திவ்யாஷா... டெல்லி இந்திரா காந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தின் பி.டெக்., கணினி அறிவியல் மாணவி. இவர் எழுதியிருக்கும் முதல் ஆங்கில நாவல், ‘A20 - SOMETHING COOL DUDE’. அமேசான் இணையதளத்தில் பரபரப்பான விற்பனை, நல்ல ரேட்டிங் என்று பெரிதும் வரவேற்பு பெற்ற இந்நாவலை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது சிறப்புச் செய்தி.

திவ்யாஷாவுக்குக் கைகுலுக்கினோம்!

‘’சிறுவயதில் இருந்தே நான் புத்தகப் புழு. எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எனது அனுபவங்களையும், சந்திக்கும் வித்தியாசமான மனிதர்களைப் பற்றியும் தினம் என் டைரியில் எழுதி வந்தேன். அப்படிப் பல வருடங்களாக எழுதியவற்றைத் தொகுத்து எனது வலைப்பூவிலும் (BLOG), மகளிர் சம்பந்தப்பட்ட சில வலைப்பூக்களிலும் அவ்வப்போது கட்டுரைகளாக எழுதி வந்தேன்” என்று சொல்லும் திவ்யாஷாவின் எழுத்துத் திறமையைப் பாராட்டி, அவர் பள்ளியில் படிக்கும்போதே பிரபல ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழ் அவருக்கு ‘இளம் ஆசிரியர்’ என்ற கௌரவம் அளித்து சிறப்பித்திருக்கிறது.

பள்ளி இறுதித் தேர்வு எழுதிய பின் கல்லூரியில் சேர்வதற்கு முன் கிடைத்த சில மாத கால அவகாசத்தில் தன் முதல் நாவலை எழுதிய திவ்யாஷா, அந்த அனுபவத்தைப் பகிர்ந்தார்.

‘`ஒருநாள் இரவு தூக்கம் வராமல் படுக்கையில் படுத்து யோசித்தபோது தோன்றிய எண்ணம், என் முதல் நாவலுக்கான கருவாக உருவானது. அடுத்தநாள் அதிகாலையில் கணினியில் வேர்டு டாக்குமென்ட்டில் அதை டைப் செய்ய ஆரம்பித்தேன். என் கல்லூரி வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று எனக்கு இருந்த கனவுக்கு எழுத்து வடிவம் கொடுத்தேன். சாகசம், துணிவு, தைரியம் போன்ற அம்சங்கள் நிறைந்த பெண்ணாக, என் கதைநாயகி ஆயிஷாவை உருவாக்கினேன்.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சக்தி என்னை கம்ப்யூட்டர் முன்னால் அமரச் செய்தது. அந்த நாவல் தவிர, வேறு எந்தச் சிந்தனையும் இல்லை என்னிடம். அறைக் கதவையும் மனதையும் ஒருசேர தாழிட்டேன். குறிப்பெடுத்தல், ஆராய்ச்சி, எழுதுதல், படித்துப் பார்த்து திருத்துதல், மீண்டும் எழுதுதல் என்று இடைவிடாது எழுதினேன்.

என் நாயகி ஆயிஷா, வாழ்க்கையின் சுழற்சியில் வரும் பிரச்னைகளை எப்படித் துணிவுடன் அணுகினாள் என்பதை வார்த்தை ஜாலங்கள் இன்றி எளிய நடையில் தெளிவான வார்த்தைகளில் எழுதினேன். சிற்பி சிலையைச் செதுக்கும் கவனத்துடன் நாவலை எழுதி முடித்த பின், ‘A20 - SOMETHING COOL DUDE’ என்று பெயரிட்டேன்’’ என்பவருக்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு என்ன?

`‘கம்ப்யூட்டர் யுகத்தில் நாவலா?’, ‘வெளிநாட்டு எழுத்தாளர்களைப் போல எழுத முடியுமா?’, ‘காதலைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?’ என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தந்த எதிர்மறையான விமர்சனங்கள் என்னைப் பாதிக்கவில்லை. நாவலின் குறிப்பிட்ட அத்தியாயங்களை பல பதிப்பாளர்களுக்கு இ-மெயிலில் அனுப்பினேன். என் கதாபாத்திரங்கள் என்னைக் கைவிடவில்லை. என் நம்பிக்கையும் முயற்சியும் வீண்போகவில்லை. சிலரிடம் இருந்து பதில் வந்தது. அவர்களுள் லைஃபை (Lifi) பப்ளிகேஷன் நிர்வாகத்தினர் என் நாவலைப் பதிப்பிக்க முன்வந்தனர். டெல்லி புத்தகத் திருவிழாவில் நல்ல வரவேற்பைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்தது என் முதல் நாவல்’’ என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் சொல்கிறார் திவ்யாஷா.

‘A20 - SOMETHING COOL DUDE’ நாவலின் கதாபாத்திரங்கள், இந்தியாவின் பன்முகத் தன்மையை அழகாக வெளிப்படுத்துவதாக பல பத்திரிகைகள் மதிப்புரை எழுதிப் பாராட்டின. ``உட்சபட்சமாக, ‘உயிர்த்துடிப்பான, பிரகாச மான இந்தியாவை உங்கள் நாவல் முன் நிறுத்து கிறது’ என்று இந்திய வெளியுறவுத் துறையிடம் இருந்து எனக்குக் கடிதம் வந்தபோது, அந்த இன்ப அதிர்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்!

சாதனைக்கு வயது தடையில்லை. வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதினால் எழுத்தில் வெற்றிபெற முடியும் என்பது நன் நம்பிக்கை’’ என்கிறார் ஸ்டார் எழுத்தாளர் திவ்யாஷா!

- ஸ்ரீலோபமுத்ரா