ங்கள் குழந்தையின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் ஆரோக்கியமும் அறுசுவையும் இணைய ஆலோசனைகள் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் பிரியா ராஜேந்திரன்.

ஒரு டஜன் யோசனைகள்!

1. ஊட்டச்சத்துகள் விடுபடாமல் இருக்க, குழந்தையின் ஸ்நாக்ஸ் பாக்ஸை வண்ணங்களின் அடிப்படையில் பிரித்து, ஒவ்வொரு நாளும் ஒரு வண்ணம் எனக் கொடுத்து அனுப்பலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு டஜன் யோசனைகள்!

சிவப்பு - தர்பூசணி, மாதுளை, சிவப்பு கொய்யா, பீட்ரூட், ஆப்பிள்.

ஆரஞ்சு: கேரட், பப்பாளி.

மஞ்சள்: வாழைப்பழம், அன்னாசி, சுண்டல்.

வெள்ளை: காளான், காலிஃப்ளவர், முட்டை, பனீர், சீஸ், தயிர்.

பச்சை: பயறு வகைகள், வெள்ளரி, பச்சை திராட்சை, முளைகட்டிய தானியங்கள்.

கருஞ்சிவப்பு: நாவல் பழம், திராட்சை, முட்டைகோஸ்.

2. குழந்தைகள் பள்ளியில் தேவையான அளவு தண்ணீர் அருந்து வதில்லை. எனவே, ஸ்நாக்ஸுடன் பழச்சாறு, மோர், சூப் என்று கொடுத்து அனுப்பி அதை ஈடுகட்டலாம்.

3. குழந்தைகளின் வகுப்பு இடைவேளைப் பண்டங்கள், எண்ணெய் நிறைந்ததாக இருக்க வேண்டாம். பாதாம், பிஸ்தா பேரீச்சை போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களை கொடுத்து அனுப்பவும்.

4. பள்ளி கேன்டீனில் குழந்தைகள் ஸ்நாக்ஸ் வாங்கிக்கொள்ள பணம் கொடுத்து அனுப்புவதைத் தவிர்க்கவும். அங்கு நிலவும் சுகாதாரக்கேட்டால் ஏற்படும் உடல் நலக்குறைவை சிந்தித்துப் பார்த்து, முடிந்தவரை நீங்களே ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்பவும்.

5. சிப்ஸ், சாக்லேட், வேஃபர் பிஸ்கட் போன்ற பாக்கெட் உணவுகளை ஸ்நாக்ஸுக்கு கொடுத்து அனுப்புவதை பள்ளிகளே இப்போது அனுமதிப்பதில்லை. ஒருவேளை அப்படி அனுப்பும் பெற்றோர், குறைந்தபட்சம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், காலாவதி தேதி போன்றவற்றையாவது சரிபார்க்கவும். பிரபல பிராண்ட்களின் பெயரில் டூப்ளிகேட்களும் வலம் வருவதால், கூடுதல் கவனம் தேவை.

6. பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் குழந்தைகளுக்கு மரபணு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பது நினைவில் இருக்கட்டும்.

7. பிஸ்கட் சாப்பிடுவதால் வயிறு நிறையும். ஆனால், சத்து குறைவாகவே கிடைக்கும் என்பதால் அதைத் தவிர்க்கவும். பள்ளிக்குக் கொடுத்தனுப்பும் ஸ்நாக்ஸ், பசியைத் தீர்ப்பதுடன், ஆற்றலும் சத்தும் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். பழங்கள், அதைப் பூர்த்திசெய்யும். அவற்றில் உள்ள நார்ச்சத்து குழந்தைகளின் ஜீரணத்துக்கு உதவுவதோடு, மலச்சிக்கல் வராமலும் தடுக்கும்.விட்டமின்கள் நிரம்பிய பழங்களைத் தேனில் கலந்து கொடுக்கும்போது, இரும்புச்சத்தும் கிடைக்கப்பெறும். அது குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். 

ஒரு டஜன் யோசனைகள்!

8. குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அவர்களுக்குத் தரும் சிற்றுண்டியில், தினமும் ஒரு சிறுதானியத்தைப் பயன்படுத்தி உருண்டைகள், கொழுக்கட்டைகள், ரொட்டி எனச் செய்து கொடுப்பது ஆரோக்கியமானது.

9. வீட்டில் ஸ்நாக்ஸ் செய்யும் குட் மம்மீஸ், அந்தப் பண்டங்களில் வெள்ளை சர்க்கரைக்குப் பதில் நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைச் சேர்க்கலாம். அது குழந்தைகளின் உடலுக்கு இரும்புச்சத்தைக் கொடுத்து, சோர்வு அடையாமல் காக்கும்.

10. வளரிளம் பிள்ளைகள் உள்ள வீடு களில், அவர்களின் நண்பர்கள் யாராவது வித்தியாசமான சாக்லேட், புகையிலைப் பொருட்களை எடுத்துக்கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருப்பது பற்றி தெரியவந்தால், அதை பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.

11. குழந்தைகளைக் கவர் வதற்காக அளவுக்கதிகமான நிற மூட்டிகள், சுவையூட்டிகளைப் பயன் படுத்தும் ஸ்நாக்ஸ் அயிட்டங்களைத் தவிர்த்துவிடவும். அது வயிற்று உபாதையை ஏற்படுத்தும். மேலும், நீண்ட காலம் தொடர்ந்து உட்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டு எதிர்காலத்தில் அது பக்கவிளைவுகளையும் உண்டாக்கும்.

12. குழந்தைகளின் தின் பண்டங்களில் போதைப்பொருள் கலப்படம் இருப்பது தெரியவந்தால் உடனடியாக உங்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திலோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலோ புகார் அளிக்கவும். தவறுதலாக அதுபோன்ற ஒரு பொருளை வாங்கிச் சாப்பிட்டிருந்தால் மருத்துவரை அணுகவும். போதைப்பொருட்களின் தீமை குறித்து அவ்வப்போது குழந்தைகளிடம் பேசுவதும் அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism