Published:Updated:

அழகுக்கு மூன்றாம் இடம்தான்!

அழகுக்கு மூன்றாம் இடம்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
அழகுக்கு மூன்றாம் இடம்தான்!

சக்சஸ் ஸ்டோரி

லக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ். அதில் இடம் பெற்றுள்ள ஒரே   இந்திய நடிகை தீபிகா படுகோன்!

“என் போட்டோவை பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்கிட்ட கொடுத்து நடிக்க வாய்ப்பு கேட்டேன். `இந்த முகத்துக்கெல்லாம் சினிமாவா..?’ என அவ மானப்படுத்தி  கிண்டல் செய்தார்கள். ஆனாலும் விடாது முயற்சித்து வாய்ப்பு தேடி படிப்படியாகத்தான் முன்னேறினேன்” என பழைய நினைவுகளைக் கிளறுகிறார் தீபிகா படுகோன்.

சம்பள அடிப்படையில் டாப் 10 இடத்துக்குள் வந்த முதல் இந்திய நடிகையும் தீபிகா மட்டும்தான். அப்படி என்னங்க சம்பளம்? ஒரு வருடத்துக்கு சுமார் 67.7 கோடி ரூபாய். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ், சம்பளம் 308 கோடி ரூபாய்!
'சினிமாவுக்கு உன் முகம் செட்டாகாது' என சொல்லப்பட்டவர் எப்படி நம்பர் 1 ஆனார்? வெற்றி பெற்ற எல்லோரும் சொல்லும் அதே சக்சஸ் வார்த்தைகளைத்தான் தீபிகாவும் சொல்கிறார்.. “விடாமுயற்சி, கடின உழைப்பு.. அழகெல்லாம் அடுத்துதான்!”

அழகுக்கு மூன்றாம் இடம்தான்!

தீபிகாவின் அப்பா பிரகாஷ் படுகோன் உலகப்புகழ்பெற்ற பேட்மின்டன் சாம்பியன். தீபிகாவுக்கும் பேட்மின்டனில் மிகுந்த ஆர்வம். லோக்கல் மேட்ச் முதல் நேஷனல் லெவல் வரை ஸ்கோர் செய்துகொண்டிருந்த நேரத்தில்,  அவரைச் சுற்றி இருந்தவர்கள் ‘நீ அழகாகவும் உயரமாவும் இருக்கிறாய்... ஏன் மாடலிங் செய்யக்கூடாது’ என்று கேட்க... இவருக்கும் ஃபேஷன் ஸ்பார்க் அடித்திருக்கிறது. தீபிகா, 5 அடி 9 அங்குல உயரம். 

அப்போது தீபிகாவுக்கு வயது 17. முதல் முயற்சியிலேயே லிரில் சோப் விளம்பரத்தில் குளியல் போட, இந்தியா முழுவதும் கொலைவெறி ஹிட். அடுத்த மூன்றே வருடங்களில் இந்தியாவின் டாப் மாடல். `ஃபேஸ் ஆப் தி இயர் 2006’ என விருதுகள் பல குவித்தார். 2006-ம் ஆண்டு ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னடப் படத்தில் சில்வர் ஸ்க்ரீனுக்கு ஐஸ்வர்யமாக காலடி எடுத்து வைத்தார். முழு உழைப்பைக் கொட்டி நடித்திருந்தாலும்... படம் சூப்பர் டூப்பர் ஃபிளாப். `அவ்வளவுதான் நம்ம கரியர் காலி'னு என  நினைத்தபோதுதான் ஜீ பூம்பா மேஜிக்காக ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் ஷாரூக்கானுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, தன்னைக் கவனிக்கவைத்தார். அதன்பின் கடந்த 9 ஆண்டுகளில் அவர் வாழ்வில் நடந்தது அத்தனையும் வரலாறு. கேரியர் கிராஃபில் அதிரடியான ஏற்றம்.

உலக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட்  அதிரடியான, ‘xXx: Return of Xander Cage’ படத்தில், வின் டீசல் உடன் தீபிகா ஸ்டன்ட் செய்ய... பெண்ணுக்கு  உலகெங்கும் ஏகப்பட்ட டிமாண்ட்! இந்தத் தருணத்தில்தான் டாப் 10 ஹீரோயின் லிஸ்டிலும் தீபிகா சேர்ந்துவிட்டார். 30 வயதாகும் நம்ம பாஜிராவ் மஸ்தானி நாயகியை ஃபோர்பஸ் இதழ் ‘Scored Box Office Gold' என வர்ணித்து, இன்னமும் அழகுபடுத்தி இருக்கிறார்கள். “கவர்ச்சியாக நடித்தாலும், நடிப்பதற்கு ஸ்கோப் இருக்கும் கேரக்டரை  தேர்ந்தெடுத்து நடித்ததால்தான், இவ்வளவு வளர்ச்சி” என பிகு செய்யாமல் சொல்கிறார் ‘பிக்கு’ நடிகை.

`பாலிவுட்டோ, ஹாலிவுட்டோ... ஹீரோயின்ஸ் கோடிகளில் சம்பாதித்தாலும் ஹீரோவைவிட ஹீரோயின் களுக்கு சம்பளம் குறைவுதான்’ என ஃபோர்பஸ் இதழ் சொல்கிறது. எனினும், தீபிகா ஹாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால், அடுத்த வருடமும் டாப் 10 பட்டியலிலும் இடம் பிடிப்பார்... ரசிகர்கள் மனதிலும்!

 நா.சிபிச்சக்கரவர்த்தி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தீபிகாவுக்குப் பிடித்தது?

அம்மாவின் அன்பு, அப்பாவின் அரவணைப்பு. நிறைய சாக்லேட்ஸ், 'சார்லீஸ் ஏஞ்சல்' மாதிரி ஆக்‌ஷன் படங்கள், பேட்மின்டன், பேஸ்கட் பால், ஜிம், ஷாரூக்கான், ஸ்ரீதேவியின் நடிப்பு, மாதுரி தீட்சித்தின் நடனம், ஃபேன்ஸ்.