“ட்ரெடிஷனல்தான் பெஸ்ட்!” - ரம்யா நம்பீசன்

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 13

ஹோம்லி லுக்கில் லைக்ஸ் அள்ளும் ஹீரோயின், ரம்யா நம்பீசன். ஆடைகள் பற்றிப் பேச வேண்டும் என்றதும், ‘`சூப்பர்... இது, எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட்!’' என்று ஆர்வமானார்.

தமிழ் ஹீரோயின்ஸை பார்த்தா பொறாமையா இருக்கு!

நான் சினிமாவுக்கு வந்த புதிதில், தமிழ் சினிமா ஹீரோயின்ஸ் பலரோட டிரெஸ்ஸிங் சென்ஸ் பார்த்து வியந்திருக்கேன். ஒவ்வொருத் தரும் ஒரு பிரத்யேக ஸ்டைல்ல அசத்துவாங்க. கொஞ்சம் பொறாமையாகூட இருக்கும். லவ் யூ கேர்ள்ஸ்!

திரையில்தான் நான் ஹோம்லி!

சினிமாவில் எனக்கு அடுத்தடுத்து ஹோம்லி கேரக்டர்களா அமைஞ்சுடுச்சு. அதனால, சுடிதார், புடவையில்தான் நீங்க ரம்யாவை அதிகம் பார்த்திருப்பீங்க. ஆனா, நான் அதிகமா உடுத்துறதும் வெஸ்டர்ன் ஆடைகள் தான்!

தேங்க்யூ ஆடியன்ஸ்!

எனக்குப் புடவை ரொம்பப் பிடிக்கும். அழகா, நேர்த்தியா புடவை கட்டவும் தெரியும். ஆயிரம் சொல்லுங்க... புடவைக்கு இணையான ஆடை இல்ல. அது தர்ற அழகே தனி. இன்னொரு விஷயம்... தமிழ் ஆடியன்ஸுக்கு என்னோட ட்ரெடிஷனல் லுக்தான்  ரொம்பப் பிடிச்சிருக்காம். தேங்க்யூ!

இடத்துக்கு ஏற்ற ஆடை!

நான் எப்பவும் ஒரே பேட்டர்ன்ல டிரெஸ் உடுத்த மாட்டேன். ட்ரெண்டுக்குத் தகுந்த மாதிரி ஸ்டைலை மாத்திட்டே இருப்பேன். இடத்துக்கு ஏத்தமாதிரி டிரெஸ் செய்துக்குவேன்.

கறுப்புக் காதலி!

கறுப்பு கலர்னா, எனக்கு ரொம்ம்ம்பப் பிடிக்கும். ஷாப்பிங் செய்யும்போது கடைகளிலும், வெளியே கிளம்பும்போது வார்ட்ரோ பிலும், எப்பவும் கறுப்பு டிரெஸ்ஸையே என் கைகள் அதிகம் தேர்ந்தெடுக்கும். என்னை மாதிரியே நிறைய பேருக்கு இந்த கறுப்பு கிரேஸ் இருக்கும்ல... அவங்களுக்கு எல்லாம் சேம் பின்ச்!

என் பொட்டீக்... என் ரசனை!

இயல்பிலேயே எனக்கு ஃபேஷனில் ஆர்வம் அதிகம். டீன் ஏஜில் இருந்தே அதில் என்னை அப்டேட் செய்துட்டேதான் இருப்பேன். சொல்லப்போனா, அந்த ஆர்வம்தான் என்னை மாடலிங் துறைக்கு அழைத்து வந்தது; சினிமா வாய்ப்பு கிடைக்கவும் அடிப்படையா அமைந்தது. இப்போ சென்னையில் நான் ஒரு பொட்டீக் ஆரம்பிச்சிருக்கேன். அந்தளவுக்கு இது எனக்கு விருப்பமான ஏரியா. அப்புறம், எந்தத் துறையில் விருப்பமோ... அதை நோக்கி பயணிச்சா வெற்றி நிச்சயம்னு, இந்த இடத்தில் சின்னதா ஒரு மெசேஜும் சொல்லிக்கிறேன் மக்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 13

மத்தவங்களை கவனிச்சுப் பார்ப்பேன்!

பொதுவா, மத்தவங்களோட டிரெஸ்ஸிங்ஸை நான் கவனிச்சுப் பார்ப்பேன். அதில் எதுவெல்லாம் சூப்பர்னு தோணுதோ, அதையெல்லாம் நான் ஃபாலோ பண்ணிக்குவேன். ஒருவேளை அவங்க டிரெஸ்ஸிங்கில் ஏதாவது ஒரு விஷயம் நல்லாயில்லைன்னா அதையும் நோட் பண்ணிட்டு, ‘இந்த விஷயத்தை நாம பண்ணாம இருக்கணும்’ என்பதையும் கத்துக்குவேன். முக்கியமான விஷயம்... வீடு, ஃப்ரெண்ட்ஸ், இண்டஸ்ட்ரினு என் டிரெஸ்ஸிங் பற்றி நாலாபக்கமும் இருந்து வர்ற கமென்ட்ஸை காதுகொடுத்துக் கேட்டு, அது என் மனசுக்கு சரின்னு பட்டுச்சுன்னா நிச்சயமா மாத்திக்குவேன்!

ஹேப்பி ஷாப்பிங்!


நான் ஷாப்பிங் அடிக்ட் இல்ல. ஆனா, ஷாப் பண்ணப் பிடிக்கும். அது எனக்கு ஒரு ரிலாக்ஸேஷன் மாதிரி. அதுக்காக எல்லா டிரெஸ்ஸுக்கும் உடனே பில் போட்டுட மாட்டேன். எந்த அக்கேஷனுக்காக டிரெஸ் வாங்கப்போறேனோ, அதை மட்டும் வாங்கிட்டு சமர்த்தா வந்துடுவேன். டிசைனுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். கலெக்‌ஷன்ஸ் அதிகம் இருக்கிற கடைனா, செலக்ட் செய்ய நேரமாகும். சின்ன கடைன்னா, சீக்கிரமா வேலை முடிஞ்சுடும். இருக்கிற கொஞ்சம் கலெக் ஷன்ஸ்ல பிடிச்ச ஒண்ணை எடுத்துட்டு வந்துடுவேன்!

- சு.சூர்யா கோமதி, படங்கள்: சந்தோஷ் ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism