சமீபத்தில் வெளிவந்த ‘தர்மதுரை” படத்தில் திருநங்கை காவலாளியாக நடித்திருப்பார் ஜீவா சினேகா. நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் திருநங்கையான ஜீவா சினேகா... கடந்து வந்த பாதைகளும் சந்தித்த வலிகளும் ஏராளம். அவருடனான சந்திப்பிலிருந்து...

“சொந்த ஊரு சிவகாசி. எனக்குள்ள திருநங்கைக்கான மாற்றம் தென்பட ஆரம்பிச்சதுமே சொந்த ஊருல இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துட்டேன். 13 வயசுல, டீக்கடையில ஆரம்பிச்சது என்னோட முதல் பயணம். டான்ஸ்ல ஆர்வம் வர, வேலை பார்த்துகிட்டே டான்ஸ் கத்துக்கிட ஆரம்பிச்சேன். ஸ்டேஜ் புரோகிராம்கள்ல தலைகாட்ட ஆரம்பிச்சேன். சினிமாவுக்கும் ட்ரை பண்ணேன். `பையனா இருந்தா அண்ணன் தம்பினும், பொண்ணுனா அக்கா தங்கைனும் காட்டலாம். உன்ன படத்துல எப்படி காட்டுறதுனு தெரியலையேப்பா’னு சொல்வாங்க. சிலர், காசு வாங்க வர்றேனு விரட்டி அடிச்சுருவாங்க. இப்படி போற இடங்கள்ல எல்லாம் அவமானப்பட்டுதான் திரும்பி வருவேன்” என்கிறவர் மேக்கப் அசிஸ்டன்ட்டாக மாறியிருக்கிறார்.

‘‘ஆரம்பத்துல சீரியல் ஆர்ட்டிஸ்டுங்களுக்கு மேக்கப் பண்ற வாய்ப்பு கிடைச்சு, அப்படியே பெரிய திரையில அனுஷ்கா, ஸ்ரேயா, ரிச்சா, நடிகை விலாசினியிடம் உதவியாளராகவும் வேலை செஞ்சேன். பல நடிகைகள் கிட்ட மேக்கப் அசிஸ்டன்ட்டா வேலை செஞ்சது னாலயே எனக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இங்கிலீஷ், இந்தினு பல மொழிகள் சரளமா பேசத் தெரியும். எல்லாம் நல்லா போயிட்டு இருந்தது. எக்காரணம் கொண்டும் பிச்சையெடுக்கிற நிலை மைக்கு போயிடக்கூடாதுனு நான் நினைச்சுட்டு இருந்த நேரம் வாழ்க்கை சூறாவளியா மாறுச்சு” என்கிறவரின் வாழ்க் கையை புரட்டி போட்டிருக்கிறது சென்னையின் டிசம்பர் மாத வெள்ளம்.

‘‘என் மேக்கப் கிட் எல்லாமே தண்ணில போயிடுச்சு. வேலை இல்லாமல் பல நாள் பட்டினியா இருந்தப்பதான் நடிகை விசாலினி அக்கா கூப்பிட்டு மேக்கப் கிட் எல்லாம் வாங்கிக் கொடுத்து `தர்மதுரை' படத்துக்கு மேக்கப் அசிஸ்டன்ட்டா வொர்க் பண்ண அனுப்பினாங்க. ஸ்பாட்ல என்னை பார்த்த ‘சீனு ராமசாமி’ சார், ‘எப்போவும் சிரிச்ச முகமா இருக்கியேமா... உன்ன இனி சினேகானுதான் கூப்பிடுவேன்'னு சொன்னார். அதோட நிக்காம, `ஹீரோவோட நடிக்கிற ஒரு கேரக்டர் இருக்கு. நீதான் பண்ணப்போற'னு சார் சொன்னப்ப ஜோக் பண்றார்னு நினைச்சேன். `தர்மதுரை' படத்துக்கான என் மேக்கப் வேலை முடிஞ்சு சென்னைக்கு வந்த நாலாவது நாள், `குற்றாலத்துல ஷூட்டிங் போறோம், வந்திருங்க'னு யூனிட்ல இருந்து டிக்கெட் அனுப்பினாங்க. தான் சொன்ன வார்த்தையை நிரூபிச்சு திரைத்துறையில எனக்கான முதல் குத்துவிளக்கை சார்தான் ஏத்தி வெச்சார். படத்துல நான் பெண் காவலாளியா, திருநங்கையாவே வலம் வருவேன். குற்றாலம் போனதும், சீனு சார் கால்ல விழுந்துட்டேன். என் வாழ்க்கையில கடவுளே சீனு சார் ரூபத்துல நேர்ல வந்தமாதிரிதான் பாத்தேன். தென்காசி பஜார்ல ஷூட்டிங். கூட்டம் கூடிடுச்சு. முதல் ஷாட்ல விஜய் சேதுபதி அண்ணாவோட காம்பினேஷன்ல நடிக்கணும். பயத்துல சொதப்பிட்டேன். விஜய் சேதுபதி அண்ணாதான் என் பதற்றத்தை போக்கி ‘ஐ லவ் யூ தங்கச்சி'னு கட்டிப்பிடிச்சு என்னை நார்மலான மனுஷியா நினைக்க வெச்சு கூலா நடிக்க கைடு பண்ணினார். சீனு சார் பொறுமையா என் நடிப்பை வெளிக்கொண்டுவந்தார்” என்கிறவரின் வாழ்க்கையில் `தர்மதுரை' படம் வெளியான பிறகு மெள்ள மெள்ள சூரிய உதயமாகியிருக்கிறது.

‘‘அதுவரைக்கும் பேசாத என் ஃப்ரெண்ட்ஸ், என் குடும்பம், ஃபேஸ்புக்ல ஏகப்பட்ட ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட்னு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிச்சது. வாழ்க்கையை இழந்துட்டோம்னு நிறைய ஃபீல் பண்ணியிருக்கேன். அண்ண னுக்கு கல்யாணம் வரப்போகுதுனு வீட்ல கூப்பிட்டாங்க. சந்தோஷமா நிறைவா இருக்கு. என்னோட எதிர்கால கனவே சினிமாதானு ஆகிப்போச்சு. ஆனா, `மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கார்டு எடுக்க 2 லட்சம் வேணும். அதுவும் 26 வயசுக்குள்ள கார்டு எடுத்தாதான் சேர்த்துப்பாங்க. இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள நான் கார்டு எடுத்திர முடியுமானு தெரியல. இப்ப எனக்குக் கிடைச்சிருக்கிற சமூக அங்கீகாரம் தொடர்ந்து கிடைச்சு நானும் இந்த சமூகத்துல நல்ல நிலையில மதிக்கப்படணும். அதுக்கு கார்டு வாங்கணும். இதுதான் என்னோட ஒரே கவலை” என்கிறவர், அதைக்கூட சிரித்துக்கொண்டேதான் சொல்கிறார்.

உங்கள் கனவுகள் பலிக் கட்டும் ஜீவா சினேகா!

- பி.எஸ்.முத்து