தடதடக்கும் ஓடுபாதை, கால்களில் சுழலும் சக்கரம், கண்களில் மின்னும் ஆர்வம்... புயலாக சீறிப்பாய்கிறார்... சிருஷ்டி! 'ரோலர் ஸ்கேட்டிங்' விளையாட்டில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் தேசிய சாம்பியன்... சென்னைப் பெண்! அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் சிருஷ்டிக்கு, ஸ்கேட்டிங் பற்றிப் பேசப் பேச புத்துணர்வு கூடுகிறது!

''ஒரு தடவை, அண்ணாநகர் டவர் பார்க்குக்கு என்னை அழைச்சுட்டுப் போயிருந்தாங்க. அங்க ஸ்கேட்டிங் கிரவுண்ட்ல 'சர் சர்’னு எல்லாரும் சறுக்கிக்கிட்டு போனதைப் பார்த்ததும்... எனக்கும் ஆசை வந்துடுச்சு. நானும் அதுல சேரணும்னு அடம்பிடிச்சேன்.. அப்போ எனக்கு ஆறு வயசு. தனிப்பட்ட முறையிலயே ஸ்கேட்டிங் கத்துக்க ஏற்பாடு செய்தாங்க. அதைக் கத்துக்கிட்டு கீழ்ப்பாக்கம், இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில முதன்முதலா ஜெயிச்சேன். அதைத் தொடர்ந்து எனக்குள்ள ஒரு வேகம் பிறந்துடுச்சு. 2001-ல் இருந்து இன்னிக்கு வரை ஸ்டேட் அளவில் முதலிடம்தான்.

நூறு சதவிகித உழைப்பு, தினமும் மூன்று மணி நேரப் பயிற்சி, சத்தான உணவு முறை, நேரக் கட்டுப்பாடு... இதுதான் என் ஸ்போர்ட்ஸ் சார்ட்'' எனும் சிருஷ்டியின் சாதனைகள், பட்டியலாக நீள்கின்றது.

இந்திய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். 2006-ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வாங்கியதுதான், உலக அளவிலான முதல் முத்திரை.

''2010-ல் நடந்த ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய சாதனை படைச்சதோட, 'பாஸ்ட்டஸ்ட் கேர்ள்’ (வேகமான பெண்மணி) என்கிற டைட்டிலையும் வின் பண்ணினேன். இந்தியாவுக்காக பதக்கம் வெல்லணும், மற்ற நாட்டவர்களைவிட நாம் திறமையில் குறைந்தவர்கள் இல்லைனு நிரூபிக்கணுங்கிற எண்ணம்தான், களத்தில் என்னை புயலாகத் தூண்டிவிடுது.

ஏற்கெனவே உலக அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றப்போ, ஸ்கேட்டிங்கில் முன்னணியில் இருக்குற அமெரிக்கா, சீனா, தைபே, கொலம்பிய நாட்டு வீராங்கனைகளோட கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டிஇருந்துச்சு. அந்த அனுபவத்தையெல்லாம் வெச்சுக்கிட்டு, அடுத்து வரப்போற உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் சீரா நான் தயார் ஆகிக்கிட்டிருக்கேன். பரிசுப் பட்டியல்ல நிச்சயமா இந்தியாவுக்கான இடத்தை உறுதிப்படுத்துவேன்'' எனும் சிருஷ்டி... ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சியிலும் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

காற்றைக் கிழித்துக்கொண்டு விரைகிறது, சிருஷ்டியின் ஸ்கேட் ஷூஸ்!