

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

இயல்புக்கு மாறாக மூன்று வாரங்களுக்கு மேல் மலச்சிக்கல் பிரச்னை தொடர்வது

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

எடை குறைவது

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மலம் போவதில் சிக்கல் உண்டாகி அடிவயிற்றில் வலி ஏற்படுவது

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மலத்தின் வடிவத்தில் தொடர் மாற்றம்

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மலத்துடன் ரத்தம் வெளியேறுவது

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலிப்பது

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி ஏற்படுவது

என்ன செய்ய வேண்டும்?

மேற்கண்ட அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அது மலச்சிக்கல் பிரச்னை மட்டுமே எனில் மாத்திரை, மருந்துகள் வழங்குவார். அந்த மலச்சிக்கல் வேறு உடல் பிரச்னையின் விளைவு எனில், குடல் மற்றும் இரைப்பை மருத்துவரை பரிந்துரைப்பார்.இந்த ஆபத்தான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்கத் தவறினால், உயிரிழப்புவரை ஏற்படக்கூடும்.

இன்று மலச்சிக்கலுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத எவ்வளவோ மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. ஆனால், மருத்துவப் பரிந்துரையின்றி சுயசிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை அது பாதித்து மலம் கழிப்பதை இன்னும் சிரமமாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை முறைகள்

1. அடிப்படை சோதனை: மருத்துவர் நோயாளியிடம் தகவல்கள் கேட்டறிந்து, வயிற்றை பரிசோதனை செய்து, ஆசனவாய் வழியாக விரல் செலுத்தி செய்யும் சோதனைகளை உள்ளடக்கியது.

2. ரத்தப் பரிசோதனை:  ஹீமோகுளோபின் தொடங்கி சர்க்கரை, தைராய்டு, ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவை கண்டறிவது.

3. மல சோதனை:  மலத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ரத்தம் வெளியேறுகிறதா என்பதைக் கண்டறிவது.

4. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: குடல் சார்ந்த பிரச்னைகளைக் கண்டறிவது.

5. சி.டி ஸ்கேன்: குடலில் உள்ள கட்டிகள், அடைப்பு போன்றவற்றைக் கண்டறிவது.

6. ரெக்டல் மேனோமெட்ரி பரிசோதனை: (rectal manometry test) - ஆசன வாயின் அழுத்த நோயை அறியும் பரிசோதனை (இன்று மிக அதிகமானோர் பாதிக்கப்படும் இப்பிரச்னைக்கு, மன அழுத்தம் காரணமாக அமைகிறது).

7. மலக்குடல் நோக்கி (colonoscopy test) : ஆசனவாய் வழியாக ட்யூப் செலுத்தி மலக் குடலில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா எனக் கண்டறிவது.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

சிகிச்சைகள்

1. உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் தொடர்பான பரிந்துரை களுடன் மருந்துகள் வழங்கும் அடிப்படை சிகிச்சை முறை.

2. மலம் இளக்கி சிகிச்சை: - வாய்வழியாக மாத்திரைகள், சிரப் மற்றும் பவுடரும் ஆசன வாய் வழியாக மாத்திரை மற்றும் இனிமா என்னும் தண்ணீர் மருந்தும் அளித்து மலத்தை இளக்கி வெளியேற்றுவது.

3. சீர் சிகிச்சை முறை: நரம்புப் பிரச்னைகள், மன அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு போன்றவற்றுக்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கு அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து, அதோடு மலச்சிக்கல் பிரச்னையை சீர்செய்ய மருந்து, மாத்திரைகள் வழங்குவது.

4. பயோஃபீட்பேக் தெரபி: - ஆசன வாயில் உள்ள, எப்போதும் மூடியபடியே இருக்கும் ‘ஆசனச் சுருக்கு தசை’ மலம் கழிக்கும்போது மட்டும் திறக்கும். அதன் மேலே மலக்குடல் இருக்கும். அதில் மலம் முழுவதுமாக நிரம்பியவுடன் மூளைக்கு சிக்னல் செல்லும். அப்போது நமக்கு மலம் வருவதுபோல தோன்றும். கழிவறை சென்று அமர, ‘ஆசனச் சுருக்கு தசை’ திறக்கும். சிலருக்கு, குறிப்பாக மன அழுத்தம் உள்ளவர் களுக்கு இந்தத் தசை திறப்பதில் பிரச்னை ஏற்படும். அவர் களுக்குத் தேவையான பயிற்சி அளித்து பிரச்னையை குணப் படுத்துவதே இந்த சிகிச்சை முறை.

 5. அறுவை சிகிச்சை முறை: - அடைப்பு உள்ளிட்ட குடல் பாதிப்பு உள்ளவர்களுக்கும், பிரச்னை மருந்து, மாத்திரை களால் சரிசெய்ய முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும், பிறவியிலேயே குடல் இயக்கம் சரிவர இல்லாதவர் களுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க...

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

காலை உணவைத் தவிர்க்காமல் நேரத்துக்கு சாப்பிடுவது டன், சரிவிகித உணவு உட் கொள்ளவும். தினமும் குறைந் தது 2.5 - 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இண்டியன் டாய் லெட்டை பயன்படுத்தவும்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் அடக்காமல் கழிவறை சென்று விடவும்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மன அழுத்தம் தவிர்க்கவும்.

``உடலின் இயல்பான ஓர் இயக்கம் நடைபெறுவதற்கான மேற்சொன்ன வாழ்க்கை முறை மாற்றங்களை வழக்கமாக்கிக் கொண்டால், மலச்சிக்கல் மட்டுமல்ல, எந்தப் பிரச்னையும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம்'' என்கிறார் டாக்டர் பிரேம்குமார்.

- சா.வடிவரசு

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்!

குழந்தைகளுக்கு தினமும் காலையிலோ, அவர்கள் உடல் பழக்கப்படும் வேளையிலோ மலம் கழிப்பதை வழக்கமாக்குங்கள். கழிவறை செல்ல பயம், டாய்லெட் செல்ல வேண்டும் என்பதை சொல்லக் கூச்சம் என எக்காரணத்தைக் கொண்டும் மலத்தை அவர்கள் அடக்காதவாறு சூழலை இலகுவாக்குங்கள். குறிப்பாக, பள்ளியில் ஆசிரியர், ஆயாவின் சிடுசிடுப்புக்கு அஞ்சி குழந்தைகள் மலத்தை அடக்காத சூழ்நிலையை ஏற்படுத்துங்கள். அது அவர்களின் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்பதை பள்ளி நிர்வாகத்துடன் பேசி புரியவையுங்கள்.

நோய் நாடி..! - ‘‘மலச்சிக்கல்... மலைக்க வேண்டாம்!’’

மலச்சிக்கல் நீக்கும் உணவுகள்!

காபி, தேநீர், குளிர்பானங்களை கூடுமானவரை தவிர்த்து விடவும். இளநீர், பழச்சாறு அருந்தவும். இரவில் இரண்டு பழங்கள் சாப்பிடுவது மிக நல்லது. வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சீஸனல் பழங்களும் உண்ணலாம். நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுதானியங்கள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, புடலங்காய், அவரைக்காய், முட்டைகோஸ், பாகற்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், பேரீட்சை, அத்திப்பழம் போன்ற பழங்கள், மிளகு, ஓமம், கொத்தமல்லித்தழை... இவையெல்லாம் நார்ச்சத்து நிறைந்தவை. உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்லது.